வெள்ளி, 29 மே, 2015

இது என்ன குழப்படி

இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே  நேரம்  தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்

http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301



மண்டை  குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்

இப்பாடலின் பொருள்: 

மசியாத  வாசிப்பால்  -    வாசித்துப் பொருள் விளங்காமையினால் ; 
மண்டை குழம்ப  -   ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு   அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் -   வாசித்து  முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு --  அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம்  -  அப்பொருள் அறிந்தமையினால்  அஃது இனிமை  உடையதாகும் ;
பண்டு  போருட்கல்வி பற்றினார்  -  முன்பே  பொருளியலைப் பயின்றவர்  ;
பார்த்து உரைத்தால் -   இக்கட்டுரையைப் படித்து  நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு  செரித்தாராய்  நாம் ---  உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம்  நாம்.
என்றபடி. 







வியாழன், 28 மே, 2015

vil, villA and village.

வில்லேஜ் என்ற ஆங்கிலச் சொல்  எப்படி ஏற்பட்டது என்பதை அறிஞர்கள் கூறுவதிலிருந்து  அறிந்துள்ளோம்.

villaticus "   (having to do with a farmstead or villa," from villa "country house" )   என்ற  இலத்தீன் மொழிச்சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுவர்.

வில்லா என்பது பெரும்பாலும் ஒரு  குன்றுபோலும் மேடான பகுதியில்  வளைவாகக் கட்டப்பட்டது,  இதன் நடுப்பகுதி உள்வளைவாகவும்
கடைக்கோடிகள்  பிறைபோலும் வடிவிலும் கட்டப்பட்டதாகத் தெரிகிகிறது.இதனைக் கவிழ்பிறைக் கோட்டினால் காட்டுதல் கூடுமென்று  நினைக்கின்றேன்.

வில்லா என்பது தமிழின் வில் என்ற சொல்லினின்று வருவது என்று  இலங்கை  கலாநிதி    (Dr) பரமு புட்பரத்தினம்  ஆய்ந்து கூறுகிறார்.   இங்கு வில்லா என்றது உரோமன் வில்லாவைக் குறிக்கும்.

இதிலிருந்து ஆங்கில "வில்லேஜ்" வந்ததென்பர்.    

வில்லா வளைவாகக் கட்டப்பெற்றது, படையெடுப்பு தாக்குதல் முதலியவற்றை நோக்கியே. '
 பாதுகாப்புதான்  முன்மைக் காரணமாய் இருந்துள்ளது.


notes:

வளை >  வளாகம் ;  வளை = வளைவு .  ஆய்வுக்குரியது.

villaticus "having to do with a farmstead or villa," from villa "country house"   Etymological dictionary.

செவ்வாய், 26 மே, 2015

எழுத்தில் வரும் விலங்கு.

Ref:

http://sivamaalaa.blogspot.sg/2015/05/handcuffs.html


விலங்கு என்பது வளைவு குறித்தது என்பது முன் இடுகையில் விளக்கப்பட்டது.கைவிலங்கு,ஒரு வளைவான பொருள். இது உருவினால் வந்த பெயர்.

இப்போது  "கி"என்ற எழுத்தைப் பாருங்கள்.  க-விலிருந்து கி-யை வேறு படுத்திக் காட்ட  மேல் ஒரு வளை கோடு இடப்பட்டது. இந்த வளை கோட்டுக்கு "மேல் விலங்கு"  என்பர்.   அதேபோல் "கு" என்ற எழுத்துக்கு கீழ் வளை கோடு உள்ளது.  அதற்குக் கீழ்விலங்கு உள்ளது.

ககரத்தினின்று விலக்கி  கிகரம், குகரம் முதலிய உணர்த்துதலால்  விலங்கு  என்றனர் எனினும்  ஆகும்.  

திங்கள், 25 மே, 2015

விலங்கு என்ற சொல் handcuffs

.பொதுவாகக் காவல் துறையினர் குற்றாவாளியின் முன் கைக்குழைச்சில் அல்லது கணுக்கையில் இடும் வளையக்கைப்பூட்டுக்கு "விலங்கு" மாட்டுதல் என்று சொல்வர்.

இந்த "விலங்கு" என்பது  மிருகம் என்றும்  பொருள் படும். அதைப்பற்றி இங்கு பேசவில்லை.

விலங்கு என்ற சொல் வில் என்பதிலிருந்து வருகிறது.  வில் என்பது வளைவு உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே. விலங்கு என்பதும் வளைவு என்ற கருத்தினடிப்படையில்  ஏற்பட்டு வளையம்போல் கைகளில் பூட்டப்படுவதனால் ஏற்பட்ட சொல்தான்.
 வில்+கு = விலங்கு ஆனது.   இச்சொல் இடையில் ஓர்  அம்  என்ற சொல்லைப் பெற்றுள்ளது, இது சொல்லாக்கத்திற்குப் பயன்படும் ஓர் இணைப்புச்சொல் ஆகும்.  இதை இப்படியும் காட்டலாம்:

வில் > ( விலம் )>  விலங்கு..   விலம் என்பது இங்கு சொல்லாக்கத்தில் ஓர்  இடைத்தோற்ற வடிவம் ஆகும்.  கருப்பைக் குழந்தை போலும் தோற்றம்,

நேராகச் சென்றால்  தடை அல்லது முட்டு நிலை ஏற்படும்போது நாம் சற்றே  விலகிச் செல்வோ,ம்.  விலகிச் செல்வதை மாறிச் செல்வது என்று மலையாள மொழியில்  சொல்வர்.  நேர் கோட்டில் செல்வோன் ஒருவன் முட்டு நேராதபடி சற்று வ:ளைந்துதான் போகவேண்டும். இந்த விலகு என்ற சொல்லில் வளைவுக் கருத்து அடங்கி இருப்பதை இப்போது நன்கு அறிந்து கொள்ளலாம்.

வில் + கு:>  விலகு .  இங்கு சொல்லாக்க இடைச்சொல்லாக ஓர் அகரம் தோன்றியுள்ளமை அறியலாம்.   கு என்பது  வினைச்சொல் ஆக்கத்துக்குரிய விகுதி ஆகும். மூழ் >  மூழ்கு  என்பதனுடன் ஒப்பிடுக 

அடுத்து வில்லேஜ் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஞாயிறு, 24 மே, 2015

chuuriya aaRRal

உலகின் பாதியைச் சுட்டெரிப்  பதுபோல்
பலநா    டுகளிலும் தாங்கொணா வெப்பம்

வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள்  இவனுக்குக் கிட்டும்;

ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ

ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/

தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே

புதன், 20 மே, 2015

போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே குறுவஞ்சி

குறுவஞ்சி என்பது புறப்பொருளில் ஒரு துறை ஆகும். இது வஞ்சித் திணையில் வரும்.

போருக்குச் செல்பவன் வஞ்சி மன்னன். வஞ்சி மாலையைத் தலையில் மலைந்துகொண்டு புறப்படுவான்.  கூடார்தம் மண்ணினைக் கொள்வேன் என்று முழங்கிக்கொண்டு செல்வோன். கூடார் எனில் பகைவர். அப்படிப் புறப்பட்டு வந்த மன்னனுடன் போர் செய்யப் பின்வாங்கியவனாய், அவனுக்குக் கப்பம் கட்டித் தன் மண்ணையும் குடிகளையும் காத்துக்கொள்ளுதலே  குறுவஞ்சி என்ற துறை. இப்படிப் பணிந்துபோய்த் திறைசெலுத்தியதைப் பாடும் பாடலை, வஞ்சித்திணை, குறுவஞ்சித் துறை என்று பகுத்துரைப்பர்.

விலை யுயர்ந்த யானைகள்,  அழகிய குதிரைகள் என்று தன்பால் உள்ள ஏற்கத்தக்க   எப்பொருளையும் முன்வைக்கலாம்.   வணங்கி இறைஞ்சலாம்.

வீரம் பேசிப் பலரைக் கொல்வதினும் இது நல்லதென்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மன்னர்கள் இதனை விரும்பியதாகத் தெரியவில்லை.

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று

என்பது கொளு.

கனல் கக்கும் போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே "குறு" என்ற அடைமொழி.

குறுவஞ்சி வேறு;   குறவஞ்சி வேறு.


திங்கள், 18 மே, 2015

thiAvuthal திராவுதல்

மடைப்பள்ளியில்  ஒருவர் மற்றவரிடம், "குழம்பைக்  கொஞ்சம் "திராவி"  விடு  என்றார்.  எனவே  எனக்குத் தெரியாத இந்தச் சொல்லை அகரவரிசைகளில் தேடினேன். திராவுதல் என்ற வினைச் சொல் கிடைக்கவில்லை.

இன்றைய நிலையில்,  அகரவரிசை என்பவை பெரும்பாலும்  பகர்ப்புகளே .(copies)  நிகண்டுகளிலோ முன் வெளியிடப் பட்ட அகரவரிசைகளிலோ இடம்பெறாத புதியவாகக் கேட்ட  சொற்களைத்  தேடிப் பிடித்துச்   சேர்ப்பது  அரிதேயாம்.

இப்போது வெளிவந்துள்ளவற்றில் இங்ஙனம் கண்டெடுத்துச் சேர்க்கப் பட்டனவாகக்  குறிக்கப்பட்ட சொற்கள்  எவற்றையும் காண முடியவில்லை.

வட்டாரப் பேச்சுகளில் திரிந்து வழங்கும்  சொற்களைச்  சில கல்லூரி ஆசிரியர்கள் திரட்டிப் பதிப்பித்துள்ளனர்.  இவற்றைக் கிளைமொழிச் சொற்கள் என்றனர். இத்திறத்தன சீரிய முயற்சிகளென்போம்.

திராவுதல் என்பது அகப்பையினால் குழம்பையோ அல்லது வேறு கீரைச்சாறு போன்றவற்றையோ சுற்றிக் கிண்டிவிடுதல் என்று தெரிகிறது.
திருப்பு,  திருகு,  திறம்பு, என்பவற்றுடன் இச்சொல் தொடர்பு பட்டதாகவே தோன்றுவதாலும், வேறுபாடு நுண்ணிதாகவே திகழ்வதாலும், இச்சொல் இருந்தது,   ஆனால்  அகராதிகளில் அகப்படாமல்  போயிற்று என்று முடித்தலே பொருத்தம் உடையதாம்.


சனி, 16 மே, 2015

கத்தரிக்கோல்

ஒரு துணியையோ அல்லது வேறுபொருளையோ  கடித்து,  வேறு உருவோ அளவோ கொள்ளும்படி செய்வதற்குக் கத்திரிக்கோல் உதவுகிறது,   இரு வெட்டுக் கோல்கள்  ஒரு தலை இணைப்பைப் பெற்று கைவிரல்களுக்குள்  மாட்டுதல் பெற்று வெட்டும் பொருளைக் கடித்தல் போல் வெட்டுவது கத்திரிக்கோல் ஆகும்,  ஆங்கிலத்தில் "a pair of scissors"   -  வெட்டு இணைகோல்கள் எனப்படும் இது  தமிழில் கத்திரிக்கோல் என்று ஒருமையில் சொல்லப்படுவது ஆகும்.

கடித்து  உருவை அல்லது அளவைத் திரிப்பதால் அதாவது மாற்றுவதால் அது கடித்திரி ஆயிற்று  பின் அது  நடுவில் உள்ள  "டி"யை இழந்து  கத்திரி ஆனது

கடித்தல் என்பது வெட்டுதல் குறிக்கும் என்றார் அறிஞர்  கால்டுவெல்..   இது கத்திரி எனப்பட்டது  ஓர் இடைக்குறை , கத்திரி -  கத்தரி . --- கத்தரிக்கோல்

சப்பாத்து கடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக

கடித்து அரி  என்பது கடித்தரி >  கத்தரி  என்றாயதெனினும் ஏற்புடைத்தே.
இந்த  "அரி "  என்னும் சொல் அரிவாள்  என்ற பதத்தில் உள்ள "அரி "  என்பதுதான் .  கடிப்பதும் வெட்டுவதுதான்.  பின் அரிதல் என்பதும் வெட்டுவதுதான்;   இஃது கூறியது கூறலாகாதோ எனின் , ஆகாது;  வெட்டுவது  ஒன்றிரண்டாய் வெட்டுதல் என்றும்  அரிதல் எனற்பாலது மிகச் சிறியனவாய் நுணுக்கித்  துணித்தல் என்றும் வேறுபடுத்திக் கொளலாகும்.  இதிற் பொருளமைதி காணார் கடித்திரி >  கத்திரி  >  கத்தரி எனக் கோடல் நன்று.

மொழி பொருட் காரணம்  விழிப்பத் தோன்றா  என்ற  தொல்லாசிரியர் தொல்காப்பியனார்  அறிவுரை காணின்,  இங்ஙனம்  இருவேறு வகையிலும் கூறியுள்ளதனை  வரவேற்பர் என்பதெம்  துணிபு.

----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

கடித்திரி >> கத்தரி  என்பதனை  மாதிரி என்பதனோடு ஒப்பு நோக்குக.   மா:  அளவு. திரி= திரித்தல், அமைத்தல்.  இன்னொன்றன்  அளவுக்கு அமைத்தல் " மாதிரி:."   இது பிறரும் கூறினர் .    We are here adverting to the common ending in these words: "thiri".





வியாழன், 14 மே, 2015

the religion named HiNDU

ஐயப்பாட்டுக்கு இடமின்றி சிந்து என்பது தமிழ்ச் சொல்தான்.
இது ஒரு சிறிய நூலால் ஆன துணி வகைக்கு சிந்துச் சமவெளி மக்களிடையே பெயராய் வழங்கிப் பின் அங்கு ஓடும் ஆற்றுக்கும் பெயராகி அதன்பின் ஆற்றுக்கு அப்பால் உள்ள பாரசீக நிலப் பகுதியையும் அடைந்து பின் அவண் வாழ்ந்தோரின் மொழி இயல்புகளின்படியே ஹிந்து என்று மாறிப் பின் மீண்டும் இந்தியப் பகுதிக்கே வந்து இந்து என்னும் சமயத்துக்கும் பெயராயிற்று எனல் சரியான கருத்தாகும். அப்பாத்துரைப் பிள்ளை அவர்களும் பி டி சீனவாச ஐயங்காரை மேற்கோளாகக் காட்டி இதை ஒப்புக்கொள்கின்றார்.  இந்தச் சுருக்குரையில்  கால ஓட்டத்தையும் விரிவினையும்  நாம் கணக்கில் கொள்ளவில்லை.

சாதிகள் முதலியன இருப்பதால் சிலருக்கு இந்து மதத்தைப் பிடிக்கவில்லை. அதனால் இந்து என்ற சொல்லின்மீதும் வெறுப்பு உண்டானவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். இவர்களை நாம் புரிந்து கொன்டாலும் இதற்கு நாம் யாது செய்யலாம்?  மக்கள் மனத்தில் இருக்கும் இதற்கு மக்கள் திருந்தினாலன்றி மாற்றம் ஏதும் ஏற்படப்போவதில்லை,
சாதிக் கோட்பாடானது இந்தியர்களை இறுகப் பற்றியுள்ளது என்று மாண்புடைய தலைவர் லீ குவ்ஆன் யூ கூறியது உண்மை.
சாதி ஏதுமற்ற சீனாவிடம் இந்தியா என்றும் சமனிலையில் நிற்பது அரிது.

இப்போது சிந்து என்ற சொல்லைப் பார்ப்போம்.

சில் > சின் > சிந்து. 
சின்ன அல்லது சிறிய நூலால் ஆன  துணிவகை.  அதன் வணிகம் நிகழ்ந்த ஆற்றினதும் அடுத்திருந்த நிலத்தினதும் பெயர்.
ஒப்பு  நோக்குக:

முல்  >  முன் 
முல்  > முலை  (முன்னிருப்பது)
முல்  >  மூல் >  மூலம் that which is in "front" in terms of  occurrence, commencement ,  place and time.
முல்  > மூல்  >  மூலிகை.  
முல் > முன்>  முன் + து  >  முந்து. (வினைச்சொல்.)
At this stage, .cf the formation of the word Sinthu.  Then you can appreciate.   

சிந்து :  சிந்து கவி.  சிந்து அடி  அதாவது குறளடிக்கு மிக்கும் அளவடிக்குக் குறைந்தும் வரும் அடி. தமிழ் யாப்பிலக்கணக் குறியீடு ஆகும்.  

சிந்து: அளவடிக்குச் சிறியது.

பைரவியின் சற்று வேறுபட்ட ஒரு ராகம்; சிந்து பைரவி

இன்னும் பல உள.

சிந்து என்பதன் சொல்லமைப்புப் பொருள்களின் உட்கருத்து: சிறுமை ஆகும்.

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை என்ற வரியும் காண்க   இது வேறு பொருளுடைத்தாம் .

இந்து : இது சிந்து என்பதன் அயல் நாட்டுத் திரிபு.

சிந்து நாகரிகம் திராவிட நாகரிகம் என்னும்போது சிந்து என்பது ஏன் தமிழாக இருக்கக் கூடாது?

இதை முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்..



Originally  submitted in Roman fonts  and now converted.  

will edit  Posted in English fonts to deny virus or third party intervention
  to prevent data loss

smelly air passenger

நல்ல  வேளையாக 
நான் பறந்து சென்ற போதெல்லாம் 
சொல்லி அழும்படியாக 
சூழ் நிலைகள் ஏதும் ஏற்படவில்லை.

இதைப்படித்துப் பாருங்கள்,

https://sg.news.yahoo.com/dear-passenger-15a-a-fed-up-flyers-rant-goes-118894478177.html




செவ்வாய், 12 மே, 2015

pErikkAy pear



converted to Tamil fonts

----------------------------------------------------------------------------------------------------------------

நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பேரி என்பதுமொன்று. 

பேரி  என்பது  இனிமையான  பழம்.  any of several tree and shrub species of genus Pyrus /ˈprəs/, in thefamily Rosaceae,

 சென்னை வட்டாரத்தில் உள்ளோர், இதனை  bEri என்று ஒலிப்பதாகத் தெரிகிறது. மலேசியாவில் இதனைப் பேரி  என்றுதான் சொல்வோம். அப்படிச் சொல்லாதவர்கள், இதனைப் pear  (பே ர் ) என்றே ஆங்கிலத்தில் சொல்லிவிடுகிறார்கள். Beari என்று யாரும் சொல்வதில்லை.

ஆங்கிலச் சொல், பேர்  pear  என்றே வருவதால்  தமிழிலும்  பேரி என்பதே நாம் சொல்வது. பேர்  pear என்ற சொல்லுக்கும்  இது நேரானதாகத் தெரிகின்றது. இதன் சொல்லமைப்பைக் கவனிப்போம்.  இதைப்பற்றிக் கூறப்படுவது:

The English word “pear” is probably from Common West Germanic pera, probably a
loanword of Vulgar Latin pira, the plural of pairum, akin to Greek ἄπιος apios (from
Mycenaean ápisos),[2] which is of Semitic origin (Aramaic/Syriac "pirâ", meaning
"fruit", from the verb "pra", meaning "to beget, multiply, bear fruit"). --- Wikipaedia.


சமஸ்கிருத மொழியில், இதற்குச்  சுவையான பழம் என்று பொருள்படும் "அம்ருதபல" ( the fruit of Trichosanthes D. Roxb , ) என்பதும் "ருசிப்பல" (  the fruit of Momordica Monadelpha L.) என்பதும் பெயர்களாய் உள்ளன.  May refer to different kinds of fruits considered as pears.  இதனை அங்கு "அம்ருதாஹ்வ" (amRtAhva ) என்று சுட்டலாம் என்று தெரிகிறது.   வேறு வகைகளிற் குறிப்பிடலாம் எனினும், பிற சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளனவாயின் குழப்பம் நேரலாம்..

இந்தச் சுவை மிகு  பழந்தரும் மரத்திற்குச் "சீனரஜபுத்ர"   (சமஸ்கிருதம்)  என்ற பெயரும் இருக்கின்றது. இது ஒரு காரணப்பெயர்.  பேரிக்    காய்  அல்லது பழம் தரு மரம்  இப்பெயரால்  கூறப்படுதல்  இது சீனாவைத்  தாயகமாய்க் கொண்டதென்பதைக் காட்டுவதாகும். இப்பழம் பற்றிய  வரலாறும் சீனாவையே  தாயகம் என்கிறது.

பேரியில் பலவகை உண்டு.  பேரி போன்ற வேறு பழங்களும் உண்டு,  "சர்க்கரைப்பேரி" என்பதும் ஒரு வகை.  சர்க்கரைப்பேரி  தமிழ்ப் பெயர்.

பேரி என்பது தமிழ்ச் சொல் என்று கருதவேண்டி உள்ளது. பேரி என்பதன் மூலச்சொல் ப்ர get என்ற அரமாயிக் மொழிச்சொல் என்பர்   பெறு  get என்ற தமிழோடு ஒத்திருப்பதால்,  பேரி  என்பது தமிழுடன் தொடர்புடைய சொல்லே என்று கொள்ள வேண்டும்

Notes:


பெஅர் என்ற ஆங்கிலச்சொல் ஏனை இந்தோ ஐரோப்பியத்தின் வழியாக அரமாயிக் மொழியிலிருந்து வந்தது என்பது மேலே கூறப்பட்டது. அரமாயிக் என்பது இயேசு நாதர் காலத்தில் இசுரேல் நாட்டிலும்  வழங்கிய மொழியாகும்.  சமத்கிருதத்துக்கு எழுத்தில்லாத காலத்தில், அரமாயிக் மொழியையே பழைய "இந்தியாவின்"  மேல் பகுதிகளில்  எதையும் எழுதி வைத்துக்கொள்ளப் பயன்படுத்தினர் என்பர் மேலை வரலாற்று ஆசிரியர்கள்.

பெறு (தமிழ்)  -    peRu (thamiz)  -     get, beget   :  pr (aramAyik)  get, beget, a tree getting fruit.

pr > (other IE forms meaning fruit  etc said above)  > pear.


பெறு > பெரு >  பெரு+ இ  >  பேரி.
இது முதனிலை திரிந்த தொழிற்பெயரின் வடிவமாகின்றது.

cf:  அரு > ஆரி..   இது போலும் திரிபுகளை முன் இடுகைகளிற் காண்க.

(பேரி  பற்றி  இரண்டு மணி நேரம் செலவிட்டு  ஒரு சிறிய கட்டுரை, தமிழ் எழுத்துருத் தட்டச்சு கொண்டு எழுதிக் கொண்டிருந்தேன். அது ஏறக் குறைய முடியும் கட்டத்தில் இருந்தபோது, நகர எழுத்து வருவிப்பதற்காக,  w என்பதைத் தட்டப்போய்,  எழுதியது முழுவதும் தொலைந்துவிட்டது.  அதை மீட்டெடுக்க முடியாது போகவே, நினைவில் இருந்தவற்றைக்கொண்டு, மீண்டும் இப்போது வரையலானேன்.  )

Shall review later.

ஞாயிறு, 10 மே, 2015

பிரம்மானந்தம்

ஆனந்தம் என்ற  சொல்லை முன் இடுகையொன்றில் ஆய்ந்துள்ளோமென்று  உங்களுக்குத் தெரியும்..  ஆங்கு அறிந்துகொண்டதை ஈண்டு நினைவு கூர்க

இது தமிழ் மூலங்களை உடைய சொல். இந்தியாவெங்கும் வேறு மொழிகளிலும் வழங்கிய சொல். புத்தரின் தலைமாணாக்கருக்கும் பெயராய் அமைந்து சிறப்புற்ற சொல்.  தமிழ் தலைத் திராவிட மொழியாகலின் இந்தியாவெங்கும் வழங்கிய மொழி என்பதும்  பாகதங்கள் பலவினுக்கும் சொற்கள் பல தந்துதவிய மொழி என்பதும் அறிதல் வேண்டும்.

இப்போது பிரம்மானந்தம் என்ற சொல்லை அணுகுவோம். இது உண்மையில் பெருமானந்தம்  அதாவது பெரும் ஆனந்தம் என்பதன் திரிபு ஆகும்   பெரு ஆனந்தம் என்பது தமிழ்ச் சொற்புணர்ச்சி முறைப்படி பேரானந்தம் என்று வரவேண்டும்.  அங்ஙனம் வாராதது அது தமிழின் பயன்பாட்டுக்கென்று அமைக்கப்பட்ட சொற்றிரிபு அன்றென்பது  பெற்றாம்.


இதைப் பிரம்மா+ ஆனந்தம்  என்று பிரித்து பிரம்மனின் ஆனந்தம் - ஆகவே  பெரிதான ஆனந்தம் என்பதுண்டு. பெரு + ஆனந்தம் > பெருமானந்தம் > பிரமானந்தம் என்று வந்துவிடுவதால்,  பிரம்மனின்  ஆனந்தம் ஆகவே பெரிய ஆனந்தம் என்று  சுற்றிவளைத்து வந்து சேரவேண்டியதில்லை. பரமன்+ ஆனந்தம் = பரம + ஆனந்தம் > பரமானந்தம் என்பதுமுண்டு.  பரமன் என்பது பரத்தல் >  எங்கும் பரவி நிற்றல் என்ற கருத்தில் வரும் .  அங்ஙனமாயின், அது தனி மாந்தனின் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சியைக் குறிக்க ஏற்புடைய சொல்லன்று. 
பரமனின் மகிழ்ச்சி என்று பொருள்பட்டுப் பொருள் வேறுபாடு அடையும். 


Brahma and prophet Abraham of the Jews.

பிரமன் அல்லது பிரம்மன் என்பது ஆப்ரகாம் என்பதன் திரிபாய் யூத இறையுணர்வாளர்  ஆபிரகாம் என்பவரைக் குறிக்கும் என்றாரும் உளர்.  ப்ர > ஆப்ர என்று திரிந்தது என்பர்..  ஆனால் ஒன்று "கடவுள்" மற்றொன்று மனிதரைக் குறிக்கும் என்பதாலும் இவர்களின் வரலாறுகளாகக் கூறப்படுவன  ஒற்றுமை இல்லாதன என்பதாலும் பொருந்துவனவாய்த் தெரிந்திலது.


will edit

புதன், 6 மே, 2015

TholkAppiyar from kAppiyakkudi an ancient Tamil sect.

தொல்காப்பியம் என்ற கூட்டுச் சொல்லில் இரு சொற்கள் உள்ளன.
ஒன்று தொல் என்பது. மற்றொன்று காப்பியம் என்பது.

தொல்காப்பியம் என்பது  சிலப்பதிகாரம்  மணிமேகலை போன்ற காப்பியம் அன்று. எனவே  இந்தச் சொல்  வடமொழியிலுள்ள காப்யா  என்ற சொல்லினின்று வந்ததென்பது  தவறு ஆகும். 

இது காப்பு +இயம்  என்ற சொல்லும் விகுதியும் சேர்ந்தமைந்த சொல்லாகும். இதன்  முன் நிற்கின்ற "கா" என்பது  காத்தலென்னும் வினைச்சொல்.  பு  என்னும் விகுதி பெற்றுக் காப்பு ஆகி மீண்டும் இயம் என்னும்  விகுதி பெற்றுக் காப்பியம் ஆனது.   

இதை யாம் முன்னரே எம் இடுகைகளில் சொல்லியிருந்தோம்.  சில ஆண்டுகட்கு முன்னர்! 

பிறரும் இணையக் கட்டுரைகளில் சொல்லியிருந்தனர்.

காப்யா என்ற வடசொல்லை இங்கு ஆராயவில்லை.  அது நிற்கட்டும். அதைப்பற்றியும் முன்பு எழுதியதுண்டு.  ஆங்குக் காண்க.

தொல் பழங்காலத்தில் "காப்பியக் குடி" என்றொரு குடி ( குலத்து உட்பிரிவு)   இருந்தது.  அவர்களின் தொழில், பழைய இலக்கணங்களைக் கற்று, இலக்கியங்களையும் அறிந்து, அவற்றைக் காப்பது ஆகும்.

இப்படியும் இருந்திருக்குமா என்று வியந்து கேட்போருக்கு,  நாம் வரலாற்றையும் சற்று எடுத்துக்காட்டுவோம்.  பழங்கால யூதரிடை
"scribes"   (writers) என்றொரு பிரிவினர் இருந்தனர் என்பதை நீங்கள் விவிலிய நூலிலிருந்து கண்டுகொள்ளலாம்.  அரபியர்களிடை "அல் காத்தீபு" என்ற  (people of learning)  குடிபெயருடையவர்களும் இருந்தனர். சிறிது வரலாறு படித்து இதனை உறுதிப்படுத்திக்கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படக்  காரணங்கள்  இரா.
Also search in histories of  other ancient civilizations.

காப்பியக்குடி பற்றி  பேராசிரியர் கா . சு. பிள்ளை அவர்களும்
எழுதியுள்ளார். 

காப்பியாற்றுக் காப்பியனார் என்ற காப்பியக் குடிப் புலவரும் சங்க காலத்தில் இருந்தமை உணரவேண்டும்.

பல்காப்பியர் என்ற ஓர் இலக்கணப் புலவரும் இருந்தார். அவரின் சில நூற்பாக்கள் யாப்பருங்கலக் காரிகையில் காட்டப்பெறுகின்றன.

இது காறும் சுருங்கக் கூறியவற்றால்,தமிழரிடை காப்பியக் குடியினர் இருந்ததும் அக்குடிப் பிறந்த அறிஞரே தொல்காப்பியர் என்பதும் இனிது விளங்கும்.

In the above  we referred to scribes in  other civilisations..  In latter day India too there were.  An excerpt from Wikipaedia for you:

So there is every probability that a number of brahmana families were mixed up with members of other varnas in forming the present Kayastha and Vaidya communities of Bengal."[5]

According to the Hindu scriptures known as the Puranas, Kayasthas are descended from Chitragupta, "who was born from the body of Brahma", and is the deity responsible for recording the deeds of humanity, upholding the rule of law, and judging whether human beings go to heaven or hell upon death.[2][3]


Brahmanical religious texts refer to them as a caste of scribes, recruited in the beginning from the Brahmin, Kshatriya and Vaishya castes,

You may delve into the history of other linguistic groups besides the Bengali  and should be able to find parallel developments

தொல்காப்பியர்  காலத்தில்  மக்களிடை அகமண  முறை இருந்ததற்கான சான்றுகள் இல்லை/   

will edit later 

செவ்வாய், 5 மே, 2015

உட்சிதை வுற்ற

உட்சிதை வுற்றவூர் மக்கள் அவர்கள்பால்
கட்சி அரசியலும்  உட்புகுமேல்  ---- மட்செருகி 
 மாய்ந்த நிலைக்கதுவே ஒப்பாகும் மற்றன்னார்
வாழ்ந்து நிலைப்படுவ தில். 

ஞாயிறு, 3 மே, 2015

war crimes investigation

சில நாடுகள் சொல்வது:

போர்க்குற்றம் புரிந்தோரே வாருங்கள் வழக்குக்கு;
நேர்மாறாய் நடந்தீரே  தாருங்கள் ஒத்துழைப்பு;
கூர்முற்றும் மழுங்காத தீர்மானப் படிமாலை
நார்மட்டும் தெரியாத நல்லமுறை வழங்கிடுவோம். 

எத்தனையே இலக்கமென்று எம்மிடமோ கணக்குண்டு;
செத்தவர்கள் உறுப்பறைகள் மொத்தமிதில்  பிணக்கில்லை;
சொத்துகளும் அழிந்தனவே குத்துமதிப் பதற்குண்டே!
மத்துகடை தலைப்போலே குடைதலில்லை முறையுண்டு.

நிலைமை  கூறல்:

அணிகூர்ந்த அரசநிலைப் பணிநீங்கிப் படுகைவீழ் 
தனிமாந்தன் இராசபக்சே குனிவுற்றுக் கூண்டேறி
இனிவாழா  ஒறுப்பினையே இளிபெறவே பெற்றாலும்
நனிவாழத் தமிழர்மறு வாழ்வமைதல் உடன் தேவை/

நாடிழந்த காரணத்தால் நலிவடைந்த தமிழர்பலர்;
வீடிழந்த  அளியருக்கு வீடுடனே வேண்டுமன்றோ
கூடிழந்த  பறவைகூடக்   கொல்லும் எமன் தனைநீங்கி
நாடிநின்ற தலத்திலகம் பீடுபெற  அமைத்தியலும்.

நெடுந்துயரை நீணிலத்தில் படுந்தனையும் விடிவுண்டோ?
கெடுந்தனையும் கெடுகவென இருந்தபுவி ,மன்பதையோர்
தொடர்விழிநீர் துடைத்திடவே எண்ணுதலும் நல்லகாலம்
படரிடும்பை முற்றகலப்  பரமனருள் வெல்கநாளும

preview and edit not available

error message
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismisss


நல்ல முறை -  நல்ல நீதி.

கூர் முற்றும் மழுங்காத தீர்மானம் :  இனப் படுகொலைக்கு முழு நீதி கிட்டா விட்டாலும் ஏதோ  சிறிது கேட்பதுபோன்ற தீர்மானம்;   (அறவே கேட்கமாட்டோம்  என்று தள்ளிவிடாமல் ).
எல்லாப் பூக்களும் உதிர்ந்து விடாமல் (  உதிர்ந்துபோனால்  நார் மட்டும் மிச்சம்; அப்படி இன்றி நார் தெரியாமல்  சில பூக்களாவது மாலையில் உள்ளன போலும் நீதி  )  இது   " மாலை  நார்மட்டும் தெரியாத நல்லமுறை"  எனப்பட்டது.
இலக்கம் -  இலட்சம்  என்ற எண்ணிக்கை . 
:உறுப்பறைகள்  -  கால் கை இழந்தோர் . 
குத்து மதிப்பு :ஏறத் தாழ என்று சொல்லும்படியான  மதிப்பீடு.
முறையுண்டு  this is a reference to proper judicial procedure
படுகை = பள்ளம் 
குனிவு:   அவமானம்.
கூண்டு:  குற்றவாளிக் கூண்டு.
இனி வாழா  ஒறுப்பு  -  மரண  தண்டனை.
இளி  -  தகுதிக்குக்  கேடு. 
அளியர் -   இரக்கத்துக்கு  உரியோர்.
தலத்திலகம்  -   தலத்தில் வீடு ;   தலம் -  இடம்.
பீடு -  பெருமை.
புவி மன்பதை -  international community.
படர்  இடும்பை  -   விரிவடையும் கெடுபாடும் துயரும்     










வெள்ளி, 1 மே, 2015

Devaneyap Pavanar and word: Aryan.

"ஆரியன்"  --- சொல்லும் தேவ நேயப்பாவாணரும்,

பிறரால்  செய்து முடிக்கவியலாத,  மற்றும் இயல்பானவற்றுள்  அடங்காமல் அவற்றின் மேம்பட்டவற்றைச்  செய்துமுடிப்பவரே  பெரியவராவார்.  இச் செயல்களை வள்ளுவனார் " செயற்கு அரியவை: என்று குறளிற் குறிக்கின்றார்.

அரு என்ற அடிச்சொல்லினின்று தோன்றியதே  அரிய என்ற எச்சச்சொல்.  அரு+ இய =  அரிய..

அரு+ து =  அரிது;  உண்மையில் இது அரு+(இ)  து என்பதே.
அர் + உ + இ + து =  (இதில் உகரம் கெட்டு)  அர் + இ + து என்றாகி, 
அரிது ஆனது.  இதிலுள்ள இது என்பதை அஃறிணைச் சுட்டாகக் கொள்ளமல் இ என்பது தனியாகத் தோன்றியது என்று தமிழ்ப்புலவர் விளக்கினாலும்,  நீங்கள் கேட்டின்புறலாம். அதில் ஒன்றுமில்லை.

அரு என்பது வருமொழி முதலில் உயிர் வரின், ஆர் என்று  திரியும்.

அரு+ உயிர் =  ஆருயிர்.

புணர்ச்சியில் அரு என்பது ஆர் என்று திரியும். இது உங்கட்குத் தெரியும்.

ஆனால் புணர்ச்சியில் இல்லாமல் தானேயும் திரியும் என்பதை தேவ நேயப்பாவாணர் எடுத்துக்காட்டியுள்ளார்.


"ஆரி யாகமம்  சாந்தத் தளித்தபின்"   என்று சீவக சிந்தாமணியில் வருகின்றது. (சீவக. 129).

இங்கு அரு என்பது ஆரி என்று திரிந்தது.  அரு=  மேன்மை;  ஆரி = மேன்மை, அரியது   ஆரி -- அரு என்பதிலிருந்து அமைந்த தனிச் சொல் எனினுமாம். .

பத்துப்பாட்டுகளில் ஒன்றாகிய  மலைபடு கடாத்திலும்,  அரு எனற்பாலது  ஆரி யென்றாகும்.

ஆரிப் படுகர்  (  மலைப.. 161) 

அரியராகிய படுகர் என்பது.  

படுகர்  என்பார் ஓர் உழவுத்    தொழில் தொடர்புடைய  வகுப்பினர்  என்று 
தெரிகிறது.   படுகர் என்பது விளை நிலங்களையும் குறிக்கும்.  படுகை = பள்ளம்  என்பதும் ஆகும். 

இந்த ஆரி என்ற சொல்லே அன் என்ற ஈறு பெற்று ஆரியன் என்று வந்ததென்கிறார்     பாவாணர்..

ஏர்  என்ற சொல் மேலை மொழிகளில் ஆரென்றும் திரிந்துள்ளது.  எடுத்துக்காட்டு:  English: arable,  vide  its Indo European forms.

Gk: aristos.  meaning "noble".

ஏர் வேறு;   அரு >  ஆர்  வேறு  என்பர்.

அறி என்பதற்கும் ஆரி  என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்ந்து  பாருங்கள்.
--------------------------------------------------------------

Footnote:


வடமொழி வரலாறு:  1    பக் . 24  தேவ நே .  (இளவழகன் பதிப்பு).


பார்வை இட்ட நாள்:  7.12.2015