- வரி என்னும் சொல் தொன்றுதொட்டுத் தமிழில் வழக்குச் சொல்லாக உள்ளது. வழக்குச்சொல் என்பது புழக்கத்தில் உள்ள சொல்.
- வரவு, வருமானம் என்ற சொற்களும் உள்ளன. இவை பொதுப்பொருளில் வழங்குவன. வரி என்பது வரு+ இ > வரி என்றாகும். வரு என்பதில் இறுதியில் உள்ள உ கெட்டு ( கெட்டு என்றால் நீங்கி) வர் என்றாகும், பின் இகர விகுதி பெற்று வரியாகும், இவ்வாறு உகரம் கெட்ட சொல் இன்னொன்று அறம் என்பது. அறு + அம் > அறம். அறு என்பதிலுள்ள உகரமும் கெட்டு. அற் என்று நிற்க உகரம் சென்று ற் உடன் இணைந்து ற்+ அம் > றம் என்று வந்து அறம் என்ற சொல் ஏற்பட்டது. இவை இவை செய்யவேண்டியவை, இவை இவை விலக்க வேண்டியவை என்று அறுத்துச் சொன்னதால் அறம் ஆயிற்று என்று உணரவேண்டும். வரவு என்ற சொல்லில் வரு என்பதில் உள்ள உகரம் இவ்வாறே கெட்டது. வர் என்ற மிச்சத்தோடு அகரம் இடைநிலையாகி நின்று இறுதியில் வு விகுதி பெற்று வரு+ அ + வு > வரவு ஆயிற்று
- யானைக்கு வாரணம் என்ற பெயருண்டு. இது வரு + அணம் > வாரணம். இது முதனிலை நீண்டு அண் அம் என்று இடைநிலை கலந்த விகுதி பெற்று இச்சொல் அமைந்தது. இதன் அணம் விகுதி என்று சொல்வதுண்டு. கட்டவேண்டிய காசு கட்டணம் எனப்பட்டது போல. ஊர்வலத்தில் வரும் யானையை வாரணம் என்று குறித்தனர். பின்னர் இது விரிந்தது. அவ்வாறு வராமல் நிலையாக ஓரிடத்தில் கட்டிக்கிடக்கும் யானையும் குறிக்கப் பொருள் விரிவதில் வெற்றுவிரிவுதான் காணப்படும். வாரணம் பிற பன்றி முதலியனவும் குறிக்க விரிந்தது. இது பயன்பாட்டு விரிவு என்க.
- இதன்மூலம் வரி என்பதில் இகரம் கெட்டு விகுதி பெறுதல் பிறசொற்கள் ஒப்பீட்டுடன் விளக்கப்பெற்றது.
- அறிக மகிழ்க
- மெய்ப்பு பின்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வியாழன், 30 ஜனவரி, 2025
வரி என்னும் சொல்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக