திங்கள், 9 ஜனவரி, 2017

ஆட்டா மாவு எழுதா எழுத்து

ஆட்டா மாவு என்பதில் "ஆட்டா" என்பதென்ன? முன்பு பல வகை
மாவுகளும் ஆட்டுக்கல்லில் ஆட்டியே செய்யப்பட்டன. ஆட்டா மாவு
தமிழரிடத்து வந்தபோது, அதற்கான வட இந்தியப்பெயரை அவர்கள்
வழங்கவில்லை. மாறாக, ஆட்டுக்கல்லில் ஆட்டாத மாவு என்ற பொருளில் அதை ஆட்டா மாவு என்றனர். இப்போது ஆட்டா என்ற‌
எதிர்மறைச்சொல் அந்த மாவுக்குப் பெயராகிவிட்டது.

முன்பு அச்செழுத்து முதன்முதலாகத் தமிழ்நாட்டில் வந்தகாலை
அதை அச்செழுத்து என்று சொல்லவில்லை. எப்படிக் குறிக்கலாம் என்று பார்த்தவர்கள் அதை "எழுதா எழுத்து" என்றனர். அதுவே ஒரு பாடலிலும்
இடம்பெற்றது,

"மாண்பார் ஞானாதிக்க வியன்பேர்
மகிபன், எழுதா எழுத்தத‌னில்
பெருகார் வத்தில் பொறித்தளித்தான் "

என்பது திருத்தணிகை விசாகப் பெருமாளையர் பாடிய பாடலின்
பகுதி.  (தேம்பாவணிக் கீர்த்தனை,  1857) (மயிலை  சீ .வே )

இங்ஙனம் பெயர் சூட்டப்படுதலுமுண்டு. 

சனி, 7 ஜனவரி, 2017

வேதவியாசன்

வேதவியாசன் என்னும் சொல்லும் வியாசம் என்னும் சொல்லும்
தமிழிலும் வந்து வழங்குகின்றன எனினும் இவை தமிழ் என்று
வகைப்படுத்த இயலாதவை என்ப.

வேதம் என்பது வித் (அறிதல்) என்ற சொல்லினின்று தோன்றிற்று என மேலை ஆராய்ச்சியாளர் கூறினும், இது வித்து (விதை) என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து அறிவே வித்து என்ற அடிப்படையில் எழுந்தது
ஆகும். அன்றியும் வேதம் என்பது, செய்யப்பட்டவை என்ற பொருளில்
வேய்தல் என்பதினின்று தோன்றியது எனினுமாம். "வேத"ச் சொல்லை
ஆய்ந்தோர் வேய்தல் என்ற சொல்லை அறியாதவர் ஆதலின், அதினின்று அது தோன்றுமென்பதை அறியார். வேய்தல் > வேய்தம் > வேதம். யகரம்
கெட்டது.  வாய்த்தி என்பது வாத்தி > வாத்தியார் என்றானது போல. (வாய்ப்பாடம் சொல்பவன்).

வியன், வியனுலகு என்பன தமிழ் வழக்குகள். வியன் என்பது விரிவு.
விர் > விய். விர் > விரி > விரிவு.  விய் > விய > வியாசம்,  அதாவது
விரிவாய்ச் சொல்லப்படுவது, எழுதப்படுவது.
எனவே வேதவியாசன் என்பது தமிழன்று என்று  முடிப்பினும் மூலச்
சொற்கள் தமிழென்பது காணலாம்.

வியாழன், 5 ஜனவரி, 2017

சளியுடன் காய்ச்சல்

சளியுடன் காய்ச்சல் கலந்துவர  யானே
ஒளி‍யிழந்த வானத் துடுப்போலும் ஆனேன்;
வெளியில் உலவாது வீடடங்கின் வாரா(து )
உளிசெதுக்கல் ஒக்கும் வலி.

வாரா(து)  உ ளி  - வாரா துளி.....

புதன், 4 ஜனவரி, 2017

புட்டாமா. face powder

தமிழ் நாட்டில் பேசப்படும் தமிழ் ஒரு கலவைத் தமிழ். பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்தித் தம் கருத்தை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். சென்டிமன்ட்ஸ், எஞ்சாய்மென்ட் முதலிய ஆங்கிலச் சொற்கள் தாராளமாய்ப் பயன்பாடு காண்கின்றன.

பொட்டலம் என்ற சொல், தமிழ்நாட்டின் சிற்றுண்டியகத்தில் திகைப்பை ஏற்படுத்தியது.  தமிழ் வித்துவானுக்கு விளங்கிப் புண்ணியமில்லை.
பொட்டலம் வழக்கில் இல்லாத சொல். தமிழ்நாட்டுக்குப் போகும் வெளிநாட்டுத் தமிழன், அங்கு என்னென்ன தமிழ்ச்சொற்கள் வழக்கில் இல்லை என்று முதலில் தெரிந்துகொண்டு அப்புறம் தமிழ்ப் பேசவேண்டும். பொட்டலம் என்னாமல் பார்சல் என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தினாலே இட்டிலி மடிப்பவன் புரிந்துகொள்வான்.

முகத்துக்குப் பவுடர் உதட்டுக்குச் சாயம்
மூக்குக்கண்ணடி மாட்டி,
முடிசூடாத மகாராணிபோல் நடக்கிறாள் சீமாட்டி
ப்யூட்டி நடக்கிறாள் சீமாட்டி;
சீமாட்டி கையிலே ராட்டினம் ஆடும் சிங்காரப் பையி ப்ளாஸ்டிக்
(.....பையைத் ) திறந்து பார்த்தால்
பணங்காசில்லே சீப்புக் கண்ணாடி லிப்ஸிடிக்....
ஸ்னோ கிரீம் ஐடெக்ஸ்.....

என்று திரைப்பாடல் வருவதால், முகமாவுக்கு பவுடர் என்றுதான்
தமிழ் நாட்டில் சொல்கிறார்கள் என்று தெரிகிறது.

மாவு என்பது தோசை மாவு, ஆட்டா மாவு என்பன போலும் பொருள்களைக் குறிக்க வழங்குவதால், இதை முகப்பூச்சுக்கு வழங்குவதில் மனத்தடை இருக்கிறது போலும். ஆனால் ஆங்கிலத்தில் பேஸ் பவுடர், கறி பவுடர் என்று உணவு பிற‌ என்ற பேதமின்றி வழங்குவதில் தடையேதும் இல்லை. இது
வாங்கிப் பேசிய மொழியில் இல்லாத வரையறவு ஆகும்.

நிற்க 40 50 களில்  சிங்கப்பூர் மலேசியாவில் வாழ்ந்த தமிழர் முகப்பூச்சு மாவுக்கு புட்டாமா என்று சொன்னார்கள் என்று அறிகிறோம்.

முன்பு முகப்பூச்சுகள் கட்டியாகவே சீனா முதலிய நாடுகளிலிருந்து
வந்தன. இப்போது கட்டிப் பூச்சுகள் அருகிவிட்டன. இவற்றைத் தேய்த்து முகத்தில் பூசிக் கொள்ளவேண்டும். இக்கட்டிகள் பிட்டால் (பிட்டு எடுத்தால் ) மாவாகிப் பூசத் தயாராகிவிடும்.

பிட்டால் மாவு > புட்டால் மாவு > புட்டாமா.

புட்டாமா இப்போது குறைவு.





செவ்வாய், 3 ஜனவரி, 2017

முயற்சி வெல்லும்

புத்தாண்டே வந்திடுக புன்மை நீங்கி
புத்துலகம் கண்டிடுமோர் ஊக்கம் கொண்டே
இத்தரையோர் உய்திடத்தொண் டாற்றுங் காலை
எத்துயரும் பனிஎல்லோன் முன்போல் நீங்கும்
அத்தனையும் வெற்றிபெற ஆன்றோர் கண்ட‌
அணியாகும் பண்புகளே ஓங்கி நிற்க!
முத்தமிழர் பெற்றுநலம் மூவா ஞால
முன்னணியோர் தம்முடனே நிற்பார் முன்னே.


அலைவந்து கரைதனையே அணைத்து மீளும்
அந்நேரம் அறிந்திடவே கணித்துக் கூறான்;
குலைவின்றிப் புத்தழகில் ஆண்டு கூடும்
கோலமுறு நாளுரைக்கும் திறத்தைக் கண்டோம்!
நிலக்கோளின் நல்லமைப்புக் கார ணத்தால்
நேரமது நாடுதொறும் வேறு வேறே!
அலைக்கழிக்கும் துன்பமின்பம் வேறு வேறே
ஆனாலும் முயற்சிவென்று தேனாம் காணீர்.

முயற்சி  வெல்லும்

திங்கள், 2 ஜனவரி, 2017

MAHAMAYA




Wednesday, July 20, 2016


மகாமாயா

இன்று ஒரு வகைத் திரிபுபற்றி  உரையாடி மகிழலாம். சொல்லிறுதியில் ளகர ஒற்றில் முடியும் ஒருசொல், யகர ஒற்றாய்ச் சில வேளைகளில் முடியும் என்பதே அது.  இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு:

மாள் > மாய்

என்பதாகும்.

இச்சொல் வடிவங்கள் இங்ஙனம் மட்டுமின்றி  மடி, மரி என்றும் வருதலை உணரலாம்.  மாள்தல், மாய்தல், மடிதல், மரித்தல் என்று ~தல் தொழிற்பெயர் விகுதி பெற்றும் வரும்.

மடிதல், மரித்தல் என்று மகரக் குறிலில் தொடங்கிய சொல் மாகாரமாக முதனிலை நீண்டு திரிந்தும் சொல்லாவது கவனிக்க வேண்டியதொன்றாகும்.

இவை அனைத்தும் பொருள் மாறாமல் இன்றுகாறும் வழங்கி வந்திருத்தலை அறியும்போது தமிழ்ச் சொற்கள் பிற மொழியின்   சார்பின்றித்  தாமே திரிந்து தமிழ்மொழி உருவாக்கம் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம்.  பொருள் மாறியிருந்தால் நாம் ஒரு வேளை கண்டுகொள்ள இயலாது போயிருத்தல் கூடும்.

இந்த நாலு சொற்களும் மகரத்திலேயே தொடங்கின..

இவற்றில் சில பிற மொழிகளுக்குள் தாவிச் சென்றன,

கேட்க இனிமையாகவும் சொல்ல எளிமையாகவும் விளக்கமாகப் பொருள்படுத்தும் திறமும் உடைய சொற்கள் பிறமொழிகளில் சென்று
வழங்குவது நாம் கண்டு களிக்கத் தக்கதே என்போம். மிக்கப் பழங்காலத்திலேயே நம் பேச்சும் சொற்களும் தெளிவு பெற்றிருந்தமையை இத்தகைய தாவல்கள்  நமக்கு அறிவிக்கின்றன.

உடல் மாய்தலே மனிதன் தொடக்கத்தில் உணர்ந்த மாய்தல். இதன் பின் வெகுகாலம் கழித்தே  அவன்  ஒருவற்கு  அறிவு  மாய்ந்துபோய் மனிதன் மடைமை அடைகிறான்  என்பதை  உணர்ந்துகொண்டிருத்தல் தெளிவாகி றது. மொழிநூலில் அணியியல் வழக்குகள் காலத்தால் பிற்பட்டவை. பொருள் உண்டாகி உறுதியடைந்த பின்னரே அதனை அழகுபடுத்தும் வகைகளும் கலைகளும் தோன்றுதல் கூடும். குயில் தோன்றிய பின் தான் அது பறக்கவும் பின் பாடவும் அறிந்துகொள்ளும்.

மாய் என்பதிலிருந்து மாயம் மாயை மாயா முதலிய சொற்கள் பிற்காலத்தில் உருப்பெற்றன.  அறிவு மாய்தல் என்னும் விரிவு பின்பு  உணரப்பட்டது.   மாயம் செய்வோன் மாயன், மாயக்காரன் என்றும் குறிக்கப்பெறுவானா யினன். மாய் என்ற சொல் தமிழில் தோன்றி ப்  பல ஆயிரம் ஆண்டுகளின் பின் தான்  மாயா என்ற சமயக் கருத்தும் மாமாயா என்னும்  மகாமாயா ஆகிய  அம்மனின் பெயரும் உருப்பெற்றிருத்தல் கூடும். இவை அணிவகையில் ஏற்பட்டவையாகக் கருதவேண்டும்.-

to edit
Post a Comment



ஞாயிறு, 1 ஜனவரி, 2017

மார்க்கண்டேயன்.

மார்க்கண்டேயன்.

இந்தச் சொல் "மாறுகண்ட ஐயன்" என்ற தமிழ்த் தொடரின் திரிபு. இதை விவரித்து 2009 வாக்கில் இங்கு பதிவு செய்திருந்தோம். இதற்குமுன் இது கருத்துக்களங்களிலும் பேசப்பட்டதே ஆகும். ஆனால்
கள்ள மென்பொருளால் இது அழிவுண்டது. இது இன்னும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்ததில் தெரியவந்தது.

மறு ‍  என்பதும் மாறு என்பதும் தொடர்பு உடைய சொற்கள். இது பின்
மாற்று என்றும் வரும். உலகம் இரு பக்கங்களை உடையது என்பதும், நாமறிந்த இவ்வுலகு அவற்றுள் ஒரு பக்கம் என்பதும், மார்க்கண்டேயன் என்பவர் அடுத்த பக்கத்தை (இறைவன் உள்ள பக்கத்தைக்) கண்டு மீண்டவர்) என்பதும் கருத்து  ஆகும்.

கார்த்திகை ஐயன் என்பது கார்த்திகேயன் என்று திரிந்ததும் இங்ஙனமே. தமிழ்ச் சொற்களை பிறர் கையாளும்போது திரிபுகள் உருவாகுமென்பதை உணர்க.

 இன்னொன்று:

கங்கை + ஐயன்  =   கங்கையையன் > காங்கேயன் .

ஏய்தல்  - இயைதல் .   கங்கை +  ஏயன் >   .காங்கேயன்  (கங்கையுடன் இணைந்தவன் )   என்றும் பொருள் உரைத்தல் கூடும்,   இன்ன பிறவும் ..  

will edit.

ளகரம் ணகரமாக மாறுதல்.


ஒரு சில சொற்களில் ளகரம் ணகராமாகத் திரியும். இதற்கு நல்ல‌
எடுத்துக்காட்டு: களவாணி என்ற சொல். இதன் இறுதியில் உள்ள‌
வாணி என்பது உண்மையில் வாளி என்ற சொல்லிறுதி ஆகும்.

களவு +ஆள் + இ =  களவாளி  > களவாணி.

இதைக் களவு + ஆணி என்று பிரித்தல் பிழையாகத் தோன்றுகிறது,
களவு செய்யும் ஆண் என்பதனோடு இகரம் சேர்ப்பர்போல் தெரிகிறது


.ளகரம் ணகரமாக மாறுதல்.

சனி, 31 டிசம்பர், 2016

புத்தாண்டு வாழ்த்துகள்.

மெட்டினிய பாட்டிலே மேலெழும் இன்குரல்போல்
எட்டரிய எல்லாமும் எட்டும் பதினேழில்
யாவர்க்கும் என்றுமெங்கும் இன்பமே பொங்கிடுக‌
தேவமுதாய் மேவ நலம்.

யாவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வியாழன், 29 டிசம்பர், 2016

திராட்சை உருத்திராட்சம் அங்கம்:

ஏறத்தாழ 2008 ‍  ~  2011 வரை எழுதப்பட்ட பல இடுகைகள் கள்ள‌
மென்பொருள் கொண்டு நஞ்சர்களால் அழிக்கப்பட்டன.

நினைவிலுள்ளவற்றில் சில இப்போது:

திராட்சை ‍  இது திரளாகக் காய்ப்பதனால் ஏற்பட்ட பேச்சு வழக்குப்
      பெயர்.  திரள் > திரட்சை (திரள்+சை_ > திராட்சை.

உருத்திராட்சம்:  இது திராட்சைப் பழ வடிவான மணிகளால், கோத்துக் கட்டி, உருப்போடுவதற்கு ( மந்திரம் சொல்வதற்குப்) பயன்படுத்தப்
பட்டதனால் வந்த பெயர்.  உரு + திரட்சை + அம் = உருத்திராட்சம்).

அங்கம்:   இதில் முன் நிற்பது  அம். இது அமைப்பு என்பதன் அடிச்சொல்.  கு+ அம் என்பன விகுதிகள். அங்கம் எனில் அமைக்கப்பட்டது என்று பொருள். அம்> அமை > அமைத்தல்.
அம்> அங்கு> அங்கம்;  அம் > அங்கு > அங்கி.  மூலம் தமிழ் அடிச் சொற்கள்.

ஆமைக்கு மறு பெயர்.

ஆமைக்குத் தமிழில் வேறு பெயர் உண்டா என்று நீங்கள் வினவியதுண்டா ?  ஆமை என்ற உயிரி வேறு; அறியாமை, ஒவ்வாமை, பொறாமை என்று ஆமையில் போய் முடியும் சொற்கள்
வேறு.பொறுமை மிக்கது ஆமை; அதற்கும் பொறாமைக்கும் ஒரு
தொடர்பும் இல்லை. முயலுடன் போட்டி போட்டு வென்ற புகழை
உடையது ஆமை என்பதும் நீங்கள் அறிந்ததே.

ஆமைக்குக் கடமம் என்ற இன்னொரு பெயருண்டு. மிக்கக் கடுமையான் ஓடுகளை உடையது ஆமை. ஆகவே அதற்கு மற்றொரு
பெயரை வைத்தவர்கள், கடு (கடுமை, கடியது)  என்ற அடிச்சொல்லினின்றும் ஒரு பெயரை அமைத்தது மிக்க அழகிதே
ஆகும்.‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

கடு + அம் + அம்.

அம் என்ற இறுதியைப் பெற்ற இச்சொல், அம் என்பதே இடைநிலை
யாகவும் பெற்றுள்ளது. சில சொற்கள் ஒரே இடைச்சொல்லை விகுதியாயும் இடைநிலையாயும் பெறுதலுமுண்டு.

சில சொற்கள் எழுத்துமுறைமாற்றாக வரும்.  எடுத்துக்காட்டாக,
விசிறி என்பது சிவிறி என்று வந்து, பொருள் மாறுபடாமலிருக்கும்.
இந்தக் கடமம் என்ற சொல்லும், கமடம் என்று எழுத்து முறைமாற்றி
வருதல் உண்டு. சொற்களும்கூட இரட்டைவேடம் அணிதல் உண்டு.

இன்னொரு எ‍~டு:  மருதை > மதுரை.  மருத நிலங்கள் சூழ்ந்த‌
நகர் என்பது பொருள். இங்ஙனம் பல உள .  முன்  எழுதிய நினைவு இருப்பதால்   தேடித் பார்த்தல் நன்று.

Since posts go missing often, editing will be done later. Cannot be helped.  Thank you.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍



நத்தை என்பது..........

நத்தை என்பது ஓர் ஊரும் உயிரி.  இதற்கு ஏன் இப்பெயர் ஏற்பட்டதென்பது எவ்வித ஆய்வுமின்றியே அறிந்துகொள்ளக்கூடியது ஆகும்.

நத்துதல் என்பது ஒட்டிக்கொண்டு இருத்தல்,  பிறவற்றை  அடுத்து வாழ்தல்  என்று பலபொருளைத் தரும்.  "பிறரை நத்தி வாழமாட்டேன்" என்ற வாக்கியம் காண்க.

நத்து + ஐ = நத்தை.

நத்தை என்பது தமிழ்ச்சொல், தவளை என்பதுபோல.

செடி,  மரம் என்று ஏற்ற எதிலும் ஏறி ஊர்வது  நத்தை. நீர் நத்தைகளும் உள .

புதன், 28 டிசம்பர், 2016

ஜெய லலிதா பொற்செல்வி

பாண்டியனின் மகள்போலப்
பைந்தமிழ்ப்பொற் செல்வியெனப்  
பணிந்துபலர்  உயர்ந்தேத்தப்
பார்புகழக் கோலோச்சி
மறைந்தஜெய லலிதா,      தன்னை ~~

ஈண்டுவளர்த் துயர்த்தியவர்
இருந்தாரேல் இக்கதியும்
எய்த லுண்டோ   என்றுகுரல்
எழும்பிடவே நன்றுபல
புரிந்தவரே முதல்வர்    முன்னாள்..



நல்லவரும் புகழ்கின்றார்;
நல்லதுமுன் செய்தவராய்
உள்ளசில நிகழ்வுகளால்
ஊரெதனைக்  கூறிடினும்
 நல்லோரே யாங்க     ளென்பார்,


எல்லவரும் புகழ்கின்றார்
என்றிடிலோ யார்க்குமொரு
மீட்பரெனத் திகழ்ந்தவரே
அவரெனவே தெளிவுறுத்தும்
வரலாறே        இதுவோ     பண்பால்..


செவ்வாய், 27 டிசம்பர், 2016

சொல் திரிபுகள் : ய > க;( மற்றும் கி ள் கெடுதல் )

இந்த  மூன்று வடிவங்களையும் பாருங்கள்.

சொல்றீங்க >  சொல்றீக >  சொல்றிய.

சொல்றீங்க என்பது சொல்கிறீர்கள் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

கி ~  கெட்டது, அதாவது இல்லாமல் போய்விட்டது.
ர் ~  இதற்குப் பதிலாக ங் தோன்றியது.
ள் ~  கெட்டது.

இதுபோல,  ஒன்றோ பலவோ எழுத்துக்கள் அல்லது ஒலிகள் மாறுதலையும் மருவுதலையும் உடைய வேறு சொற்களைக் கண்டுபிடியுங்கள்.

 சொல்றீக >  சொல்றிய.

இங்கு ஈற்று எழுத்து க என்பது ய என்று மாறியுள்ளது. இப்படிப்
பிற சொற்களில் மாறியுள்ளதைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.

இதற்குப் பல உதாரணங்கள் முன் இடுகைகளில் உள்ளன.

இப்படிச் செய்தால் சொற்கள் எப்படித் திரிகின்றன, எப்படி மருவுகின்றன என்பதைச் சொல்லும்போது, தெரியாமல் அதை
மறுப்பது தவிர்க்கப்படும்.

சொல் திரிபுகள் :  ய  > க;(  மற்றும் கி  ள்  கெடுதல் )



















எது செய்தி


எங்கெங்கும் நடப்பனவோ செய்தியல்ல ‍ ===  தம்பி
எங்கேனும் நடப்பதுவே செய்தியாகும்!
எங்கேனும் நடந்ததனைப் படித்துவிட்டு ‍‍=== நீயும்
எங்கெங்கும் நடப்பனவென் றெண்ணிடாதே.


Black money: ஓயாக் கூச்சல்

கோவிலுக்குப் போனாலும் வரிசை தானே
குளிப்பதற்குப் போனாலும் வரிசை தானே
ஆவலுடன் மாற்றுகிறாய்  செல்லாக் காசை
அதற்கென்ன வேதனையா வரிசை நிற்க‌

கால்கடுக்க நீ நிற்கும் வேளை தன்னில்
கட்சிக்கா ரன்வந்து சோறு தந்து
நீர்குடிக்கத தந்தானோ? இருக்கை தந்து
நின்கடினம் போக்கிவிட என்ன செய்தான்?

ஊழலிலே ஊறிவிட்ட நாட்டில் தம்பி
உனக்காகப் பேசவில்லை தனக்கே தானே
வாழவழி வருந்தேர்தல் வெற்றி எண்ணி
வாயாலே பிதற்றுகிறான் ஓயாக் கூச்சல்.


ideally, aspire to become a version of the middle class. Events in their life do not carry the same valencies and their hardships are possible to nationalise. Their short-term problems are sought to be minimised -after all, they are used to standing in queues for everything and their long-term issues in terms of adjusting to an entirely unfamiliar system of payment and their livelihoods being threatened are glossed over.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/demonetisation-and-the-reliance-on-anecdotes-to-support-personal-views/articleshow/56193776.cms







ஞாயிறு, 25 டிசம்பர், 2016

counterfeit notes.

According to certain writers in the Internet,  Pakistan has the factories to print  Indian currency.
So a person outside India who wants to  visit India changes his money at a money changer in a foreign country. He gets Indian Rupee notes printed in Pakistan. (Assumption).  He goes to India and makes transactions using the Pakis-printed "money". 

If many transactions are done in this manner, then the printer in Pak has become richer.

Pity the man who digs the ground the whole day to earn a little to sustain himself and his family.

The world belongs to the smart people.


மண்வெட்டும் ஏழைத் தொழிலாளி
மாலையில் எல்லோன் மறைவரைக்கும் 
கண்சிமிட் டாமல் உழைக்கின்றான்
கஞ்சி இரவில் அவனுணவாம்.
விண்முட்டும் காகிதக் காசுகளை
வேண்டிய  மட்டிலும்  அச்சடிப்போன்
பண்பட்ட வாழ்க்கை நுகருகின்றான்
பாரில் அரசாய் வலம்வருவான்.

Further reading:

http://zeenews.india.com/news/india/pakistan-prints-more-indian-currency-than-its-own-rupee_1947873.html

Pakistan prints more Indian currency than its own
 rupee!





As per Deputy Chief Minister of Jammu and Kashmir, Nirmal Singh, Pakistan prints more Indian currency than Pakistani currency.



கம்முநாட்டி, பொம்முநாட்டி

கம்முநாட்டி,  பொம்முநாட்டி என்பன சிலர் பயன்படுத்தும் வடிவங்கள்.
இவை எங்ஙனம் அமைந்தன என்பதை இதுகாலை உணர்ந்துகொள்வோம்

இவ்வழக்குகள் உலக வழக்கில் உண்டெனினும் இலக்கிய வழக்கில் அருகியே வந்துள்ளன  .    ஓர் திரைப்பாடலில்

நீ எல்லாம் தெரிஞ்ச பொம்முநாட்டி,  நான்
ஒண்ணுமே தெரியாக் கம்முநாட்டி

என வருவது நீங்கள் கேட்டிருக்கலாம்.

கைம்பெண்டாட்டி என்பதே கம்முநாட்டி என்று திரிந்தது என்று சொல்வர்.
இதில் கைம்பெண்டா என்பது "கம்முநா" என்று திரிவது வியக்கத்தக்கது
ஆகும்,

கைம்பெண்டு+ ஆட்டி என்ற வடிவத்திலிருந்து புறப்படாமல், பெண்டு என்பதற்குப் பதில் பெண்ணு என்பதை மட்டும் கருதினால்,

கைம்பெண்ணு + ஆட்டி =  கம்முணு + ஆட்டி = கம்முநாட்டி அல்லது
கம்முணாட்டி என்பது எளிதாகிறது.

பொம்முநாட்டி என்பது, பெண்+முன்+ ஆட்டி = பெம்முநாட்டி > பொம்முநாட்டி என்று அமைந்தது.

இச்சொல் (பொம்முநாட்டி)  என்பதன் முந்து வடிவம் பெண் முன் ஆட்டி ( பெண்முன்னாட்டி) என்பது சரியானால்  அது பெண்கள் ஒருகாலத்தில் முன்னணி வகித்ததைக் காட்டுகிறது.  பெண்முன் என்பது பெம்மு என்றும் பின்னர் பொம்மு என்றும் திரிதல் பொருந்துகிறது.  பெண்மான் என்ற கூட்டுச்சொல்லும் பெண்மா(ன்)> பெம்மா  > பொம்மா என்று திரிதல் எளிது.  ஆனால் இவ்வுலகவழக்குச் சொல்லில்  பொம்மு-நாட்டி என்று வருவதால் மான் என்பது பொருந்தவில்லை.  ஆகவே பெண்முன்னாட்டி என்பதே மூலச்சொல்லாக இருந்திருக்கவேண்டும்.

கட்டப்பொம்மன் என்ற பெயரில் மூலப்பெயர் கட்டைப்பொம்மையன் என்பதாக இருந்திருத்தல் கூடும்,  பொம்மை என்ற பெயர் வழக்கில் உள்ளது, பொம்மையன் என்பது பொம்மன் என்று திரிந்தது எனலாம்,  இந்தப் பொம்மன் பெண் என்ற சொல்லுடன் தொடர்பற்றது என்பது தெளிவு.  பெருமான் என்ற சொல்லும் பெம்மான் என்று திரிவதால் கட்டைப்பெருமான் என்பதே கட்டப்பெம்மான், கட்டப்பொம்மான், கட்டப்பொம்மன் என்று திரிந்ததென்று சொன்னாலும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
 


ஆட்டி என்பது ஆள்+தி என்று பிரிவதால்,  இச்சொல் பெண் குழுவினர்க்கதிகாரிகளைக் குறித்து,  இப்போது பொதுப்பொருளில்
வழங்குகிறது என்பது தெளிவு. பெண்களுக்குப் பொறுப்பதிகாரி, கைம்பெண்களுக்குப் பொறுப்பதிகாரி என்று சொல்லுக்கேற்ப  வரும்.
அரண்மனைகளில் வழங்கிய சொற்கள் இவை எனலாம்.

இங்கு வரும் "ஆட்டி", சீமாட்டி, பெருமாட்டி என்பன போலும் அமைந்த வழக்காம். பின் பொருள் இழிந்தன.

பெண் என்பது மட்டுமே குறித்தல் நோக்கமயின், ஆட்டி என்பது
தேவையற்றதென்பது அறிக. சொல் இழிந்தமைக்குக் காரணம், ஆடவர்
தாழ்த்தி எண்ணியதே என்க‌

பெண்டாட்டி என்பது பெண்+து+ ஆட்டி ஆகும்.  து = உரிமை குறிப்பது.
பெண்ணுக்குரிய தன்மையை ஆள்பவள் என்பது பொருள். குடும்ப நலம்
கருதுபவள் எனல். கருத்து.

இச்சொற்கள் கம்நாட்டி, கம்மநாட்டி,  பொம்நாட்டி, பொம்மநாட்டி என்று
பலவாறு நாவொலிப்புப் பெறுகின்றன.


சனி, 24 டிசம்பர், 2016

Merry Christmas தினம்

நேசம் உலகில் பரப்பும் நிமிர்ந்தநல்   நெஞ்சுணர்வோர்
ஏசு பிரானை இறைமகன்  என்று தொழுந்தகையார்
மாசிலர்க் காடியும்  பாடியும் மாநிலம் மாணுறவே
ஓசுயர் ஏசுவின் தோற்றத் தினம்பெறு   வாழ்த்துகளே..

கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்


நிமிர்ந்தநல்   நெஞ்சுணர்வோர் =  நேர்மையான இதயம் உடையோர்.
தோற்றத் தினம் =  பிறந்த தினம் .
ஓசு =   புகழ் , கீர்த்தி . ஓசு உயர் =  புகழால் உயர்ந்த .

தினம் :  தீ  அல்லது வெளிச்சம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து அமைந்தது என்ப .

தீ + இன் + அம்  =  தினம் . (தீ  குறுகி தி ஆனது )
இகரம் கெட்டது .
சாவு > சவம்  என்று குறுகுதல்  போல்.
.  

தாக்கிக் கொலை விட ஊசியாற் சாவென

உயர்நிலை நல்லம்மை யார்மறை வெய்திய நேர்வதனால்
நயமன்றி வேறு கருதுவர்  அல்ல‌ராம் தொண்டர்சிலர்
கயமையர் தாக்கிக் கொலைவிட ஊசியாற் சாவெனவே
அயிருறு சொல்லுரை மேவினர் உண்மைக் கயல்படுமே.


மருத்துவர் சொல்லுக்கு மாற்ற முரைத்தல்
பொருத்தமில் ஏலா துலகு.

பொறுத்திருந்து பார்த்திடில் புன்மையர் உண்டேல்
உறுத்திமனம் உண்மை வரும்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

தங்கத்துக்குப் பெயர் வந்தது............

தங்கத்துக்குப் பெயர் வந்தது அது தகதக என்றிருப்பதனால் என்று
கூறுவர்.

தக ‍தக ‍>  தங்கம்.

இதிலொரு ஙகர ஒற்றும் மகர ஒற்றும் தோன்றியுள்ளது.

தக+ அம் = தங்கம்.

ஒப்புமை: பகு+ அம் =  பங்கம்.(  பொருள் :   பகுதி கெட்டது.)
பக்கம் என்பது மற்றொரு முடிபு.  பொருள் வேறுபடுவது.

செலவாகாமல் தங்கும் தகுதி உடையது தங்கம் எனப்பட்டது என்றும்
கூறலாம். பொன்னாகவும் தங்கமாகவும் சேர்த்துவைப்பதற்கு இதுவே
காரணம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

கைப்பணம் கள்ளமோ

கைப்பணம் நல்லதோ
கள்ளமோ  எப்போதும்
எண்ணார்பேர்  இந்தியர்  என் !

சட்டியோ ஓட்டை
எனின்என்ன  நன்குகொழுக்
கட்டைவெந்   தாலே சரி

கள்ளமே  ஆயினும்
காய்கறி கிட்டினால்
உள்ளமே பூரிப்  பவர் ..


என் = என்று சொல்க .

துருவும் துர்~ முன்னொட்டும்.

துருவும்  துர்~ முன்னொட்டும்.

கணிய (சோதிட) நூல்க‌ளில் ஓர் கிரகம் துர்ப்பலன்கள் கொடுக்கும்
இராசிகள் என்று கணக்கிடுவார்கள். இப்போது துர்‍~  என்ற முன்னொட்டினை  ஆய்வோம்.

இரும்பு துருப்பிடிக்கிறது. அதைத் தினமும் தூய்மைப்படுத்தியோ, அல்லது எண்ணெய் முதலியவற்றை இட்டோ அப்படி ஆகாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.  துரு, இரும்பு கெட்டுப்போவதைக்
குறிக்கிறது.  ஆகவே, துரு என்பதற்கு கெடுதல் என்ற பொருள் ஏற்பட்டது.

இது பின்பு ஒரு முன்னொட்டாக மாறித் துர்‍~ என்று சுருங்கிற்று.

துர்ப்பலன்
துர்ப்பாக்கியம்
துர்குணம்


எனப் பல சொற்களில் முன் ஒட்டிக்கொண்டு, கெடுதல் என்ற பொருள் தந்தது.

வேண்டாத துருவின்மூலம்  வேண்டியதோர் முன்னொட்டு மொழிகட்குக் கிட்டியது  வரவேற்றற்குரித்தானதோர் வளர்ச்சியே ஆகும்.

துரு என்ற அடிச்சொல் தமிழோ  ?  பின் கூறுகிறோம்.

க வுக்கு ய நிற்றல்

சில சொற்களில் ககரத்திற்கு யகரம் மாற்றாக வருமென்பதை முன்
ஓரிரண்டு இடுகைகளில் எழுதியுள்ளோம். அவற்றை மறந்திருக்க மாட்டீர்கள்.

கோலியன்  (  நெசவு செய்யும் தொழிலன்)  . இவனைக் குறிக்கும்
இச்சொல், கோலிகன் என்றும் திரியும் என்பதை மறத்தலாகாது.

அதிகமான் =  அதியமான் முதலிய சொற்களில் க வுக்கு ய நிற்றல்
முன் இடுகைகளில் சுட்டப்பெற்றது.

ஆனால் தேகம்  தேயம் என்று வருதலில்லை .

கோவிட்டு து விகுதி

இப்போது கோவிட்டு என்ற சொல்லை ஆய்வுசெய்வோம்.

பல சொற்கள் தமிழில் ‍து விகுதி பெற்று முடிந்துள்ளன. கைது என்ற இந்தக் கால வழக்கில் உள்ள சொல் மட்டுமன்று, விழுது என்ற பழந்தமிழ்ச் சொல்லும் கூட இவ்விகுதி பெற்றுள்ளது காணலாம்.

கோவிட்டு என்பது சாணியைக் குறிக்கும் சொல். இதுவும் து விகுதி பெற்று முடிந்த சொல் ஆகும்.

கோ =  மாடு.
விள் + து =  விட்டு.

விள் என்பது விடு என்பதன் மூலச் சொல் ஆகும்.  விள் >  விடு.
சுள் > சுடு என்பதுபோல. நள் > நடு என்பதும் அது,  நள்ளிரவு ‍=  நடு
இரவு எனக்காண்க.  சுள் > சுள்ளி; சுடு > சுடலை என்பனவும்
அறிதற் பாலன.

விள் > விட்டை என்பதும் ஒப்பு நோக்குக.

கோவிட்டு என்ற கூட்டுச்சொல்லில் விட்டு என்பது தமிழ்.

பிற்சேர்க்கை  21102021 1725:

இங்கு கூறப்பட்ட கோவிட்டு என்பது வேறு.  கோவிட்19 என்ற நோய்க்கிருமிப் பெயர் வேறு.  கிருமி என்பது  கரு என்ற சொல்லினடிப்  பிறந்து,  கிரு என்று திரிந்தது. எ-டு: கரு> கிரு> கிருட்டினபட்சம் ( நிலவின் இருண்ட பக்கம்).  கிருஷ்ணன் என்பதும் கரு>கிரு>கிருஷ்ணன் என்பதே. தமிழில் திரிபின்றி வருவது கருப்பன் என்ற சொல். அதாவது:  "கருப்புசாமி". "கருப்பையா" என்பது. இது அயலில் கிருஷ்ணசாமி, கிருஷ்ணையா என்று வழங்கும்.

புதன், 21 டிசம்பர், 2016

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍

அழகான சுழியனிதே ஐயப்பா ‍‍===என்மேல்
அன்பாக அனுப்பிவைத்தாய் ஐயப்பா.
மெழுகாக உருகிப்பாடி ஐயப்பா === முடிவில்
மேலான சுவைவழங்கும் ஐயப்பா.

உளமார மக்கள்போற்றும்  ஐயப்பா === நீ
உலகோரைக் காக்கவேணும் ஐயப்பா;
தளமாகச் சபரிகொண்ட ஐயப்பா === நீ
தரவேண்டும் சமர்நிறுத்தம் ஐயப்பா.

இன்று ஐயப்ப பத்தர் தந்த சுழியன் உண்டபின் பாடியது 

திங்கள், 19 டிசம்பர், 2016

தமாஷ். how derived

தாம் மகிழ்வது நடந்தால் அதுவே கேளிக்கை. இதைத் தமாஷ்  என்றும்
சொல்வர்.

இது ஒரு கடுந்திரிபு ஆகும்.  பிறமொழி பேசுவோரால் திரித்து
அமைக்கப்பட்டது.  (உருது  பேசுவோரால் ).

தாம் மகிழ்  > தாமகிழ்.

இதில் மகி என்ற இரண்டெழுத்துக்கள் மா என்று நீண்டது.  பகுதி > பாதி
என்பதைப் பின்பற்றியது.

தா மா ழ் =  தாமாஷ் > தமாஷ்.

தா  > த   ஆனது.
மகி  >  மா ஆனது.
ழ் = ஷ் ஆனது.

தாம்மகிழ் என்பதன் உருவாக்கத்தை சுருங்கச் சொல்வதானால்:

முதலில் ழ் > ஷ் ஆக்கவும்.  ஒரு மகர ஒற்றை நீக்கவும்.

 தாமகிஷ்.

மகி என்பது ஒலி தட்டுப்படுவதுபோல் இருப்பதால், நீரொழுகுவது போல‌
ஆக்க:

தாமாஷ் ,   ( மகி > மா என்று மாறவேண்டும். )  ----->  தமாஷ் .

ஆக, சொல் படைக்கப்பட்டது.























கேளிக்கை.



கேளிக்கை

சில சொற்களில்  அகரத் தொடக்கமான சொல், ஏகாரத் தொடக்கமாகத் திரியலாம். அல்லது வேறு உயிரெழுத்தாகவும் திரியக்கூடும். இதைப் பல ஆண்டுகட்குமுன் யாம் தெரிவித்ததுண்டு.

இப்போது சில எடுத்துக்காட்டுகள்:

களிக்கை > கேளிக்கை.

இங்கு முன் நின்ற அகரம் ஏகாரமாயிற்று.

இதுபோன்று திரிந்தவற்றைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.
இது பற்றிய எம் முன் இடுகை அழிந்தது.

கருணா நிதிக்கு வாழ்த்து

புரட்சி     மகான் இரா      மானுசர்  போற்றி      
வரட்சி இலாத்தமிழ் வண்ண எழுத்தறிஞர்
சொல்வல்ல நற்கலைஞர் வெல்கரு  ணாநிதியார்
எல்போல நின்றொளிர்க‌ நேர்.


உள் விகுதி பெற்ற சொற்கள்.



உள் என்பது ஒரு சொல்லில் இறுதிநிலையாக அல்லது விகுதியாய்
வரும். யாவரும் அறிந்த சொல் "கடவுள்" என்பது. கட என்பது பகுதி. அதனோடு உள் சேர்ந்து கடவுள் ஆயிற்று.

ஆற்றிலேதான் தூண்டில் போட்டு
அதிலே ஒரு மீன் பிடித்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காகும் கடவுளே!

என்ற கலைவாணரின் பாட்டில் கடவுள் என்ற  சொல் நன்கு பயன்பட்டுள்ளது.

ஆயுள் என்ற சொல்லிலும் உள் விகுதி உள்ளது.  ஆ= ஆவது.  அதாவது உயிருடன் இருப்பது. ஆவது உண்டாவதும் குறிக்கும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

என்ற பழமொழியில்  ஆவது  உயிருடன் வாழ்தல் குறித்தது. பிறத்தலும் குறிக்கும்.  ஆயுள் பின் ஆயுசு என்று பேச்சில் திரிந்தது.

உள் விகுதி பெற்ற சொறகள் பல. இங்கு பட்டியலிட முற்படவில்லை.
ஒன்றை மட்டும் கவனிப்போம்.

விக்குள் என்பதே அது. இது விக்கல் எனவும் படும்.

விக்குதல் : பட்டுக்கொள்ளுதல், நின்றுபோய் மாட்டிக்கொள்ளுதல்
குறிக்கும்.  இது உள் விகுதி பெற்று,  விக்குள் என்றும் வரும்.

விக்குதல் ‍ தடைப்ப்படுதல். விக்கினம் என்ற சொல், விக்கு+ இனம்=
விக்கினமாயிற்று.  விக்குதல் என்ற சொல்லிலிருந்து இதைத் தொலைவுப்படுத்த அது >"விக்ன" எனச் சுருங்கிற்று.

வை > வய > வயந்தம் > வசந்தம்

பன்றியும் வன்றியும்.

பகரம் வேண்டிய விடத்து, மொழிமரபு கெடாமல்,வகரமாகத் திரிதற்கு
உரியது ஆகும்.  இது பலமொழிகளில் காணப்படுவதொன்றே.

பன்றி என்பது வன்றி என்றும்
பண்டி என்பது வண்டி என்றும்

திரியும்.

வசந்து என்பது பசந்த் எனத் திரிதல் பாலதே, இது பிற மொழிகளில்
வரும்.

வை > வய > வயந்தம் > வசந்தம் எனக்காண்க.

வயந்தமாலை > வசந்தமாலை.

இதை முன் பல முறை விளக்கியிருந்தும் இடுகைகள் இலபோல்
தோன்றுகின்றன.

வை  > வய  : எப்படிப் பொருந்துகிறது?

சிந்தியுங்கள் .  வந்து விளக்குகிறேன்.