கந்தல் என்ற சொல்லினை அறிவோம்.
இப்போது பன்னாட்டிலும் மக்களின் வாழ்க்கை மேம்பட்டு அரசுகள் திறம்படச் செயல்படுவதனால் கந்தல் கட்டிக்கொண்டு நடமாடுவோர் தேடிப் பிடிக்கவேண்டியவர்களாகி விட்டனர். திருட்டுகளும் பல்கிவிட்ட படியால் துணிகள் கிழிந்துவிட்டால் அவற்றைத் தையலிட்டு உடுப்பவர்கள் இலர். பூச்சி மருந்துகள் கிடைப்பதால் துணிகளில் பொத்தல்கள் விழுந்து உடுத்த முடியாமற் போகும்வரை யாரும் வைத்திருப்பதில்லை.
இரண்டாம் உலகப் போர் முடிந்து கொஞ்சக் காலம்வரை கந்தல் துணிகளைத் தைத்து உடுத்துவோர் இருந்தனர். பொருளியல் முன்னேற்றத்தால் பிச்சைக்கரர்களுக்கும் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் இடங்களை வாடகைக்கு வி
ட்டபடி பணம் சேர்க்கின்றனர் என்பது பல்வேறு காவல்துறை நடவடிக்கைகளின் மூலம் அறிந்துகொள்கிறோம்.
ஔவைப் பாட்டியின் காலத்தில் துணி பலருக்குத் தாராளமாகக் கிடைக்கவில்லை. திருடும் எண்ணமுடையோரும் குறைவாக இருந்தனர். அதனால் அவர் கந்தல் உடுத்துவோர் அதைத் துவைத்துக் கட்டுதல் நலம் என்று தெரிவித்தார். கந்தல் ஆயினும் என்றதால், துணி நல்லதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் துவைத்து உடுத்தவேண்டும் என்றார் ஔவைப் பாட்டி.
பொருளியல் நிலை சிறக்கச்சிறக்க, கந்தல் என்ற சொல் காணாமற் போகக் கூடும்.
கந்துதல் என்றால் கெட்டுப் போதல் என்பது குறிக்கும் வினைச்சொல். துணி பல்வேறு காரணங்களால் கெட்டுப் போதல் உளதாவதால் கந்து > கந்தல் என்று இச்சொல் அமைந்துள்ளது.
இன்னும் சில வழிகளிலும் இச்சொல் அமையக்கூடும். அவற்றை நீங்கள் கண்டுபிடியுங்கள். பகர்ப்பு வரைவுகள் மிகுந்து வருவதால் மற்ற வழிகளில் இச்சொல் அமைவதை இப்போது வெளியிடவில்லை.
உங்கள் மூளைக்கு வேலை கொடுத்துத் தமிழை அறிந்துகொள்க.
இன்னோர் இடுகையில் இச்சொல்லைத் தொடர்வோம் பிற அளவைகளினால்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக