சன்னலுக்குக் காலதர் என்றொரு சொல்லும் உள்ளது. கால் என்பது காற்று என்பதன் அடிச்சொல். வந்தக்கால், சொன்னக்கால் என்று வரும் பதப்பயன்பாடுகளில் வந்த போது, சொன்னபோது என்று பொருள்தந்து, இச்சொல் காலத்தையே குறித்தது காண்க. காற்று என்பது கால்+து என்ற இரண்டின் புணர்ப்பு ஆகும். ஆகவே காலதர் என்பது வீட்டுக்குள் காற்று வரும் வழி என்று பொருள்தரவே, சன்னல் அல்லது சாளரம் என்று பொருள்பட்டது.
சன்னல் பற்றிய முந்தைய இடுகையை இங்குக் காணலாம்:
https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_95.html
சாளரம், மற்றும் சாரளம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அது இங்கு உள்ளது.
https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_29.html
இவை கொஞ்சம் விளக்கமாகவே எழுதப்பட்டுள.
பலகணி என்ற சொல்:
https://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_12.html
பண்டைக்காலத்தில் வீட்டுக்குச் சன்னல் அமைப்பதென்பது, முதன்முதல் பெரிதும் பின்பற்றப்படவில்லை. கதவு ஒன்றிரண்டு போதுமென்று நினைத்தனர். ஆனால் கதவைத் திறக்காமல் சாத்திவைத்துக்கொண்டு காற்றுவரவு வசதியைப் பெறவும் வெளியில் நடப்பதை அறியவும் சன்னல் இருப்பது அவசியம் என்பது பின் உணரப்பட்டு, அவை அமைக்கப்பட்டன. சன்னல் என்றால் சுவர் இல்லாத இடன் என்பது நீங்கள் அறிந்ததே. இதே பொருளைச் சன்னல் என்பதிலும் கண்டறியலாம்.
தன் + அல் > சன்+ அல் > சன்னல்.
தன் என்பது சுவரைக் குறிக்கும் பதிற்பெயர்.
சுவரில்லாத இடம் என்று இதற்குப் பொருள்.
சுவர் என்பது சு - சுற்றி, வர் - வருவதாகிய அடைப்பு என்று பொருள்படும் என்பது முன்னர் விளக்கப்பட்டது. சுவறு என்பது தவறு. வறு என்பது வறுத்தல் என்று பொருள்தரும் சொல். சுவர் என்பதே சரி.
பெயரிடக் கடினமாகிய இவற்றை நல்லபடி தமிழ்வாணர் சமாளித்துள்ளனர்.
Window என்பதில் டவ் என்பது கண் என்று பொருள்படும் என்று மேலை ஆய்வாளர்கள் கூறுவர். auga - eye. Old Norse. eagduru = eyedoor. Frisian andern என்பதும் ஒப்பிடப்படும். அப்படியானால் அது பலகணி என்ற சொல் போன்றது என்பது காண்க.
அறிக மகிழ்க.
மெய்ப்பு : பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக