திங்கள், 9 டிசம்பர், 2024

ஆனந்தக் கிருஷ்ணன் அகிலம் நீங்கிய துயர்

 மக்களைவிட் டகன்றார்மா  மன்னரவர் 

மலேசியச்சீர் ஆனந்தக் கிருஷ்ணனார்

தக்கபல  நாட்டினுக்கே இயற்றினவர்

தனிவணிக நன்முயற்றி வென்றவரே


தமரயலார்   யார்பலரும் வாழ்கவென்று

தரணியிலே ஒப்புரவைப் போற்றியவர்

நமைவிட்டே  நீங்கியமை பெருந்துயரே

நாமவர்க்கே நம்பணிகை கூப்புகிறோம்  


தக்கபல  -  தகுதியுடைய பலவற்றை.

இயற்றினவர் -  உண்டாக்கினவர்.

முயற்றி -  முயற்சி.

வென்றவர் - வெற்றிகொண்டவர்

தமரயலார் -  தமர் ஆயினும்  பிறர்  ஆயினும்

நம் பணி கை -  நாம் வணங்கும் கையால்.

பெரியோரை அவர்தம் உயர்வினை உன்னி 

எப்போதும் பணியும் "உணர்ந்த" கைகள்.

முயல்தி > முயற்றி.  ( பெயர்ச்சொல் ஆனது)

முயல் சி >  முயற்சி ( இதுவும் அங்கனமே  ஆனது)

பொருள் ஒன்று, விகுதிகள் வேறாயின.

கருத்துகள் இல்லை: