புதன், 5 ஜூன், 2024

சரித்திரம்

 "இதிற் கூறப்பட்டவை திறமாகவும் சரியாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன" என்று சொல்வதுதான் வரலாறு என்பதற்கு ஒரு சொல்லமைப்பதற்காத் தரப்படுகின்ற, அன்று தரப்பட்ட -- ஒரு மேல்வரிச் சொற்புனைவு உதவி ஆகும்.  சரித்திரம் என்ற சொல்லிலே அது இன்று மோந்தறியத் தக்க மறைதிறவாக இருக்கின்றது.

சொல்லமைப்பிலே " திறம்" என்பது ஒரு விகுதியாய் வரவேண்டி யிருப்பின், சொல்லமைப்போன் அதைத்  திறம்> திரம்  என்று மாற்றிக்கொள்வான். விகுதியாக வரின், திறம் என்ற வல்லழுத்  தொலியும் இங்குத் தேவைப்படாது. அதனால்தான் சரித்திரம் எனற்பாலதை, சரித்ரம் என்று கூட குறுக்கிக் கொண்டனர் நம் பூசைமொழியில்.  இது நம் சிற்றூரான் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நுட்பம் ஆகும். புலவர்கள் சரியாகச் சொல்லவேண்டு மென்பதிலே குறியுடையோர் ஆதலின், இந்த நுட்பமான எழுபாட்டை அறிந்து கடைப்பிடித்தல் அருமையே.

எழுபாடு - இடையே எழும் நிகழ்வு.

திரம் என்ற விகுதியை பன்முறை நோக்கி விளக்கியுள்ளோம். ஒன்று இங்கே காணலாம்:

https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_63.html

பிற:

சரித்திரம்:

https://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_4550.html

சரித்திரம் சொற்பொருள்:

https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_12.html

சரித்திறம் சரித்திரம் சரிதை

https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html

இவற்றையும் வாசித்து  ( இச்சொல் வாய்+இ~த்தல்) என்பதன்  திரிபு.)   மகிழுங்கள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

Edit note: https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_17.html




செவ்வாய், 4 ஜூன், 2024

செய்வினை உலக வழக்கு.

இப்போது செய்வினை, செய்வித்தல், செபித்தல் முதலிய சொற்களை ஆய்வு செய்வோம்.

ஆக்கம்  என்பது  அவலம் எனனும் சொல்லுகு எதிர்ச்சொல் போல் பாவிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் எதுவும் பாதியில் நின்றுவிடாமல் முடிந்து பயன் தருவதாக இருக்கவேண்டும்.  செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு என்று கலித்தொகை கூறியுள்ளது. 

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ, மற்று? - ஐய! -
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
பகல் முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி;

செல் இனிச் சென்று நீ செய்யும் வினை முற்ற,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ' என்று, வருவாரை

என் திறம் யாதும் வினவல்; வினவின், 
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு.  

இது கலித்தொகையில் 19 ம்  பாடல்.  நாம் செய்துகொண்டிருக்கும் எதுவும் பாதியில் நின்று தடைப்பட்டு விட்டால் அதுதான் அவலம் என்று இப்பாடல் கூறுகிறது.  செய்வதை முற்றாக முடிக்க ஒரு திறமை தேவைப்படுகிறது.  இது " என் திறம் ( திறமை ) என்ன என்று கேட்காதீர்!" என்கின்றது.  அவலமாவது வலிமை அற்ற தன்மை. முடிக்கவும் ஒரு திறமை வேண்டும்.  அவலம்:  வலம் அல்லாத நிலைமை.  அ - அல்லாதது;  வலம் - வல் அம் - வலிமை நிலை.  இது நாம் செய்யும் எதிலும் ஏற்படுதல் கூடும்.  செய்யும் வினை முற்ற(வேண்டும்) என்பதும் கூறப்படுகிறது.

தானே ஒன்றைச் செய்தலும் செய்வினை எனப்படும். " ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை"  என்று தன் செயலால் ஏற்படும் எதையும் செய்வினை என்றும் குறள் கூறுகிறது.

ஆனால்  பேச்சு வழக்கில் செய்வினை என்று பிறர் கெட்டுப்போக மந்திரம் செய்வது, மற்றும் பில்லி சூனியம் வைப்பதையும் குறிக்கும்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்



திங்கள், 3 ஜூன், 2024

மோடி முனிவர்க்கு வாழ்த்துக்கள் Rajarishi Modi

 இந்தக் கவிதை யாம் மோடிஜி அவர்களைப் பற்றி எழுதியது. இதை எழுதியபின் எம் மடிக்கணினியின் காட்சிமேடையில்(desktop) சேமித்து வைத்திருந்தோம்.. திடீரென்று காணாமற் போய்விட்டது. சேமித்தவை பலவற்றைத் திறந்து பார்த்தும் கிட்டவில்லை.  அப்புறம் கணினியின் தள்ளுக்கூடையில் ( recycle bin) தேடிப் பார்க்கவே, எழுத்துக்கள் எல்லாம் கசடுற்று  (gibberish) ஓர் ஆவணம் இருந்தது.  இதுவாகத் தானிருக்கும் என்று அதை மாற்றுரு உறுத்தியின் மூலம் மீட்டெடுக்க முயன்ற போது இயலவில்லை. மடிக்கணினியை மூடிவிட்டு துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொண்டு படுத்து உறங்கி விட்டோம். மீண்டும் இன்று காலை திறந்து பார்த்தோம். மீண்டும் பழையபடி அங்குத் தோன்றியது. கசடுறைவுகள்  (gibberish) நீங்கிவிட்டிருந்தன.

அம்மனுக்கு நன்றி நவின்று அதை இங்கு மீள்படைப்புச் செய்கின்றோம்.


விசுவா மித்திர  மேதை மோடியின்

விவேகா நந்தரைப் போற்றிடு உளத்தால்

சிவாய என்றதும் செய்பவை முடிப்பார்

தவாநல் முன்னவர் தகவுறுத் தினர்காண்.


இவர்:


இராமரைப் போற்றுவார் இராமகி  ருட்டினர்

அறாத்தொடர் புடைய ஆத்தும  ஞானியர்

சிறார்சிசு கொஞ்சுவர். சீர்பல நயந்தே

தராதன தந்தவர் தகைமை சான்றவர்.


அவாய்நிற் பனவே அடைந்தன முழுமை

உவாமதிப் பூரணம்  ஓங்குக உலகில்;

சிவாஏசு  அல்லா சேர்அருள்  மண்டும்

நவைதீர் நலம்கூர் பாரினில் பரதம்.


மோடி  முனிவர் சூடும் வெற்றியால்

வாடா ஞாலமும் வகைநலம் காண்க.

மேடுபள் ளங்கள்  பரதகு  முகமே

வீடுற்  றுயர்ந்து  வேண்டுவ வெல்கவே.


ராசரி    சியாக   மறுவர வோங்கிய

மாசறு காட்சி  மன்னவர் மோடி

ஏசறு  நற்பயன் யாவினும் வென்ற

பாசறு மாட்சிப் பண்ணுறு மோலோர்.


அருஞ்சொற்கள்:

விசுவாமித்திரர் - உலக நண்பர் முனிவர்

தவா - தவறாத

அவாய் நிற்பன - முடியாது நிற்பவை

தகவு உறுத்தினர் - நேர்மை உணர்த்தியவர்

அறாத்தொடர்பு -  முடிந்துவிடாத தொடர் உறவு

வீடு - விட்டுவிடுதல்

வேண்டுவ - வேண்டியவை

ராசரிசியாக - இராஜ ரிஷியாக

மறுவர வோங்கிய - மறுபிறவி கொண்ட

பரத குமுகமே -  பாரத சமுதாயமே

வென்ற - பெற்றுவிட்ட

ஏசறு -  குற்றமற்ற

பாசறு - இலாபம் அடையும் சிந்தனைகள் இல்லாத


மோடிஜி வாழ்க