வெள்ளி, 27 டிசம்பர், 2024

இராணி என்ற சொல்லுக்கு வாக்கியவிளக்கம்.

 தமிழ் உலகின் முதல்மொழி அல்லது தாய்மொழிகளில் மூத்தது  எனவும் பிறவழிகளிலும் தமிழைப் போற்றுவதால்,  எமக்கு சொந்தத்தில் ஒரு புண்ணியமும் இல்லை.  இங்கு யாம் புண்ணியம் என்று கூறுவது  பயன் என்ற வழக்குப் பொருண்மையில்:  அதாவது பயன்பாட்டில் புண்ணியம் என்ற சொல்லுக்குத் தரப்படும் பொருளில்தான். நம்மில் பலருக்கு நம் கொள்ளுத் தாத்தாவின் பெயரும் தெரியாது.  ஒருவேளை தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் வாழ்வோரில் பலருக்குத் தம் கொளளுத்தாத்தாவின் பெயர் தெரிந்திருக்கக் கூடும். நீ ண்ட காலத்துக்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இத்தகைய குலவரலாற்று அறிவு பெரும்பாலும் இருப்பதில்லை. சிலருக்குச் சற்று அதிகமாகத் தெரிந்திருக்கலாம். தேர்தலில் வாக்கு இடுவதற்கு காசு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளவர்களுக்கு ஏழ்மை மிகுந்திருப்பது மக்களாட்சி முறையையே ஒரு கேள்விக்குறி  ஆக்கிவிடுகிறது. இது வருந்தத் தக்கதுதான்.  ஏழ்மையினால் பொருள்பெற்றுத் தன் நிலையை மாற்றிக்கொள்பவன், தன் கடவுட்கொள்கை, பிறப்பினம் என்று எதையும் மாற்றிக்கொள்வான். 

தன் கருத்து எங்கோ  போய் எதையோ அல்லது யாரையோ இடிக்கிறது என்றால் ஒன்று அதை எதிர்த்து இடிக்காமல் செயல்புரியவேண்டும்;  அல்லது ஓடிவிடவேண்டும்; அல்லது நிறுத்திக்கொள்ளவேண்டும். Fight, Flight, Freeze. என்று  இதை ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  ஆனால் பிற சூழல்களும் உண்டு. அவற்றை இங்கு விவரிக்கவில்லை.


இனி இராணி என்ற சொல்லுக்கு வருவோம். பெண்ணானவள் தலைமை ஏற்றிருக்கும் போது அவள் இரண்டு ஆண்களுக்கும் ஒப்பானவள் என்று ஒரு பொருள் உண்டு.  இரு ஆண் இ என்று பிரித்துப் பாருங்கள்.  இரு ஆண்கள் இந்தப் பெண்ணுருவில் இங்கு இருக்கிறாள் என்று பொருள் கொள்ளலு மாகும். இச்சொல்லில் இரு என்பது இர் என்று தன் ஈற்று உகரம் குன்றும்.  இர் என்பதே அடிச்சொல்  ஆகும். இன்னோர்  ஆணுடன் பதவி ஏற்றிருப்பவள் என்றும் பொருள் கூறலாம்.  அப்போது இரு = இருப்பவள்  ஆண் -= ஆண்மகன்; இ அருகில் இருக்க. இது பிறழ் அமைப்பு ஆகும்.

இச்சொல்லை  அரண் > அரணி,  ராணி என்று அரணை உடையவள் என்று பிரித்து முன் விளக்கியுள்ளோம். அரசன் அப்போது ராணா எனப்படுவான். ராணா எனில் அரண்> அரணன்> அரணா> ராணா  > ராணி. (பெண்பாற் பெயர்)

அறிக மகிழ்க,

மெய்ப்பு பின்

மெய்ப்பு > 09122024 0504
(சில திருத்தங்கள்)


கருத்துகள் இல்லை: