வெள்ளி, 3 செப்டம்பர், 2021

நோய்நுண்மிக்கு எதிராக ஒன்றுபடுவோம்.

 சிங்கைப் பெருநகரிலிருந்து:


போன எமச்சளிநோய் ---  இங்கு 

புகுந்தது மீண்டுவந்தே,

மானை நிகர்த்த உலா ---- வந்தோர்

மாண்டது துன்பமையா.


என்று தொலையுமிதே ---  சனியன்

என்று மனம்பதைத்தோம்,

நன்று செயவெளியில் ---  போக

நடுங்கி அடங்கிவிட்டோம்.


மன்றுகளிற்  கூடிப்  ---  பேசி

மனித உறவுமிக,

இன்று விழைவதுவோ ---  இல்லா

ஏழையர் நாமாகினோம்.


கன்றுநல்  ஆபிரிந்தே --- படுதுயர்

கனவிலும் வேண்டாததே,

ஒன்று  படநின்றே---  இத்துயர்

ஒழித்திட ஓடிவாரீர்.  


சிவமாலையின் கவிதை.


பொருள்:

எமச்சளிநோய் ---  கோவிட்  ( முடிமுகி,  மகுடமுகி)

துன்பமையோ என்று எழுதி, இப்போது துன்பமையா என்று

வந்துள்ளது.  இதுவே நன்றாக இருந்தால் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

சனியன் என்றது இந்த நோயை.

செய -  செய்ய. (தொகுத்தல் விகாரம்).

மன்று - மக்கள் கூடுமிடங்கள்.

மனித உறவு -  படக்காட்சி அது காட்டப்படும் கூடங்களில் பார்த்தல்,

விளையாhttps://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.htmlட்டுத் திடல்களில் கூடல்,  உணவகங்களில் கூடல் முதலிய

தொடர்புக் கூடுகைகள்.

ஏழையர் -  எளியவர்கள்.

கன்றுநல் ஆ  -  பசுவைக் கன்று (பிரிதல்),  இறத்தல் முதலியவை.


சனி ( சனியன்  ஆண்பால் விகுதிபெற்றது  மக்கள் பயன்பாட்டில்). இதுபற்றிய இடுகை உங்கள் வாசிப்புக்கு:

தனி -  சனி  திரிபு.

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_3.html

https://sivamaalaa.blogspot.com/2021/06/blog-post_24.html

தங்கு > சங்கம் திரிபு

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_46.html



கோவிட் நிலவரம்

 [Sent by Gov.sg – 3 Sep]. 

சிங்கப்பூர்

As of 2 Sep 12pm, there are 32 persons infected with COVID-19 who are seriously ill. 27 require oxygen supplementation and 5 are in ICU. 


As of 2 Sep 12pm, there are 187 new locally transmitted cases.


80% of our total population have completed the full regimen*.

இது தடுப்பூசி இடுதலைக் குறிக்கிறது.  


_*Received both doses or 1 dose for recovered individuals_  (தடுப்பூசி )


go.gov.sg/moh020921

வியாழன், 2 செப்டம்பர், 2021

warning on copying.

Readers please note that it is not wise to copy and republish.  If I am in error  you are also in error for copying.  How do you know I am the originator of the stuff I am publishing? If damages are claimed against me, the originator can also claim against you.  On the other hand I may have been permitted but you have not been so permitted.

We do not publish for any profit. We incur expenses.

You may use it for your study.  No problem. 

You have to be careful and protect yourself.

Wish readers all the best.