வெள்ளி, 18 செப்டம்பர், 2026

அபத்தம்

 பற்று என்னும் சொல் நீங்கள் அறிந்ததே. இணக்கத்தினால் ஏற்படும் அன்புத் தொடர்பினைப் பற்று என்போம். தேவர் தம் குறளில்:

பற்றுக பற்றற்றார் பற்றினை;   அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

என்கின்றார்.  பன்மணிகளில் இக்குறளும் ஓர் ஒளிமணியாகும்.

சற்று என்ற சொல்லைப் பேச்சில் ''சத்தெ''  என்று சொல்வர்.  உச்சரிப்புப்  பங்கமுடையார்,  செத்தே என்றும் சொல்வர். அப்போது செத்தாய் என்பதனுடன் அது மாறுகொள்ளலாம்.

இதைப் போன்றே,  பற்று என்பதும்   பத்து என்று வந்து, 10 என்ற எண்ணைக் குறித்தல்போலுமே பேச்சில் வரும்.  காலில் அடி, மஞ்சட்பத்துப் போட்டிருக்கிறேன் என்பதிலும், காலில் பூசிப் பற்றி யிருக்கும் மருந்து, பத்து எனப்படும்.

பட்டினத்தடிகளும் பிறர் தூற்ற நம் மீது ஒட்டி வருத்தும் நிந்தனைச் சொற்களையும் பத்தம்  (பற்றம்) என்றே சொல்வார்.

நம்பால் எது பற்றியிருக்க வேண்டுமோ  அதுவே உரியது ஆகும்.  அதையே பற்றம் அல்லது பத்தம் என்போம்.  ஒன்று இயற்சொல். மற்றது திரிபு   ஆகும்.

குவியலில் உள்ள செத்தை, ஒன்றுடன் ஒன்று பற்றியிருந்து அசுத்தமாகும்.  அதிலிருந்து வேறுபடுத்த,  தூற்றும்பெத்தம் என்று பழைய நூல்கள் கூறும்.  ஆகவே பத்தம்--- பெத்தம், எனினும் பின்னது இந்நாட்களில் செவிக்கு வருவதில்லை.

அல் என்ற அல்லாமை குறிக்கும் முன்னொட்டு,  அ(ல்) என்று குன்றி முன்னொட்டாகும். (prefix).  அ -  எதிர்மறை முன்னொட்டு.  எதிர்மறை என்றால் எதிராக மறுப்பது.  மறு >  மறை. (தொழிற்பெயர்).  மறைதல்> மறை (முதனிலைத் தொழிற்பெயர்) என்று சற்று ஒளிவாக உள்ளதைக் குறிப்பது இன்னொரு சொல்.

அ+ பத்தம் > அபத்தம் என்ற சொல்லாம். இது சமஒலி மொழியாகிய சம+கதத்திலும் வழங்கும். சம+ கதம்> சங்கதம்> சம(ஸ்)கதம்> சமஸ்கிருதம்.

கதம் என்றால் ஒலி.  கத்து> கது > கது+அம் >கதம்>கிருதம்.  ஆகவே சம(ஸ்)கிருதம்.   ஸ் என்பது இணைப்பு ஒலி. சம(க்) கதம் என்ற வல்லொலி கடினமாகையால், சம(ஸ்)கிருதம் என்று மென்மைப்பாடு அடைகிறது. பிறர்க்கு ஒலிக்க எளிதானது.  அவ்வளவுதான். பத்தம் என்பதைப் பஸ்தம் என்றாலும் மென்மைப்பாடு தான்.  ஆனால் சொற்களில் இது இந்து வரவில்லை.

எதையும் சரிப்படுத்த இன்னொன்றைச் சேர்ப்பது என்பது பலவேளைகளில் உலகில் நடைபெறுகிறது.  சுவருக்குச் சுண்ணாம்பு அல்லது வெள்ளை போல. சேர்ப்பது பற்றிக்கொள்கிறது.   பற்று> பற்றி> பத்தி> பஸ்தி  என்றால் திருத்தம் சேர்த்தல். உறுதியாதல்.  இது மலாய் மொழியில் தொடர்புள்ள பொருளில் வழங்கும்.  இரு சட்டங்களில் ஆணி ஒன்று சேர்த்தால் உறுதி. பற்றி என்பது சொல்ல எளிதாயில்லாமையால் அவர்களுக்கு பஸ்தி என்பதே ஆமோதிக்கத் தக்கதானது  ( ஆம் என்று ஓதிக்கொள்ளத் தக்கதானது!!).

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


கருத்துகள் இல்லை: