ஜாதி அல்லது சாதி என்பது ஏற்கெனவே மக்களிடம் பயின்று வழங்கிய சொல்லாதலால், ஜாதிப்பிரஷ்டம் என்ற கூட்டுச்சொல்லில் பிரஷ்டம் என்ற சொல்லையே முதலில் கவனித்து அறியவேண்டும்.
பிறழ்த்தல் என்பது பிறழவைத்தல். பணிதல் > பணித்தல் என்பவற்றில் பணித்தல் என்பது பிறவினை என்று இலக்கண நூல்கள் கூறும்.
குறைதல் என்பதிலிருந்து வரும் குறைத்தல் என்பதுவும் ஒரு பிறவினை தான். இவ்வாறு மூலவினையிலிருந்து பிறவினையை நீங்களே அமைத்துக்கொள்ளலாம். உரைத்தல் என்பதுவும் ஒரு பிறவினைச் சொல்தான் என்றாலும் வெகுகாலமாக உரைதல் என்பதைக்காட்டிலும் உரைத்தல் என்பதையே நாம் மிகுதியாக வழங்கி வந்த காரணத்தால், உரைத்தல் என்பது தன் தன்வினைத்தன்மையினின்று நீங்கி மூலவினைபோன்று தோற்றமளிக்கின்றது. சொற்களும்கூட இவ்வாறு தன் பிறப்புக்கொப்பத் தோற்றாமல் மூலவினைபோலும் தோற்றத் தொடங்கும். "மொழிபொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்று தொல்காப்பியனார் கூறியதற்கொப்ப அதை உங்கள் நுண்மாண் நுழைபுலம் கொண்டு நீங்கள் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டியதுதான்.. எல்லாவற்றையுமே அகராதியில் எழுதி வெளியிடுவதென்றால் பக்கங்கL மிகுதியாக, அச்சுக்கூலியும் ஏட்டுக்கட்டு விலையும் கூடிப்போகும்.
ஒரு சீனமாணவர் தமிழ்ப் படிக்கப்போய், நடிக்கிறேன் என்பதை அகராதியில் தேடினதுபோல் ஆய்விடும். கிறான், கிறாய், கிறவன் என்பவான முடிப்புகளை யெல்லாம் தாமே படிப்போர் அறிந்துகொள்ளவேண்டும்.
lapor என்பதிலிருந்து வரும் melaporkan என்ற மலாய்மொழிச் சொல்லை சில அகராதிகள் சொந்தமாக உணர்ந்துகொள்ளும்படி விட்டுவிடும்;
இவ்வாறுதான் (L) mensarum mensae mensam என்ற வேற்றுமை வடிவங்களெல்லாம் அகராதியில் இரா. இப்போதுதான் யாம் எழுதிய இரா என்ற சொல் அகராதியில் இருக்காது. அங்கிருக்கும் இரா என்பது இரவு என்ற பொருளுடைய இன்னொரு சொல்.
பாவம் ஒரு வேற்றுமொழிக்காரரான தமிழ் மாணவர் முன் ஒரு தமிழ் விவாதக் களத்துக்கு எழுதி ஏன் ஒருசொல் அகராதிகளில் இல்லை என்று கேட்டிருந்தார்
ஆகவே பிறழ்த்தல் என்பது ஒரு துணைவினை.
ஜாதிப்பிறழ்த்தல் என்பது ஜாதியிலிருந்து விலக்கிவைத்தல்.
This in modern administration is similar to "Interdiction" from your occupational duties.
இது பின்னாளில் ~பிறழ்த்தல், பிறட்டுதல், பிறஷ்டு(தல், பிறஷ்டம் > பிரஷ்டம் என்று திரிந்து சம்ஸ்கிருத வடிவங்கொண்டு தன் இருக்கை கொண்டுள்ளது.
பிரஷ்டம் எனப்துபோலும் அமைப்புகள் போலிச் சமஸ்கிருத வடிவங்கள்தாம்.
இதைப் புரிந்துகொண்ட தேவநேயப் பாவாணர், வடமொழி என்பது தென்மொழியின் வழிப்பட்டது எனறு தம் முதல் தாய்மொழி என்ற நூலில் சொன்னார்.. சமஸ்கிருதம் என்பது ஒலியமைப்பில் தென்மொழி சார்ந்தது என்று வங்காள மொழியறிஞர் சாட்டர்ஜி கூறினார்.
ஜாதி என்ற சொல்லின் விளக்கம் தனியாக வேறு இடுகைகளில் காண்க.
பிறழ்த்துதல் - பிற ஆக்குதல். பிறழ்த்தம் > பிறட்டம்> பிறஷ்டம் எனினுமாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக