திங்கள், 17 ஜூன், 2019

கரு என்ற அடிச்சொல். also மயானம்

கரு என்ற அடிச்சொல்லைப் பற்றி உரையாடுவோம்.  இதிலிருந்து சிந்தித்து அறியத்தக்கவை பல.  அகரவரிசை அல்லது அகர முதலாய் ஆதலுற்ற  சொற்சேமிப்பு நூலிலிருந்து  ( அகர ஆதியிலிருந்து_) அறிய முற்பட்டால் கோழிமுட்டையேனும் கிட்டுவதில்லை.

கரு >  கருது > கருதுதல்.  ( ஒலி எழுப்பாமல் உள் எண்ணி அறிதல் )
கரு >  கரைதல்  (   மாவு கரைதல்,  மண் கரைதல்,  காக்கை கரைதல், )  கரு + ஐ..

கரு+  இ +  அம் =   காரியம்  (  கருதிச் செய்யும் செயல் )

கரு + அண் + அம் =  காரணம்

கரு +  அண் +  இ =   காரணி.

கரு என்பது இச்சொற்களில் பலவினும் கார் என்றும் திரிந்தது.

கருமேகம் =  கார்மேகம்.
கார்முகில்;  கார்காலம்.
கார்மழை

ஒன்றைக் கருதி உள் நெய்போலும் உருகினால்

கரு +  உள் + நை   கருணை.  இது ஒரு புனைவுச்சொல்.

நெய் =  நை.
நெய் +  அம் =  நேயம்.   நெய் போலும் உருகி இணைதல்.

நெய் என்ற சொல் உருகி இணைதலையே குறிக்கும்.  நெய்யும் அப்படி இணைவதாலே அப்பெயர் பெற்றது.
 

நீரால் கரைதல் உடைய நிலங்களும் நெய்தல் எனப்பட்டன.

1.  https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post_54.html

2   https://sivamaalaa.blogspot.com/2017/07/blog-post_15.html

3  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_87.html  கருணை.

இவற்றையும் வாசித்து  (  வாய் > வாயித்தல் >  வாசித்தல்:  யி > சி. )  அறியவும்.

நெய் >< நை போலும் உறவு உடையதே  மய் > மய > மை என்பதும்.  இரு அல்லது மேற்பட்டன மயங்கிக் கலப்பதால் உருவாவதே மை.

மய+ ஆன + அம்=   மயானம்  ( புனைவு)
பலரும் கலந்து உறங்கும் அல்லது எரியூட்டப்பெறும் இடம்.

மய் > மய > மை.   மையம் என்பதும் அது.

இனி மாய் + ஆன + இடம்=  மயானம்.  மாய்ந்தோரை இடும் இடம்.  மாய் என்பது மய் என்று குறுகிற்று எனினும் அமைவதால் இது இருபிறப்பி

சொற்களிடை உள்ள உறவினை ஆய்ந்தறிவோனே அறிஞன்.

நெயவு?

பிழைத்திருத்தம் இனி. வேண்டின்.



சனி, 15 ஜூன், 2019

அந்தித்தலும் சந்தித்தலும்.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாகத் திரியும் என்பதைப் பல இடுகைகளில் முன்னர் கூறியுள்ளாம். இவை மறுதலிக்க இயலாச் சான்றுகள் உடையவை.

எடுத்துக்காட்டு:   அமணர் >   சமணர்.
அட்டி >  சட்டி.  அடுதல்:  சுடுதல். சமைத்தல்.   அட்டி என்பது வழக்கிறந்த சொல்.

அந்தித்தல் என்பது சுட்டடிச் சொல்.   இதில் அகரம்  அ எனற்பாலது,  அங்கு என்று பொருள்படுவது.

இங்கிருப்பது அங்கு சென்றால் அங்கிருப்பதனோடு கூடுதலும் உளது. அங்கு ஏதுமின்றி எதிலும் கூடாமல் ஒழிதலும்  அதாவது முடிதலும் உண்டு.

எதையும் சொல்பவன் அங்கு என்பதுடன் வேறு எவ்விடத்தையும் மேலும் குறிக்காமல் கருத்தினை முடித்துவிடுதலும்  இறுதியையே அறிவிக்கும்.

அ >  அன் >  அன்+ து >    அன்று ( உண்மையில் இது அந்து என்பதன் வேறன்று, சொல்லாக்கத்தில்.)

அ > அன் து :  அந்து ( புணர்வற்ற  எழுத்து மாற்று ).
அ > அன் து :  அன்று  ( புணர்வின் காரணமான திரிபு).

அந்து என்பதை ஆங்கில எழுத்துக்களால் வரைந்தால் அன்`து என்றே வரும்;  அந்து என்பதும் வேறன்று.   0ன் =  ந்.

அங்கு போய் மற்றொன்றுடன் இணைந்தால்  அதுவே  அந்தித்தல்.  இதுபின் சந்தித்தல் என்று மாறிற்று.

அங்குபோய் எதனுடனும் கூடாமல் முடிதல் அந்துதல்.    அன்றுதலும் அது.

அன்று என்பதும் முடிந்த நாள்.  இந்நாள் எதனுடனும் கூடாமல் முடிந்தது.

அ இ என்பன சுட்டுக்கள்;  அன்,  இன் என்பன சுட்டு வளர்ச்சி.   இன்னென்னும் இறுதி ஏற்றன.  இது  (ன் என்பது மொழியில் பண்டை விகுதியாகும்).

நீ > நீன்  > நீனு என்பதில் 0ன் என்பது ஒரு விகுதி.   0னுவில் ஏறிய உகரம் ஒரு சாரியை.

யா >  யான் என்பதிலும் இன்னொற்று ஒரு விகுதியே.

மா =  விலங்கு;
மா > மான் என்பதில் 0னகர ஒற்று விகுதியாகி ஒரு புதிய சொல்லைப் பிறப்பித்தது.

கா =  காடு;   கா> கான் ( காடு என்பதே).  விகுதி பெற்றும் பொருள் மாறாமை.

சந்தித்தல் என்பதன் சொல்லாக்கம் உணர்க.

பழைய இடுகை அந்து என்பதையும் வாசிக்கவும்.  https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_70.html


பிழைபுகின் திருத்தம் நிகழும்.

வெள்ளி, 14 ஜூன், 2019

வீட்டுக்குச் செலவு மனத்துக்கு அமைதி.

வீட்டு  முகப்பு  நாட்டும் அழகை நல்கிடாவிடில்
காட்டும் பணத்தைக் கணக்கி னின்று வெளிக்கொணர்ந்திடாய்.

ஓட்டில் புதுமை சுவரில் புதுமை ஓங்கும் புதுமைகள்
கூட்டும் வண்ணம் கட்டு மானம் உதிக்கச்செய்திடாய்

கனிந்த மனத்துத் திணிந்த அமைதி காலம்காலமாய்த்
தணிந்தி டாமல் தகுதி காணச் செலவுசெய்குவாய்.