அட்டணம் இச்சொல் தமிழில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை, சங்கதத்தில் இது போர்க் கருவிகளைக் குறிக்கிறது.
அடு+ அணம் = அட்டணம் ஆகும்,
அடுதல் - பல பொருள் உள்ள சொல். சமைத்தல், நெருப்பில் இட்டுச் சூடேற்றுதல் என்பவை மட்டுமின்றி, எதிரியை வெல்லுதலும், வருத்துதலும் இதன் பொருள்.
போர்த் தளவாடங்கள் வெல்லவும் வருத்தவும் உதவும் கருவிகள் ஆதலின் அட்டணம் இப்பொருளைப் பெற்றது.
அடுதல் வினைச்சொல். அணம் என்பது தொழிற்பெயர் விகுதி
அடுதல் என்ற வினை முதனிலை நீண்டு ஆடு என்று தொழிற்பெயராகும்
தளவாடம் :.
தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் கருவிகள் அல்லது பொருட்களுக்கு "தளவாடம் " என்பர்.
தளம் + ஆடு+ அம் > தளவாடம் . வகர உடம்படுமெய் பெற்ற சொல். முதலில் போர்க்கருவிகள் என்று பொருள்தந்த இத்தொடர், இப்போது பொதுப்பொருளில் "உதவும் பொருட்கள் " என்று பொருள் விரிவு கண்டுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக