திங்கள், 5 பிப்ரவரி, 2024

பாத்திரம் என்ற சொல்

 பாத்திரம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

பாத்திரம் என்பது  பரவலான வாய் திறந்த ஓர் ஏனம்.

பர ( பரவலான ) திற ( வாய் திறந்த )  கொள்கலம். அல்லது அடுகலன்..

பர என்பது  பார்> பா என்று திரியும்.

இது வரு > வார்> வா என்பது போலும் ஒரு திரிபு.

இதன் திரிபை வருக, வாராய், வா என்பவற்றில் உணர்க.

திற ( திறப்பு) என்பது  திர என்று திரிந்தது.  திற என்பது இன்னொரு சொல்லின் பகுதியாய் வந்தால் திர என்று இடையினமாகும். இது பல சொற்களில் வரும்.

திற+ அம் > திரம்,  வினைச்சொல் அம் விகுதி பெற்று புதிய சொல்லின் உள்ளுறைவு ஆனது.

பாத்திரம் சொல்லமைந்து விட்டது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

பலி (பலிகொடுத்தல்)

இன்று பலி என்னும் சொல்லைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பலி என்னும் சொல்  முன் பரி என்று இருந்து பின்  திரிபு அடைந்து பலி என்றானது என்பது அறியவேண்டும்.   இது இப்போது bali என்று எடுத்தொலி செய்யப்பட்டு அயற்சொல் போல பலுக்கப்படுவதால் அயற்சொல் போல் தோன்றுவதாகிறது.  

இது தலைவெட்டப்பட்டுக் கொல்லப்படுவதைக் குறிக்கிறது.  பரித்தல் எனின் வெட்டப்படுதல்  தொடர்புடைய இடுகை:

ஆடு கோழி முதலியவாய் பலவாகக் காவல்தெய்வத்துக்கு வெட்டப்படுதலாலும் பல் என்னும் அடியிலிருந்தும் இச்சொல் விளக்கப்படலாம். ஆதலின் இது இருபிறப்பி ஆகும்.

 https://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_29.html

அறிக மகிழ்க


செவ்வாய், 30 ஜனவரி, 2024

குதர்க்கம் - சொல்

 "குதர்க்கம்" பேசி என்னை மயக்க

எங்கு கற்றீரோ?"

உனது கடைக்கண் பார்வை காட்டும்

பாடம் தன்னிலே,"

 இந்தப் பாட்டின் கடைசிக்கு முந்திய இரு வரிகளயே இங்குக் காட்டியுள்ளோம். பாடல் முழுமையும் குதர்க்கமாகவே உள்ளது.இப்படிப் பேசினால் அதைத்தான் குதர்க்கம் என்கிறோம்.

வரிக்குவரி, வாக்கியத்துக்கு வாக்கியம் பொருள் முரண்பாட்ட நிலையில் வருவதுதான் குதர்க்கப் பேச்சு.

இச்சொல் எப்படி அமைந்தது?

தர்க்கம் ( தருக்கம்) என்பதிலிருந்து குதர்க்கம் வருகிறது. இதற்குரிய வினைச்சொல்: தருதல்.

இங்குத்  தருதலாவது மற்றொன்று தருதல் அல்லது  " முரண் தருதல். '

குறு + தருக்கம் > கு + தர்க்கம்.> குதர்க்கம்

*போல* அமைந்த இன்னொரு சொல்:

பொருள்களை வரவழைப்பது வருத்தகம் எனப்பட்டது   வருத்து+அகம்> வருத்தகம்>>வர்த்தகம் இது வரத்து என்று ம் திரியும்  ( வருந்து> வருத்து பிறவினை வேறு,.)

வரவு>வரத்து ரு >ர திரிபு அறிக.

வரு> வர> வரன் (மாப்பிள்ளை)

வரு  :  இதில் இடைநிலை முன் உகரம் கெடும்

அகரம்:  இடைநிலை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்