ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

விரிதருதல் > விஸ்தரிப்பு. தமிழ்.

 இது  எப்படி த் தமிழென்று காண்போம் 

விரி + தரிப்பு.

>விஸ்தரிப்பு

விரிதரிப்பு என்று நாம் தந்திருப்பது  முன்னிருந்த தமிழில் விரிதருதல் என்று இருந்தது. விரிதருதல் என்பதில் தரு  என்பது ஒரு துணைவினையாக இருந்தது.

தரு என்பது தரி  என்று  இன்னொரு சொல்லாக அமைந்தது.  தரப்பெற்றதை  பெற்றபின் பயன்செய்தலை அல்லது பின்நிகழ்வை இந்தச்சொல்   குறித்தது.

இது விரிதரிப்பு என்று சிலகாலம் வழங்கியபின் விஸ்தரிப்பு என்று அயலொலி பெற்றமைந்தது, சிற்றூர்மக்கள் திரித்து வழங்கியதால் ஏற்பட்டதே ஆகும்.  உயர்த்தி-  உசத்தி  என்ற சொல் ஒஸ்தி என்றமைந்தது போல்வதே இதுவாகும்.  ஒஸ்தி என்பதில் ஸ் என்ற ஒலி,  அயலாரால்  புகுத்தப்பட்டதன்று. ஸகரம் வந்தமையால் விஸ்தரிப்பு என்ற சொல்  தமிழன்று என்று கூறிவிட முடியாது.

எனவே விஸ்தரிப்பு என்பது  விரிதருதல்,  விரிதரிப்பு என்பவற்றின் பின்வடிவமே ஆகும் என்பதறிக.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.







கருத்துகள் இல்லை: