நித்தத்துவம் என்ற கடினமானதாகத் தோன்றும் சொல் காண்போம்.
நில் > (இது கடைக்குறைந்து ) : நி,
தன் து ( தனது) > த + து > தத்து .
இரண்டையும் சேர்க்க நித்தத்து என்று வரும்.
அம் - அமைதல் என்பதன் முனைப்பகுதி. இங்கு விகுதியாய் வருகிறது.
நி + த +து + அம் > நித்தத்துவம்.
என்றுமுள்ளது, மாறாதது.
தன்மை என்ற சொல்லை ஒட்டிப் படைக்கப்பட்ட சொல்தான் தத்துவம். அம் விகுதி பெற்றுள்ளது.
தன் > தனம் ( தன் + அம்) >[ தன்னைத் தான் சார்ந்து எழுவது தனம் ( தனதாய் நிற்கும் பண்பு) அல்லது தத்துவம் ] எ-டு: கோமாளித்தனம்.
தன் பொருட்கள் என்று வரும் தனம் (தன்னவை) என்பது வேறு சொல். தன்னுடன் அமைந்த பொருட்கள்.
தன் - த , கடைக்குறை.
து என்பது அஃறிணை ஒன்றன்பால், விகுதி. உடைமையும் குறிக்கும்.
மலைக்கும் அழகமர்ந்து சொல் அமைந்தது.
இது ஒரு புனைவுச்சொல்.
மனிதன் தன்மகிழ்ச்சிக்கு வேண்டிய சொற்களைப் படைத்துக்கொள்வது இயல்பு.. எக்கலைச் சார்பிலும் வரும். ஒரே அடியிலிருந்து எழுந்தபோதும் வழக்கில் வெவ்வேறு பொருளைப் பெறுவன பல.
அடிச்சொற்களும் விகுதிகள் மற்றும் இடைநிலைகளும் விடுபடாமல் சொல் புனையப்படவேண்டுமாயின் தன்றுவம் என்றுவரும். இதன் ஒலிப்பைப் பாராட்ட இயல்வில்லை. நாம் தத்துவம் என்ற சொல்லுடன் பழகிவிட்டதனால் இப்படி உணர்கிறோம் எனல் உண்மையாகலாம். ஆனால் திட்டமாகச் சொல்லஇயலவில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக