பிறப்பு ஐந்து அல்லது பிறப்பு அஞ்சு என்பதிலிருந்து பஞ்சு பஞ்ச என்பவை ஐந்தைக் குறித்தது என்பதை முன்னர்க் கூறியிருந்தோம். பெரும்பாலும் வீடுகளின் முன் நின்று பாடி ஊதியம் பெற்றோர் நான் கு ஐந்து பாடல்கள்தாம் பாடுவர். அப்புறம் ஏதாவது எதிர்பார்ப்பர். காசுகள், அரிசி, நெல், மற்ற தானியங்கள் போட்டால் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்x பாடுவர். பண்டைக் காலத்தில் பாடகர்கள் இவ்வண்ணமே இந்தியாவில் மட்டுமன்று, எங்கும் நடந்துகொண்டனர். திரைப்படம் நாடகம் என்றாலும் சிறப்பான நாட்களில் அல்லாமல் பிறவற்றில் x ஓர் எல்லையுட்படும்,
நான்கு ஐந்து என்பவை முன்னர் எல்லைகளாக இவைபோல்வனவில் இருந்தன.
பண்கள் பாடுவதிலும் ஐந்து என்ற எல்லையே சிறப்பாக வந்தது. பண்சார் அல்லது பண்சால் என்பதும் பன்ச் என்றx குன்றற்குரியது,
இவ்வாறு இயல்பாகத் திரிவன இயன் திரியங்கள் ஆயின என்பதை அறிக.
கல் உண்மை இயன் திரியங்களே பின் கன்மேந்திரியங்களாய் விட்டன. கல் உண் பின் கல்மேல்> கல்மேன் என்று வருவது இயல்பினது ஆகும்.
இவை கல் அதிகப் புழக்கம் பெற்று இரும்புவராமுன்னே அமைந்த சொற்கள். கல் இரும்பு முதலியவை நம்மிடையே பிற்காலத்தில் வந்தனவா அல்லது முன்னே வந்துவிட்டனவா என்பன ஆராய்ச்சிக்குரியவை. யாம் சொற்களை மட்டுமே தருகிறோம்.. இயலும் திரியங்கள் இயல் > இயன் என்று லகரம் னகரமாகும்.
கல் கரு என்றாகும். இதை முன் எழுதியுள்ளோம். கருவி என்ற சொல் கல் என்பதனடியதாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக