வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வள்ளுவரின் காலம்

வள்ளுவரின் காலம் யாது  என்ற ஆய்வு இன்னும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.  மணிமேகலைக் காப்பியத்தில் வள்ளுவரின் குறள் மேற்கோளாகக் காட்டப்பெற்றிருப்பதனால் திருக்குறள் நூல் மணிமேகலை  சிலப்பதிகாரம் முதலியவற்றுக்கு  முந்தியது என்று அறிஞர் முடிவு செய்தது சரிதான் , கண்ணகிக்குச் சிலை வைத்தபோது சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் பல கனவான்கள் கலந்துகொண்டனர்.  அவருள் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும்  இருந்தான்.  அவன் காலத்தை வைத்து வள்ளுவர் ஏறத்தாழ  ஈராயிரம் ஆண்டுகட்கு முந்தியவர் என்று அறிஞர் சிலர் முடிவுக்கு வந்தனர் 

ஆனால் இது சிலருக்கு மன நிறைவு அளிக்கவில்லை.  திருவள்ளுவருக்கு இரண்டாயிரம்  ஆண்டுகளா?  வேறு மொழிச் சார்பினருக்கு இதை மறு ஆய்வு செய்யத் தோன்றியது.  இலங்கையில் கயவாகு என்ற பெயருடன் ஒன்றுக்கு மேற்பட்ட  அரசர்கள் இருந்திருப்பதால்  அதில் கடைசியானவரை  எடுத்துக்கொண்டு வள்ளுவரை   ஆயிரம் ஆண்டுகள்   பின்தள்ளினர் .

இதில் குற்றம் ஏதும் இல்லை . ஆனால் தமிழ் இலக்கியத்தை முழுமையாக நோக்கும்போது பொருத்தமாக இல்லை


பேராசிரியர்  வையாபுரிப்பிள்ளை   , வள்ளுவர்   காலத்தைக் கண்டுபிடிக்கப்  புதிய  வழியொன்றை  மேற்கொண்டார்.  திருக்குறளில்  வந்துள்ள வடசொற்களாகக்  கருதப்பட்டவைகளை  எடுத்துக்காட்டி,  "ஆகவே   வடசொற்கள்  மலிந்துவிட்ட பிற்காலத்தவர்  வள்ளுவர் "   என்ற முடிவுக்கு வந்தார்.  அவர் சங்க காலத்தவர்  அல்லர் என்றும்  சொன்னார்.

முதற்குறளிலேயே வடசொற்றொடர் என்றார்.

ஆதி என்பது   ஆதல்  என்ற வினையடியாகப் பிறந்த சொல்.  ஆக்க காலம் என்று பொருள்.

பகவன் என்பதோ,  பகு > பகவு என்று அமைந்த  சொல்லின்  மேல் அன் என்னும் ஆண்பால் விகுதி ஏறிய சொல்.   பகவான் என்பது வேறு.

  

கருத்துகள் இல்லை: