திங்கள், 26 மே, 2014

மோடி நாடிடும் அனைத்தும் நலமோடுயர்க!

மோடி பதவி ஏற்பு

(வஞ்சிப்பா)

பதவி நிற்புறுதி
படிக்கையிலே சொற்பிழ்ச்சி
பதட்டமோ ஏதுமின்றி
பண்புடனே விண்பயந்த‌
நக்கத் திரத்தினைப்போல்
ஒக்க நிற்பார் கையொலியை
உடன்பெற்ற மோடியுமே
நடமுற்றார் நம் மனத்தில்.
நல்லாட்சி வருமெனற்குப்
பல்லாற்றானும் குறிப்பே!
பிறமதத்துத் தேயங்களில்
பிறங்கிடும் தலைவர்கள்,   தம்
திறங்காணும் விதமாக‌
மதப்பித்தம் சிதல்படவே
மாட்சியுடன் மேற்செலுத்தும்
காட்சியும் புகழரிதே!

என்றிவற்றால்

கூடி வருமோர் கோடுயர் புகழுச்சி
மோடியும் மக்கள் முன்னே
நாடிடும் அனைத்தும் நலமோ டுயர்கவே.

பதவி நிற்புறுதி == பதவிப் பிரமாணம் .  விண் பயந்த -  வானம் தந்த
நக்கத்திரம் -  நட்சத்திரம்   பல்லாற்றானும் - பல வழிகளிலும் .
தேயம் -  நாடு. சிதல் - அழிவு.
என்றிவற்றால் ,   தனிச்சொல் .  பழம் பாடல்களில் எனவாங்கு என்று வரும்.
கோடுயர் -  மலை  உயர்ந்த .




ஞாயிறு, 25 மே, 2014

As long as Rajapakse is there......

நடுவண்நல் அரசின்பால் தமிழர் வேண்டும்
நல்லபல கோரிக்கை அவற்றுள் ஒன்று
கெடுவண்ணன் இராசபக்சே மோடி யோடு
கேணமையுறச் சந்தித்தல் கூடா தென்பர்!
மடுவுள்ளில் வீழாமல் இது நாள் காறும்
மதியுடனே தப்பிவிட்ட இராச பக்சே
இடுமன்றில் குற்றவாளி யாக நிற்பான்
என்றெவரும் திட்டமுறக் கூறற் கில்லை.

இத்தகைய சூழலிலே மோடி பேச்சை
எடுக்காமல் ஒதுங்குவதால் என்ன நேரும்?
ஒத்திருவர் பேசியுள்ள மாறு பாட்டை
ஒடுக்கத்தில் கொண்டுவரல் பயனுண் டென்பர்.
வித்திடுதல் இலையாயின் விளைவோ இல்லை.
வேறுபட்டு நிற்பதனால் சீர்பட் டங்கே
ஒத்துழைப்பும்  ஒருதீர்வும் இல்லா தாகும்.
ஓய்ந்தாய்ந்து பார்த்திடுதல் கடமை அன்றோ?

As long as Rajapakse is president, anything you want in Sri Lanka would have to be handled by him. Sad but true. It is the fact of  politics and diplomacy between states. Is there a way for Modi to circumvent this?

சனி, 24 மே, 2014

Busiest causeway in the world between Malaysia - Singapore

சிங்கப்பூர் ஜொகூர்ப்பாலம் உலகில் உள்ள‌
சீரொழிந்த மிகுநெரிசல் தொடர் பாம் என்று
நங்கையரும் நம்பியரும் நவிலும் போது
நானுமதை உணர்ந்துள்ளேன்! காணும் உண்மை!

கடப்பதற்கு மணி நேரம் இரண்டு மூன்று
கழித்திடுங்கள் இதைச்செலவாய் அகவை தன்னில்.
திடப்பயணம் மகிழுந்தும் பழுதொன் றின்றி
தேரினைப் போல் நகர்ந்திடுமோர் திருவே கொள்ளும்.

இனியங்கு போவேனோ எனவே வேர்த்தே
ஏற்பில்லா மனத்தோடே இயல்வோ ரெல்லாம்
கனியங்கே கிடைப்பதுபோல் மாலை நெஞ்சம்
காலையிலே திரிந்துவிடப் பயணம் செல்வார்.