சனி, 12 செப்டம்பர், 2015

ஜீரணம்

செரிமானம் என்ற சொல் பற்றி முன் யாம் எழுதியதுண்டு.  ஆனால் அதை இப்போது  மறுபார்வை செய்துகொள்ளவில்ல்லை.  இங்கோ அல்லது ஏதேனும் வலைத்தளத்திலோ அது காணப்படலாம்.  புதிய இடுகை  அதே சொல்பற்றி வெளிவந்தவுடன்,  யாம் முன்னாளில் எழுதியதை எமக்கு அனுப்பி உதவியவர்களும் உளர்.


உண்ட பின்பு   குடலிற் சென்று  உடலால்   ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் பசி வந்தால் முன் உண்டது செரித்துவிட்டது என்று பொருள்.  இதைச் செரிமானம் ஆகிவிட்டது என்பதும் உள்ளது .

இப்போது  இதை "ஜீரணம்"  என்பதுமுண்டு.    இதற்கு எதிர்ச்சொல் 'அஜீரணம் "என்பது.  இதுவும் வழக்கில் உண்டு

கற்றோரிடை  digest  என்றும் ஆங்கிலச்சொல் பயன்படுத்தப்படுகிறது;  அதுவே  "நாகரிகம்"  என்பாருமுண்டு. (Usage of people who are "civilised"  or  "townified".)

செரி  என்பதுடன்  "அணம்"  என்னும் விகுதியை இணைத்தால்,  "செ "
  நீண்டு விடுகிறது.  நீண்டு  "சேரணம் "  ஆகும்.  

அணம் என்ற விகுதியை  "கட்டணம்" என்ற சொல்லில் காணலாம். பல அணம்  விகுதிபெற்ற  சொற்கள் உள்ளன.

முதலெழுத்து நீண்டு பெயர்ச்சொல் ஆவதை  (சுடு) > சூடு  என்பதில்  காண்க.

சேரணம்  பின்  ஜீரணம் என்று மாற்றப்பட்டது.

இது ஜீரணம் சொல் அமைந்த கதை.

edited   1732 hrs  129.2015

Note:

Some intermediate  word forms have been lost in the language.

ஜீரணம்  is  a good example.  The intermediate form  "சேரணம்"   has been lost.

You may compare  this phenomenon with another word   :  பேசு  >  பேசை  >  பாசை   (மொழி ).    மற்ற வடிவங்கள்:  பாழை,  பாடை  பாஷை .
துவிபாஷி  >  துப்பாஷி   interpreter 


கருத்துகள் இல்லை: