சனி, 20 செப்டம்பர், 2014

குள் >.etc..... and குளிகைகாலம் ‍‍

குள் என்ற அடிச்சொல் குட்டை, குள்ளை (குள்ளையன், குள்ளைச்சி) என்று நீளக் குறைவைக் குறிக்கும் சொற்கள் பலவற்றைப் பிறப்பித்துள்ளமை முன் இடுகைகளில் கண்டோம். அதனால் குள் என்பதற்குக் குட்டைத்தன்மை ஒன்றே பொருளெனல் கூடாது. வேறு பொருள்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக:

குள் > குளிர், குளிர்தல், குளிர்ச்சி.
குள் > குளியல், குளித்தல்.
குள் > குளு > குளுகுளு ,  குளுமை.

குள் > குளம்.

குளிகைகாலம் ‍‍ ‍

குளித்தல் என்பது மாந்தன் மீண்டும் மீண்டும், நாள்தோறும்,  அல்லது காலை மாலை செய்ய வேண்டிய செயலாகின்றது. உடல் வெப்பமடையும் போது அதனைக் குளிர்விக்க வியர்வை முதலியவை அடிக்கடி தோன்றுகிறது.  அதனால் மறு நிகழ்வுக்கு "குளி" என்பதிலிருந்து குளிகை என்ற சொல்லை ஆக்கியுள்ளனர்.
நற்காரியங்கள் மீண்டும் மீண்டும் வரவேண்டும். குளித்துத் தூய்மை செய்துகொள்ளல் போல. உடலைக் குளிர்வித்துக்கொள்ளவும் வேண்டும்.
அப்போது தட்பவெப்பம் சமன்படும்.

மேலும் குள் என்பது குட்டையையும் குறிக்கும். குளிகன் என்னும் கோள் தோன்றி  ஒன்றரை மணி நேரமே நீடிப்பதால், இது குறுகிய நற்காலமும் ஆகும். மீண்டும் மீண்டும் நடக்கவேண்டிய நற்செயல்கள் நடத்துதற்குரிய காலமாம்.

குளிகை என்பது மிகவும் அருமையாக அமைந்த சொல்லாம்.

Muslim law for non-Muslims in Malaysia says Balasubramaniam!


திருடராய்ப் பார்த்துத் திருந்தும்வரை காத்திருக்காமல் 
திருட்டுக் கைகளை வெட்டி வீசுவீர்  திருவுடையோரே!

மனித வரலாறு என்பதோ
இனிதான பல கட்டங்கள் தாண்டி
கசப்பான பல கட்டங்கள் கடந்து
இன்று வந்துவிட்டோம் இங்கே!
இனி எங்கு செல்வது ? என்ன செய்வது?

இதைப் பாருங்கள்:

http://www.thestar.com.my/News/Nation/2014/09/20/PAS-supporters-club-Hudud-for-all/


BY RAHMAH GHAZALI

KAJANG: After taking over PAS Supporters Club from Hu Pang Chow last April, the new chairman of the non-Muslim wing has reversed his predecessor’s position on the shariah laws.
Unlike Hu, N. Balasubramaniam (pic) believes that the Islamic penal code could serve as a preventive law in reducing the crime rate in the country.
“I believe that the hudud law is effective for the people. It is already enshrined in the holy book, there must be a reason why it is there,” he told The Star Online at a recent interview.

Hailing from Kuala Lipis, Pahang, 56-year-old Balasubramaniam said a similar criminal law was the practice of an ancient kingdom in India and asked why there is now objection to it.

“The (criminal) law was called manu neethi sastram. It was a similar law to hudud that required offenders to have their hand chopped for stealing, or stoned to death for some other offences,” he said.

Balasubramaniam, who joined PAS in 2008, felt that non-Muslims can accept hudud if the right explanation is given.

“I have organised a number of forums with various NGOs on hudud law and they seem to be receptive to it.

“They also agreed that the Islamic penal code could bring down the crime rate significantly,” he said.

Hu’s outspokenness on the matter had seen him removed from helming the non-Muslim wing, but Balasubramaniam said this was just a part of forming a new committee.

“Hu was not sacked, but PAS merely wanted a new committee as he had held the position for four years.

“Besides, what he said about hudud was his personal views and the party could not take any action based on that,” he said.

Notably PAS has also been at loggerheads with its Pakatan Rakyat partners over its persistence on the implementation of the hudud law.

Now that he is given the responsibility of spearheading the PAS’ supporter’s club, Balasubramaniam said they will carry on with activities in the field and try to garner more members.

He said he would give himself a period of three years to prove to the party that the wing is capable of attracting new followers.

"In return, PAS should reward us with more seats in the next general elections with one non-Muslim candidate fielded in each state,” he said.

During GE13, three non-Muslim PAS candidates were fielded at two state seats and one parliamentary seat, but all were defeated. To date, the wing has 40,000 members  registered nationwide.

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

அடிச்சொல் குள் குட்டையும் கட்டையும்.

அடிச்சொல் குள்  குட்டையும் கட்டையும். 

குட்டையான மனிதனை, " அவன், ஆள் கொஞ்சம் கட்டை" என்பார்கள்.   ஆக, இதில் கவனிக்க வேண்டியது, உகர அகரத் திரிபுகள்.  உ > அ என்னும் விதிப்படி, 
குட்டை ‍> கட்டை பொருத்தமாய் உள்ளது. குகரத்தில் உள் 
ஏறி நின்ற உகரம், அகரமானது.  க்+உ  (கு)  > க் + அ  (க).

இதனை நீங்கள் பல சொற்களில் காணலாம். எ‍‍‍-டு: 

உமா (உம்மா)  <>  அமா (அம்மா) >  மா.

பெண் பெயர்களில் பின்னொட்டாக "மா" வரும்.

நாகம்மா > நக்மா.

விறகு கட்டை, இருவகையிலும் பொருத்தமானது. கடினமானது ஆதலால்.  கடு+ ஐ = கட்டை.  கட்டைகள்  நீளமாக இருப்பதில்லை. அந்த வகையில் குட்டை  > கட்டை என்பதும் பொருத்தமே.  கட்டை என்பதோர் இருபிறப்பிச் சொல் ஆகும்.