வியாழன், 19 டிசம்பர், 2024

தொடர்புடைய சொற்கள் ஓர் ஆய்வு

 படி என்றால் முன்னிருந்த படி இன்னொன்றில் படிந்திருப்பது.  ஆகவே நூலின் இன்னொரு பகர்ப்பினை  நூற்படி என்று சொல்கிறோம்.  இதை நூல்பிரதி என்றும் சொல்வதுண்டு.  ப்ரதி என்ற சொல் எவ்வாறு அமைந்தது?

படி என்ற சொல்லில் உள்ள பகரம்,  ப என்று வராமல் ப்ர என்று வந்தது.  அடுத்து உள்ள எழுத்து டி என்பது.  இது கொஞ்சம் வல்லொலி மிக்கிருந்தபடியால் இதை டி எனற்பாலதற்கு  தி என்று போட்டு,  ப்ர + தி என்றாக்கி,  தமிழில் இதை நாம் பிரதி என்று எழுதுகிறோம்.

ஒரு படி ( காப்பியிலிருந்து) இன்னொன்று பகர்த்துச் செய்யப்பட்டதை,  ஒன்றிலிருந்து இன்னொன்று பிறந்ததாகக் கருதி  "பிறதி" என்றும் அமைத்திருக்கலாம்.  ஆனால் வெறும் பகர்ப்பே ஆதலால் இன்னொரு பொருள் பிறந்துவிட்டதாகக் கருதுவது பிழை ஆகும். போலமைந்தது வேறு, பிறந்தது வேறு.  ஆகவே படி > பிரதி என்ற அமைப்பு,  சரியானதாகவே உள்ளது.

பகர்த்துதல் என்பது  "காப்பி"  செய்தல் என்பதே.

முன் பகர்ந்தபடியே மீண்டும் பகரச் செய்தல் - பகரச் செய்தல், இதுவே பகர்த்துதல், எனவே "காப்பி"  ஆயிற்று.

படி என்பது ப்ரதி ஆனது கண்டோம்.  இது போலவே,   ,மகம் என்பது  ம்ரு-கம் ஆனது.  இதை மிருகம் என்று எழுதுகிறோம்.  ஆகவே மக என்பதும் மிருக என்பதும் ஒன்றில் இன்னொன்று தோன்றி  ஒரு பொருளனவாயின.

மக என்றால் ஒன்றில் இன்னொன்று பிறத்தல்.   ஆகவே மகத்தில் தோன்றிய மிருகம் என்பது, பிறந்தது அல்லது பிறப்புடையது என்று பொருளாகும். ஆகவே மகம் என்ற நக்கத்திரம் ( நட்சத்திரம் )   இன்னொன்றிலிருந்து தோன்றியது என்று பொருள்படுகிறது. இஃது வானநூலார் அறிந்து கூறிய, அமைத்த சொல்.

இதுபோலவே,  கரு என்பது கிரு ஆனது.  கிருஷ்ண படசம் என்பது நிலவின் ஒளியின்மை என்று பொருள்தருவது.  கரு என்பது கருப்பு ஆகையால் கிரு என்பதும் கருப்புதான்.

இரு என்ற சொல்லும் கிரு என்றே திரிந்துள்ளது.  இருக்கு அகம் > இருக்ககம்> இருகம் ( குறைச்சொல்) (  இடைக்குறை)  >  கிருகம் ஆகி,  இருக்குமிடம் குறித்தது. இரு என்பதே கிரு என்று ஆகியுள்ளது.  கிரு> கிரகம் என்ற சொல், இருப்பிடம் என்பதே.  திசாபுத்தி நாதர்களைக் கிரகம் என்பது ஆகுபெயர்.  கிரகம் அல்லது கிருகம் என்பது இருப்பிடம் அல்லது வீடு. கிருகம் அல்லது கிரகம் என்பதை வேறு வகையிலும் விளக்கலாகும்.

பரமன் என்ற சொல் எங்கும் பர்ந்துள்ளவன் என்று பொருள் தரும்.  எங்குமுள்ளவன் கடவுள்.  பர என்பது பிர என்று திரிந்தது. இதனின்று பிரமன் என்ற சொல் அமைந்தது.

தொடர்பு பிறப்புச் சொற்களை அறிந்து போற்றுங்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: