நம் எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்தவர்கள் ஒரு திருமணத்தில் ஒன்று கூடினால் மகிழ்ச்சி அனைவர் மனத்திலும்.
புனைந்த கவிதை படித்து மகிழ்ந்தனர்
இணைந்த போது மணவிழ வொன்றினில்
அணைந்த படகினர் அடைந்த மகிழ்வென
நினைந்து மீண்டும் கவிதனைச் சூழ்ந்தனர்.
ஒரு கவிதை வடித்தோன்பால் அவன் கவிதையைப் படித்ததும் மகிழ்வு பிறக்கிறது. அதன் பின் படித்தோர் எல்லாம் ய படகுப் பயணம் போல் தம் வாழ்க்கையில் சென்றுகொண்டிருப்பர். அப்புறம் கவிஞனை ஒரு மணவிழாவில் சந்திக்கிற வாய்ப்பு நேர்கையில் இன்னொரு மகிழ்வு தோன்றுகிறது. அந்த இரண்டாம் மகிழ்வை இந்தப் படத்தில் உள்ள சுவைஞர்கள் காட்டி மகிழ்கின்றனர். அவர்களுக்கு நம் பணிவும் அன்பும் உரித்தாகுகின்றன.
இந்தக் கவிதையை அவர்களுக்குப் படைக்கிறோம். இதன் பின் எதிர்கொண்ட ஓர் அம்மையாரும் எம் கவிதையைப் படித்ததைச் சொல்லி மகிழ்ந்தார். அவருக்கும் நன்றி நவில்கின்றோம்.
கவி -- கவிஞன்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக