திங்கள், 28 செப்டம்பர், 2015

அந்தஸ்து

இன்று  அந்தஸ்து என்ற சொல்லைச் சற்று பார்ப்போம்.

இது தமிழ் நூல்களில் செய்யுளில் அந்தத்து  என்றும் வந்துள்ளது/

பல தமிழ்ச் சொற்களில் வட ஒலிகள் புகுந்துள்ளன என்பதை முன் இடுகைகளில் விளக்கியுள்ளோம்.  காட்டாக  குட்டம் என்ற சொல்  குஷ்டம் என்று மாறியதைக் குறிப்பிடலாம்  (see notes 2 below)/

வட ஒலிகளுக்குரிய எழுத்துக்கள் வரின் அவற்றை விலக்கவேண்டும் என்பது செய்யுளீட்டத்து விதியாகும் . " வடவெழுத்து  ஒரீஇ"  (தொல் )   என்பது  நீஙகள்  அறிந்தது ஆகும். வடவெழுத்து  விலக்கி ச்  சொல்லைப் பயன்படுத்துக " என்பது பொருள் .  அதன் காரணமாக  "ஸ் "  நீக்கப்பட்டு   "அந்தத்து" என்று வந்திருக்கலாம் ,அன்றி  முந்துவடிவமே  அந்தத்து என்பதாகவும் இருந்திருக்கலாம்,
  
(வட ஒலிக்குரிய ஆனால் அதற்குத் தமிழர் அமைத்த   எழுத்து   " வடவெழுத்து"      எனப்பட்டது.   தேவ நாகரியைக் குறிப்பிடவில்லை)  . 

  எதுவாயினும்  ஆய்வு  தொடர்வோம்

இச்சொல்லில்  முன் நிற்கும் சொல்  அம்  என்பதாகும்    இது அழகு என்று பொருள் படும் .  அம்மை  அழகு .

இனி  தத்து அல்லது தஸ்து   (see notes,  1 below).

வரு என்பது வரத்து என்று  பெயரானது.   நீர் வரத்து போக்குவரத்து என்று வருவன காண்க.

அதுபோல தகு > தகத்து எனவரும்.  அப்படியென்றால் தகுதியானது  என்று பொருள்.

மேலும் தகதக என்பதும் ஒளிவீசுதற் குறிப்பு ஆகும்.

ஆகவே அம் தகத்து எனின்  அழகிய தகுதி யுடையது, அல்லது ஒளி வீசுவது என்று ஆகும்.

தகத்து என்பது இடைக்குறைந்து தத்து ஆகும்.  அகரத்துக்கு அடுத்த ககரம் குறைவது பெரும்பான்மை,

அகங்கை என்பது அங்கை ஆகிறதல்லவா? 

த என்பதில் ஈற்றில் அகரம்.  அதுவர ககரம் மறைவு எய்தியது.

எனவே அந்தகத்து  அந்தத்து  ஆனது.

இது பின் அந்தஸ்து என்று திரிந்ததில் வியப்பில்லை.




-------------------------------------------------------------------------------------------------------------
notes:  


1     தகு   >  தகம்   >    தகத்து 
See also examples given by Tamil Lexicon:  அது ஒரு தகத்தான இடம் .    அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது?      தகத்து,  இங்கு பெருமை.

தகப்படு-தல் taka-p-paṭu-
, v. intr. < தகு- +. To be eminent, distinguished; மேன்மைதங்குதல். தகப்படுஞ் சராசனத் தனஞ்சயன் (பாரத. வாரணா. 80).


2  உயர்த்தி >  உசத்தி  > ஒசத்தி  >  ஒஸ்தி 

பிற திராவிட  மொழிகளிலும் இப்போக்குக்  காணப்படுகிறது.  

3   இவ்விடுகையையும் வாசிக்கவும்.    தழு என்ற சொல்லினை அடியாகக் கொண்டு இங்கு விளக்கப்பட்டுள்ளது.    தழு என்பதும் தகு என்பதற்கு  ஈடானதே     ஆகும்.      எடுத்துக்காட்டு:     தொகுதி =  தொழுதி.


http://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_22.html 



will edit

கருத்துகள் இல்லை: