வீடற்றார்
தாம்பெறுவார் கோடி வீடு;
விடியலுக்
கெழுந்ததுபா ரதமே நாடு:
ஓடற்ற
குடிசைகளில் துன்பம் விஞ்சி
ஓய்ந்தயர்ந்த
மக்களுக்கோர் நல்ல காலம்;
நீடுற்ற
பலநன்மை நீங்கி டாத
நேர்த்தொண்
டர் நிமிர்நெஞ்சர் மோடி பாதை
ஈடற்ற
நன்முறையில் ஏற்றும் ஜெட்லி
இவ்வுலகில் நிதியமைச்சர் தம்மில் மேலோன்மோடி உறுதி
பெருமைக் குரித்தான பண்பாடிதே---- அறிந்து
பெருமிதம் கொள்கிறேன் மோடிசொன்னார்.
அருமை அருமையே பாராட்டினார் --- தமிழ்
அரசுடன் கூடல் செயலிலென்றார்.
உறுதுணை யாமினித் திட்டங்களில் ---நிற்பேன்
ஒன்றாய் வளர்ந்திடும் இட்டங்களில்;
உறுதியே மாநிலம் மேல்வளரும் --- இனிக்
குறிதவ றாதெனக் கூறிவைத்தார்.