யான்மியா என்றாலோ
தான்மியா எனப்பாடும்,
நானென்ன பேசினேனோ
யானும் சொல்வதில்லை!
அதுவென்ன சொன்னதென்று
அதுதனக்கே வெளிச்சமாகும்.
நிகழ்ச்சிநிரல் இல்லாத
மகிழ்ச்சிப் பெருவெள்ளம்,
சிலநாட்கள் தலைகுனிந்து
கண்மூடி அமர்ந்துபின்னே,
சட்டென்று விட்டதுயிர்;
பரமபதம் அழைத்ததோ?
பாருக்குள்தான் நிலைத்ததோ?
மீந்திருந்த உடலைகொண்டு
மின் தகனம் செய்தோமே,
அம்மா மறைந்தபின்னே
இதுவும் மறைந்ததையோ!
மியாமியா என்று ஒலிக்க
வீட்டில் ஏதுமில்லை.
அமைதியே மிஞ்சியது.
என்செய்வோம் நாம் இனி?
இது கவனிப்பாரற்று இருந்தது. காப்பகத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து கவனித்து வளர்த்தோம். இப்போது பிரிந்து சென்றுவிட்டது. பிரியாவிடை கொடுத்துவிட்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக