அணம் என்ற தொழிற்பெயர் விகுதி தமிழில் பல சொற்களில் வருகிறது.
அவற்றுள் சிலவற்றைச் சிந்திப்போம். வினை அல்லாதனவும் இவ்விகுதி பெறுதல் உ ண்டு. இவ்விகுதி பெற்ற சொற்கள் சில பிற மொழிகளிலும் சென்று ஆட்சி பெற்றுள்ளன.
ப ட்டணம்
ஆரணம்
கட்டணம்
ஏரணம்
காரணம்
(சாரணம்)> சாரணர்
தோரணம்
வாரணம்
என்று அவை பலவாம்.
இங்கு அணம் என்ற விகுதியைமட்டும் ஆய்வு செய்வோம்.
அ என்பது சுட்டு. இச்சுட்டு அந்த அது , எனல் தொடக்கத்துப் பலவற்றின் மூலம்.
அ > அண்.
அண் என்ற அடிச்சொல் அடுத்திருத்தலையும் குறிக்கும்
அண் > அண்முதல். அண்மித்தல்.
அண் > அண்டை.
அண் > அண்மை.
அண்> அணிமை.
அண்> அணை.
அண் > அணைத்தல்.
அண் > அணை> அணைக்கட்டு.
அண் > அணி > அணிதல்.
உடலை அடுத்து நிற்பது ஒருவன் ஆடையும் அணிகலன்களுமே.
சேலை முதலியன உடலை அணைத்துக்கொண்டு நிற்பன. சேலை இடையையும் கால்களையும் அணைத்து நிற்பது. = > >
கருவி > செய்தற்கு உதவும் பொருள்.
கரு செய்தற்கருத்து உள்ள பழஞ்சொல்.
கரு+ அணம் = கார்+ அணம் = காரணம்.1
கரு+ இயம் > கார்+இயம் = காரியம்.
வருமொழி முதல் உயிர்வர கரு கார் ஆனது.
செயலை அடுத்து நிற்பது அதன் காரணமே.
அணம் - அடுத்தற்கருத்து உள்ளமை காண்க.
அண்+ அம் = அணம்.
இங்ஙனம் அமைந்த்ததுவே அணம் விகுதி.
--------------------------------------------------------------------------------------
1. Expounded by Dr G Devaneyap Pavanar.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக