சிமென்ட் என்ற ஆங்கிலச் சொல்லே கட்டிடம் பற்றியவற்றைக் குறிப்பிடுங்காலை நினைவுக்கு வருகின்றது. இதற்கு சுண்ணச்சாந்து என்ற பெயர் பழைய நூல்களில் காணப்படுவதாகும். உலோகங்களைக் கையாளச் சிறிது கற்றுக்கொண்டிருந்தாலும் கட்டிடங்களுக்கு காரைச்சாந்தினைப் பயன்படுத்து முறையைப் பிற்காலத்திலேதான் தமிழர் கற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது. மக்களின் வீடுகள் பெரும்பாலும் மரங்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தன என்று அறிகிறோம். அவற்றை அறுத்துப் பலகைகள் செய்ய மக்கள் அறிந்திருந்தனர். மரவேலை செய்வோர் தச்சர் என்று அறியப்பட்டனர்.
தைத்தல் > தைத்து ( வினை எச்சம்) > தச்சு > தச்சர் என்பதே இச்சொல்லின் அமைப்பு ஆகும்.
இது குறுக்கமானது என்று பொருள்படும் குச்சு என்ற குடிற்பெயர் போலும் அமைந்த ஒரு சொல். தை> த> தச்சு என்றும் அமைத்து விளக்கலாம், த என்பது தனிக்குறிலாதலின் தை என்பது அடியாகக் கொண்டால் கேட்போருக்கு நன் கு புரியக்கூடியதாய் இருக்கும்,
சுண்ணச்சாந்து என்பதினும் இறுகுசாந்து என்பது இன்னும் சிறப்பான புனைவாகலாம். எதனால் செய்யப்பட்டது என்பதினும் அதன் தன்மை என்ன என்பதைக் கொண்டு பெயரமைவதே சிறப்பானதாகும். காரைச் சாந்து என்பது பொருந்தலாம் எனினும் இப்போது சிமென்ட் மூன்று அல்லது நான் கு வண்ணங்களில் கிட்டுகிறது என்பதை நோக்க, இறுகுசாந்து என்பது பொருத்தமானதாகும், காரை என்பது கரு என்ற அடியில் தோன்றுவதால் கருப்பு நிறம் குறிப்பது ஆகும், கரு+ ஐ> காரை. இது முதனிலை நீண்டு அமைந்த பெயர். இறுகுசாந்து என்பது வினைத்தொகை ஆதலின் வல்லெழுத்துத் தோன்றாது என்பது அறிக.
அறிக மகிழ்க'
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக