வெள்ளி, 15 மார்ச், 2019

பன்றி வருடத் தாக்குதல்கள்

பன்றி வருடத்தில் நன்று வருமென்றால் 
ஒன்று மிதுகாறும் இன்றேகாண்--- சென்றவை,
கொன்றதும் மூச்சுமே   நின்றதும் போகட்டும்,
நன்றே வருக இனி.

இந்தப் பன்றி வருடம் / ஆண்டு என்பது பல கொடூரங்களைக்
கொண்டுவந்துள்ளது. அவை உங்களுக்குத் தெரியும்.
அவற்றை வரணனை செய்தல் தவிர்ப்போம். மறப்போம்.
இல்லையென்றால் சோகத்திலிருந்து தப்பமுடியாது.
கவலையே மிஞ்சும். இனி வருவது நல்லதாகட்டும்
என்பது இப்பாடல்.

யாப்பு:  மோனைகளைக் கையாளாமல் பெரிதும்
எதுகைகளாலே ஆக்கப்பட்டுள்ளது இப்பாடல்.
எதுகைகள்:  பன்றி, நன்று, ஒன்று, இன்று,
கொன்று,  நின்று, நன்று என்பன.

இது நேரிசை வெண்பா. ஒரு சீன விளம்பரத்தைப்
பார்த்தேன். அது இது பன்றி  ஆண்டென்பதை நினைவு
படுத்தியபோது இப்பாடல் முகிழ்த்தது.  உடன்
கைப்பேசியில் பதிந்துகொண்டேன்.  வாசித்து
மகிழ்வீராக.  இவ்வாண்டில் எல்லாம் நல்லதே
 நடக்கட்டுமாக.

வருடம் சொல்லமைப்பு

வருடம் என்ற சொல்:  அறுபது ஆண்டுகளும்
மீண்டும் மீண்டும் சுற்றுச்
சுற்றாக வருபவை.  அதனால் இதன் அடிச்சொல்
வருதல் என்பதே என் ஆய்வு.  மழை குறிக்கும் வர்ஷ
என்பதும் மழை வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில்
வருவதாலே வருஷ என்று அமைந்தது. இவை தமிழ்
மூலங்கள்.  ஆண்டு என்பது ஆட்சி என்பதிலிருந்து
வருகிறது.  அடிச்சொல் ஆள் என்பது;  அது ஆளுதல்.
இனி அடுத்தடுத்து வருவதால்,  அடு> அண்டு> ஆண்டு
எனினும் ஒப்புதற்குரித்தே. அதனால் ஆண்டு என்னும் சொல்
இருபிறப்பி ஆகும்.

சோகம்

சோகம் :  இது சோர்தல் அடிப்படையில் எழுந்த சொல்.
 சோர்+ கு+ அம் = சோர்கம் > சோகம். ரகர ஒற்று
கெட்டது.  ரகர ஒற்று கெடுதல் முன் இடுகைகளிலும்
விளக்கப்பட்டுள்ளது. ய ர ல வ ழ ள பெரிதும் வீழ்வன.
தேய்ந்து அழிவது தேகம்:  தேய்+கு+ அம் =  தேய்கம் > தேகம்
ஆனது காண்க.

தேள்வை (தேவை)  துளிக்கடை (துக்கடா)

ளகர ஒற்று  மற்றும் ளகர வருக்க வீழ்ச்சி:  தேள்வை > தேவை; 
துளிக்கடை > துக்கடா. (ளி).

கொடியது ஊர்ந்து நாம் அறியாமலே வந்துவிடுகிறது.
ஆகவே கொடு ஊரம் ஆகிற்று. கொடூரம்.

நன்றி.

துக்கடா எப்படி அமைந்த சொல் தெரியுமா? கச்சேரி?

துளிக்கடை என்பது துக்கடா என்று திரிந்தது,  இதற்குப் பொருள்:  கடைசித் துளி என்பதுதான்,  ( அதாவது:  கடைத்துளி)

துளிக்கடை > துக்கடா.

இத்திரிபில் ளி என்ற எழுத்துக் குறைந்து ( இடைக்குறை )  கடை என்பதில் உள்ள டை டாவாகத் திரிந்தது.

விளக்கம்:

https://sivamaalaa.blogspot.com/2014/03/blog-post_18.html


கதம் என்றால் ஒலி.

கத்து >  கது.  இடைக்குறை.
கது  > காது  ( ஒலிவாங்கி உறுப்பு).  செவி.  முதனிலைத் திரிபு.  நீட்சி.
கது > கதை > கதா.
கது >  கதம் :  எ-டு:  சங்கதம்.
கோபத்தில் ஒலி எழுப்பப்படுவது இயல்பு.  அதனால் கதம் என்பது கோபம் என்றும் பொருள்பெறும்.  இது பின்வரவுப் பொருள்.

ஒலிபெருக்கி இல்லாத பழங்காலத்தில் பாடியவர்கள் கத்திப் பாடவேண்டி இருந்தது.

கதுச்சேரி >  கச்சேரி.

இதுவும் இடைக்குறைச் சொல்லே.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

.
 

சாத்துதல் சொல்விளக்கம்.

இன்று சாத்துதல் என்ற சொல்லை நோக்கி உணர்ந்துகொள்வோம்.

இச்சொல்லுடன் தொடர்புடைய வேறு சில சொற்களைக் கண்டு அளவளாவி யுள்ளோம். மறந்திருந்தால் நினைவூட்டிக் கொள்வதில் யாதுமொரு தவறில்லை.


https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_29.html  இங்கு சாளரம் என்ற சொல்லுடனான தொடர்பு ஆய்வுபெற்றது.



htmlhttps://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_19.html 
சாதுவன் முதலிய சொற்கள் இங்கு நம் கவனத்தைக் கவர்ந்துகொண்டன

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_6.html

இதில் ஐதீகம் என்ற சொல்லினை விளக்கியுள்ளோம்.  இவ்வுரைச் செலவின்போது சாத்துதல் என்பதும் தொட்டுரைக்கப்பட்டது.  An explanation in passing. You may find it interesting.

இந்த ஐதீகம் என்பது ஐடியா, ஐடியலாஜி  என்னும் சிலவற்றுடன் பிறவித் தொடர்புற்றது ஆம்.

இனிச் சாத்துதலுக்குச் செல்வோம்.

சார்தல் வினைச்சொல்.   சார் என்பது  சார்த்து என்றாகும். இது பிறவினை வடிவம்.  இவ்வாறாம்போது    சார் என்பதில் ஈற்று ரகர ஒற்று கெட்டுவிடும்.   ஆகவே சார்த்து > சாத்து ஆகும்.

ஒரு கதவைச் சாத்துகையில்  திறந்தவாறுள்ளதைக் கொண்டுபோய்க் கதவு நிலைச் சட்டத்தில் சார்த்துகிறோம்.  ஆகவே அது சாத்துதல்.

பயன்பாட்டு வழக்கில் ஒருவனைச் சாத்து சாத்து என்று சாத்திவிட்டார்கள் என்றால்  அடிக்கும் கைகளைக் கொண்டுபோய் அவன் உடலில் சேர்த்து வலிக்கும்படி செய்தனர் என்பதே பொருள்.

உணர்பொருளைச் சார்ந்தவாறு அதன் உள்ளமைவாக இருக்கும் எதையும் அதன் சாரம் என்போம்.   இது அப்பொருளைச் சார்ந்தது என்பதே அர்த்தமாகும்.

மின்னியலில் அதைச் சார்ந்துள்ள அல்லது உள்ளுறைந்த ஆற்றலை மின்சாரம் என்றனர்.  அதாவது மின் ஆற்றல் சார்ந்தது என்பது அர்த்தமாகும்.

சார் > சாரம்.

தம்மைச் சார்ந்திருப்பவளே சம்சாரம்.  தம் > சம்.

தம்சாரம் > சம்சாரம்.  தகரம் சகரமாகும்.  யாப்பில் மோனையுமாகும்.

தூங்காதே தம்பி தூங்காதே  -
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற பாட்டில்
 தூ> சோ மோனையுமாய்   ங்  ம்  இடையின ஒன்றிவருதல் எதுகையுமாய் நிற்றல் காணலாம்.

சார் > சாரை.  பாம்பு வகையில் தன்வலிமை குறைந்த ஒரு பாம்பு.

சாரீரம் :  தொண்டையைச் சார்ந்தவாறு ஈர்க்கப்படும் ஒலி.  சார்ந்து ஈர்த்தல். 

will review for typos


.