தமிழில் பின்னால்
கொண்டு ஒட்டப்பெறும் விகுதிகள்
அல்லது பின்னொட்டுக்களே
மிகுதி என்பது உங்கட்குத்
தெரிந்ததே.
தமிழிலும்
முன்னொட்டுக்கள் உள்ளன எனினும்
அவை
மிகக்
குறைவே.
ஏனைப் பிற்கால
மொழிகளில் அவை பல்கிப் பெருகின.
முன்னொட்டுக்கள் பிற்காலப் புனைவுகள் என்று
கொள்வதே சரியென்று தெரிகிறது.
கிராமம்
என்ற சொல்,
சிற்றூர் என்று
பொருள்படுவது.
சிறிய ஊரைக்
குறிப்பதற்குத் தமிழில் பல
சொற்கள் உள. ( ஊர்ப் பெயர்களை
ஆராய்ந்தால் இது புரியும்.) அவ்வசதி இல்லாத அல்லது குறைந்த மொழியில் அதனை ஏற்படுத்தவே
வேண்டும்.
எப்படி?
“குறு”
என்பது குறுமை அல்லது சிறியது
எபதைக் குறிக்கும் சொல். இதை இன்னும் குறுக்கி.
கு-
என்று வைத்துன்க்கொள்ளுங்கள் .
கு + கிராமம் >
குக்கிராமம்.
இதில் கு
என்பது தமிழ்;
கிராமம் என்பது
அயல்.
அல் என்பது
"அல்லாதது"
என்று பொருள் படும்.
அல்ல,
அன்று,
அல்லன்,
அல்லள்,
அல்லை என்ற பல இதை
அடியாகக் கொண்டவை.
இது:
அல் +திணை
= அஃறிணை;
அல் +
வழி =
அல்வழி.
என்று
முன்னொட்டாக நின்றது.
இது லகர
ஒற்றை இழந்து பின் "அ"
என்று மட்டும்
நின்றது.
அந்த நிலையில்:
அ+
நியாயம் =
அநியாயம்;
அ+
க்ரமம் =
அக்கிரமம்;
அ+
நீதி =
அநீதி.
எனப் பல
சொற்களில் முன்சேரும்.
அது முன்னொட்டாகி
விட்டது.
unforeseen என்பதில் அது இல்லையா? அல் > un
அல் என்ற
தமிழ்ச்சொல் உலகிற் பல மொழிகளில்
சென்று சேர்ந்துள்ளது.
இந்தோ
ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினரே
இதை முழு மூச்சாகப் பலவேறு
வகைகளில் கடன்கொண்டனர்
=====================================================================
for authorls use
note vivaram
re-edited after the appearance of certain errors not in the original.
re-edited after the appearance of certain errors not in the original.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக