தாய் தந்தையரிடமிருந்து நாமறிந்துகொண்டது தெய்வத்தை. தெய்வம் உயர்திணைச் சொல்லாலும், அஃறிணை வடிவச் சொல்லாலும் சுட்டப்படலாம். தெய்வம் என்ற சொல்லுக்குத் திணை இல்லையாயினும் அது அஃறிணை என்றே கொள்வர். அது என்றும் சுட்டுவர். பொருளில் உயர்திணையாவது அச்சொல். தமிழில் திணை, சொற்சுட்டுப் பொருளுக்கு என்க.
நாம் இப்போது கவனிக்கப் போவது கடவுள், தாய், தந்தை ஆகியோரையே ஆகும். தாய் நம்மை ஈன்றவள் ஆயினும், இறைவன் தாய்க்கு முன்னாகச்
சொல்லப்படும். அதனால் அவனுக்கு "முந்தன்" என்ற சொல் அமைந்தது.
தன் தாய் தந்தை இருவருக்கும் முந்தியோன் என்பதாம். முன் குந்தியிருப்போன் என்ற பொருளில் " மு+ குந்தன்" (முகுந்தன்) எனவும்
படுவான். குந்து > குந்தன். குந்துதல் அமர்தல். மு> முன். கடைக்குறைச் சொல்.
தாய் என்ற சொல், தம் ஆய் என்பதன் குறுக்கம். த(ம்) + ஆய் = தாய். இங்கு த் + ஆய் = தாய், இதில் அகரமும் மகர ஒற்றும் போயின.
தாய் இறைவனுக்கு அடுத்து.
தாய்க்குப் பின் அப்பன், அவன் பின்+ தாய். பின்னால் வரும் தாய்போன்றவன். பின் தாய் என்பதன் இரு ஒற்றுக்களும் மறைந்து, பிதா என்பது அமைந்தது.
முந்தன் தாய் பிதா