Happy New Year to all.
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
ஞாயிறு, 31 டிசம்பர், 2023
சனி, 30 டிசம்பர், 2023
புத்தாண்டே வருக வருக!
இருபதணை இருபத்து நான்கே வாவா!
இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!
பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா,
புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா!
அறிந்தநிலை அரசியலார் வணிகவலர் ஓங்கும்
செறிந்தவள நாடுகளே புவிமிசையே வேண்டும்
தெரிந்துணர்ந்த பெருமக்கள் வருந்துவறம் கூரார்
நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும்
யாவருக்கும் எமதினிய மூவெட்டு வருடும்
நாவினிக்கும் நல் வாழ்த்து உரித்தாக்கு கின்றோம்
நோவுநொடி யாதுமிலா இன்பவாழ்வு மேவி
யாவினிலும் நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க
பொருள்:
1
இருபதணை இருபத்து நான்கே வா-வா! - வருட எண்ணிக்கையில் இருபதை அடுத்து எழுதப்படும் 24ம் ஆண்டே வருக. அணைதல் - அடுத்து இருத்தல்.
இருக்கின்றார் அனைவர்க்கும் மேன்மை தாவா!- யாவருக்கும் உயர்வு தருவாயாக
பொருவதனைப் பொருந்தாத புகழே தாவா, - போர் நடத்துதலை இல்லாத ஒரு உயர்வைத் தருவாயாக
புதுமனைகள் இலார்க்கெங்கும் போற்றித் தாவா! - வீடில்லாதவர்களுக்கு
வீட்டைக் கட்டிக் கொடுப்பாய்.
2
அறிந்தநிலை அரசியலார்- அரசாளத் தெரிந்த அரசியல்
சேவையாளர்கள்.
வணிகவலர் - வணிகத்தில் சிறந்தோர்
ஓங்கும் - மேவி நிற்கும்
செறிந்தவள நாடுகளே புவிமிசையே - வளமான நாடுகள்
தெரிந்துணர்ந்த பெருமக்கள்-- அறிவார்ந்த மக்கள்
வருந்து வறம் கூரார் - வறுமைப் பிடியில் இல்லாதவர்கள்.
வறம்கூர்தல் - வறுமை அடைதல். வறம் - வறுமை.
இவர்களுக்கு:
நிறைந்தநில வாழ்வுதனை நீவழங்க. வேண்டும் - நிறைந்த புவி வாழ்வு
கொடுக்கவேண்டும்.
3.
எமதினிய---எமது இனிய
மூவெட்டு ----மூன்றெட்டு, மூ+ எட்டு
வருடும் - பெருக்கலில் வரும். 24 எண்.
நாவினிக்கும் - நாவு இனிக்கும், சுவையான
நல் வாழ்த்து அன்பான நற்செய்தி
உரித்தாக்கு கின்றோம் - உரியதாய் ஆக்குகின்றோம்.
நோவுநொடி யாதுமிலா இன்பவாழ்வு மேவி - நல்ல உடல் நலத்துடன் இருந்து
யாவினிலும் நனிசிறந்த நல்வாழ்வு வாழ்க- மிக்க இனிமையாக வாழ்க என்றபடி
அறிக மகிழ்க.
சாட்சி - இன்னொரு முடிபு
சாட்சி என்ற சொல்லுக்கு இன்னொரு முடிபு கொள்வோம். [ முடிப்பு வேறு, முடிபு எனல் வேறாகும் ] முடிபு conclusion at end of a research ].
ஆடு> சாடு>சாடு+ சி>சா( டு)+சி>சாச்சி.
இச்சொல்லே மக்களிடை வழங்கிய, இன்றும் அருகிவிடினும் வழங்கி வருகின்ற , சொல்லாகும். எழுத்தில் இது சாட்சி என்றே வரும்.
சொல்லாக்கத்திலும் சொல்லாக்கப் புணர்விலும் வல்லின ஒலிகள் விலக்கப் படுதல் நடைமுறை ஆகும். யாம் முன்பு பல எடுத்துக் காட்டுகள் பழைய இடுகை களில் தந்துள்ளோம். பீடுமன்>பீமன்>வீமன் என்பது காண்க.
ஞாயிறு, 24 டிசம்பர், 2023
கருமவினையின் நீங்குக ( ஆசிரியப்பா)
மக்களில் பல்லோர் தக்கநல் உணவிலார்
நக்கலர் பழிக்க நைந்துகீழ் அணாவினர்.
அவர்தமை இழித்தல் வருநாள் நமக்கொரு
அவமது உணருக அதுநமக்கு இழுக்கிடும்
இனிவரும் பிறவியில் அதுபோல் கிடந்துழந்
தலைந்திடல் நிகழின் கழுவாய் உளதோ?
கருமம் இதுவென ஒருவிட அறிந்திலார்
ஒருமந் திரியும் ஊழலில் விழுந்தின்று
தெருவலி காட்டுநர் புரைமகன் ஆகவே
புரிகுற் றத்தினுக் கடைந்தனர் சிறையை.
அயலர் மனத்தினில் அத்துயர் விளைத்தமை
வியப்பென அல்லாத உறுதி விளைவே.
வீண்வினை தொகுத்தல் நீங்கி
தான்விடு தலைதான் காண்கவாழ் வினிதே..
அரும்பொருள்:
நக்கல் - நகைப்பு. நகு+ அல் > நக்கல், இங்கு ககரம் இரட்டித்தது.
நக்கலர் -நகைப்போர், ஏளனம் செய்வோர்.
நக்கு அலர் என்று பிரித்தல் இங்கு பொருந்தாது.
அவம் - கெடுதல். அவமது = அவம் அது
ஒருவிட - விலகிட, நீங்குவதற்கு
இழித்தல் - பழித்தல்
வீண் வினை - தேவை யில்லாமல் கர்மா ஆவது
கழுவாய் -- பிராயச்சித்தம்
சனி, 23 டிசம்பர், 2023
வியாழன், 21 டிசம்பர், 2023
அள், அன் பால் விகுதிகள். தமிழ்மொழியில்.
பெண்மக்கட்கு ஏன் அள் விகுதி வந்தது என்பதை இங்கு ஆய்வாக்கம் செய்கிறது இந்த இடுகை.
ஆ ஈறு விளியில் ( அழைத்தல் )
ஆ எனற்பாலது பெரும்பாலும் விளியில் தோன்றும் ஒலியாகும்.
"தோழா, நான் சொல்வதைக் கேள்" என்று ஒருவனை விளித்துப் பேசுகையில் இச்சொல் (தோழா) என்று ஆகாரம் ( ஆவன்னா அல்லது ஆ என்ற ஒலியில்) முடிவதைக் காணலாம்.
கண்ணன் என்பது எழுவாய் வடிவம். அதாவது, சொல்லின் தொடக்க வடிவமாகும். கண்ணனை அழைக்கின்ற பொழுது, இது "கண்ணா!" என்று ஆகாரத்தில் முடிகிறது.
அயல் மொழிகட்கு இத்தகைய சொற்கள் சென்று வழங்கும்போது, விளிவடிவமே வழங்குகிறது. எழுவாய் வரவேண்டிய இடத்திலும், கண்ணன் என்று வாராமல் கண்ணா ( அதாவது கிருஷ்ணா) என்று வரும். கிருஷ்ணன் என்பதில் அன், விகுதி ( தமிழுக்குரியது) .
அள் என்பதன் பொருண்மைத் தெளிவு
தமிழில் அள் என்பதே அன் விகுதியின் பெண்பால் வடிவம். ள் ஈற்றுச் சொற்கள் அல்லது விகுதிகள் அ, இ மற்றும் உ என்ற முச்சுட்டுகளுக்கும் வராமல் அகரத்திற்கு மட்டுமே உள்ளது. அயலில் இள் விகுதியும் வருவது ஆய்வுக்குரியது. எடுத்துக்காட்டு: உறுமிளா ( இள் ஆ). கண்ணுறும் தகைய அழகி என்பது.
அள் என்பதை அவள் என்பதன் சுருக்க வடிவம் என்று கொள்ளலாம். அப்படிக் கொண்டால் சுட்டு இருமுறை வந்தது என்று கொள்ளவேண்டும். அ அள் என்ற இரண்டன் கலவை வகர உடம்படுமெய்யுடன் அவள் என்றாகும். இவ்வாறின்றி அள் என்பது ஒரு தனிவிகுதி என்று கொள்வது இடரின்றி முடியும். இது சரியானால் அன் என்பதும் தனி ஆண்பால் விகுதி என்று முடிக்கவேண்டும்.
சுட்டு இரட்டிப்பதைக் கவனிக்காமல் அகரச் சுட்டு இருமுறையும் வந்தது என்று கொண்டால், அள், அ அள் ( அவள் ) என்பன இரண்டும் சுட்டிலிருந்தே வந்தன என்று சொல்வது எளிது. அவ்வாறாயின் அள் என்பதற்குத் தனிப்பொருள் கூறுதல் தேவைப்படாது.
இனி அள் என்பதற்குத் தனிப்பொருள் யாது என்று காண்போம்.
அள் - செறிவு, பற்றுதல் செய்வது,
அள்ளல் - நெருக்கம்
அள்ளாடுதல் - செறிதல்
அள்ளி - நெய் ( உருகுதல் உடையது )
அள்ளிக்குத்து - தெளித்தல்
அள்ளிக்கொட்டு - பரவுதல்
அள்ளிக்கொண்டுபோதல் - பேரளவில் எடுத்துச்செல்லுதல்
அள்ளிருள் - செறிந்த இருட்டு
அள்ளுதல் - செறிதல்
அள்ளுகொள்ளை - பெருங்கொள்ளை
அள் விகுதி தரும் தெளிவு
அள் என்ற அடியிற் பிறந்த மேற்காட்டிய சொற்களை நோக்கினால், பெண்ணுக்கு அள் விகுதி வந்ததன் காரணங்கள் உடன் புரியும். நெய் என்பதே நேசம் என்பதற்கும் அடிச்சொல். நெய் ( உருகி ஒன்றாவது ), செறிவுடையது. பரவுதல் என்பது விரிவாவது. இவ்வாறு பொருள் பெருக்கலாம்.
நெய்+ அம் > நேயம் முதனிலை நீண்டு விகுதி பெறுதல்
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் பாரதியாரின் தொடரையும் காண்க.
அன் விகுதியும் அன்பு என்பதன் அடிச்சொல்லாய் உள்ளது. அண் > அன் அணுக்கக் கருத்து.
உள் விகுதி சொல்லமைப்புக்கு உதவுகிறது எனினும் இது பால் ( ஆண், பெண் பாகுபாடு ) காட்டுவதில்லை. காட்டும் சொற்கள் கண்ணுற்றால் ஈண்டு கருத்துரையில் எழுதித் தெரிவியுங்கள். தமிழிலானாலும் பிறமொழிகளிலானாலும் இருப்பன காட்டலாம். நன்றி
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
மெய்ப்பு பார்க்கப்பட்டது: 23122023 1506
திங்கள், 18 டிசம்பர், 2023
இலக்குவன்
இன்று இலக்குவன் என்ற பெயரைத் தெரி ந்து கொள்வோம்
இது இலட்சுமணன் என்றும் எழுதப் படுவதாகும்.
இதிலுள்ள தமிழ் மூலங்கள்: இல், அ, கு, அன் என்பன.
"இடத்திலே அங்கு சேர்ந்து அல்லது கூடி இருந்தவன்.". என்பது இம் மூலங்களின் பொருள்.
இல் - இடம், நெஞ்சில் (இல்) என்பதுபோல். வீட்டில் என்றுமாம்.
அ - அங்கு.
கு - சேரந்து
அன் இருந்தவன்.
இலக்கு என்ற தனிச்சொல்லுக்கும் இடம் என்பதே பொருள்.
வகர உடம்படு மெய்.
வனவாசத்தில் கூடி இருந்தவன் .
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
அ
ஞாயிறு, 17 டிசம்பர், 2023
இராமர் வெளிநாட்டுக் கடவுள் அல்லர்.
பல ஆண்டுகட்கு முன்பே இராமர் ஆரியர் அல்லர் என்பதை எழுதியிருக்கிறோம்.அதற்கான ஆதாரத்தை எங்கும் தேடி அலையவேண்டாம். சொல்லிலே அதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டால் அப்புறம் அலையவேண்டியதில்லை. ஆரியர் என்று யாரும் வெளியார் இல்லை. ஆர் விகுதிச் சிறப்புடைய தமிழ்ச் சங்கப் புலவர்களே ஆரியர். வாத்தியம் வாசித்தவர்களுக்கும் இப்பெயர் உண்டு.
[ வாழ்த்து இயம் > வாழ்த்தியம் > வாத்தியம், இடைக்குறைச் சொல்]
இர் என்பது அடிச்சொல்.
இர்: இருள். இரவு, இரா.
இர்+ உள்: இருள். உள் என்பது ஒரு விகுதி. கட+ உள் > கடவுள் என்று ஆகும். கடந்து நிற்பதாகிய பேரான்மா என்று பொருள். இன்னும் உள் விகுதி பெற்ற சொற்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டு: செய்+ உள் > செய்யுள். உயிருடன் ஆகி வாழும் நாள் ஆயுள். ஆ+ உள் > ஆ(ய்) + உள் > ஆயுள். இஃது ஆயுசு என்றும் திரியும். மூலச்சொல்: ஆயுள் என்பது தான்.
இருளின் நிறம் கருப்பு. இரா என்பது ஆ விகுதி பெற்ற சொல். நிலா, பலா என்பன போல. நிலா என்பது இறுதி ஆ விகுதி. பல் > பலா: பல சுளைகள் உள்ள பழம். விகுதி இதுவுமது.
இர்+ ஆம்+ அர் > இராமர். இருளாம் நிறமுடைய அவர் என்று பொருள்.
இராமரும் நீலம்.
இப்போது வெள்ளை நிறம் கொடுத்தால் அது சேர்த்தி இல்லை. அவருடைய நிறம் நீலம் அல்லது கருப்பு.
தென்னாட்டில் இராமர் தென் கோடி வரை பயணம் செய்துள்ளார். அறந்தாங்கி ( அரண் தாங்கி) வழி சென்றதாகக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன என்று அறிகிறோம். எம்மிடம் இப்போது இதற்கான குறிப்புகள் இல்லை.
அயோத்தி என்பதும் அய(ல்) + ஒத்தி . முன்னாளில் தென் திசையில் ( அயலில்) இருந்த தம் நகரை ஒப்ப எழுப்பப்பட்ட இன்னொரு நகரம். அய ஒத்தி> அயோத்தி. இது காரணப்பெயர்.
அ= அங்கு. வேறிடத்தில்.
அ அ > அய , யகர உடம்படுமெய். அங்கு அங்கு என்று பொருள்.
அல் என்பதன் இறுதி எழுத்து மறைந்த கடைக்குறையுமாகும்.
அ அல் . > அயல். ( அங்கு அல்லாதது என்றும் பொருள்.) வேறிடத்தது என்பதாம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
வெள்ளி, 15 டிசம்பர், 2023
மங்கை என்ற சொல்.
2020ம் ஆண்டில் எழுதிய எம் சொந்தக் கவிதையில் இப்படி எழுதினோம், ( உண்மையில் எழுதினேம் என்று எழுதுவதுதான் இன்னும் சரியானது). அந்தக் கவிதையின் பகுதி வருமாறு:
வியாழன், 14 டிசம்பர், 2023
சிதைவு, சிதிலம் - சொற்கள்.
ஒரு கல்லை எடுத்துக்கொண்டால் அது சிதைவு அடைவது தேய்வதன் மூலமாகவோ உடைதல் முதலிய காரணங்களாலோ இருக்கலாம். எப்படியானாலும் கல் சிறிதாகிவிடும் அல்லது சிறிய துண்டுகளாகிவிடவும் கூடும்.
சிதை என்ற சொல் சிது+ஐ என்று பிரிய, சிது என்பதே அடிச்சொல். ஐ என்பது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி> விகுதி என்று திரிந்தது. மி - வி திரிபுகள் பல. முன் இடுகைகளில் அறிக.
சிது என்பதன் மூலத்தோற்றத்தை சிறிது என்பதன் குறையிலிருந்து அறியலாம். சிறிது என்பதில் றி குறைந்தால் மீதமிருப்பது சிது தான். சிது என்பதன் மூலம் சில் என்பதுதான், இப்போது அதுவரை செல்லவேண்டியதில்லை.
ஒரு மரம் ( கட்டை )தேய்ந்து விடுமானால் சிறியதாகும். எவ்வளவு சிறியதாகும் என்பது அதன் தேய்மானத்தைப் பொறுத்ததாகும். எப்பொருளுக்கும் இது பொருந்துவதாகும்.
சிறுசு என்பதே சிசு என்று இடைக்குறைந்தது. று மறைவு.
இனிச் சிதிலம் என்ற சொல்: சிது + இல் + அம் > சிதிலம் ஆகும். இல் என்பது இடம் என்று பொருள்படும். மூக்கில் என்றால் மூக்கிடம் என்று பொருள் என்பதைக் காண்க. கல் சிதிலம் அடைந்துவிட்டதென்றால் தேய்ந்து அல்லது உடைந்து சிறிதாகிவிட்டது அல்லது உருக்குலைந்து விட்டதென்று பொருள்.
இங்கு கூறப்பட்ட சொற்களில் உள்ளீடுகள் யாவும் தமிழென்பதை அறிந்துகொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்
புதன், 13 டிசம்பர், 2023
சேட்டைகள் செய்வோர்.
கண்டதே காட்சி கொண்டதே கோலமென்று
கண்டதும் செய்வோர் பற்பலர் ஞாலமேல்.
உண்டபின் வேலை ஒன்றுமில் லாததால்
ஒன்றும் பயனிலாச் செய்கைகள் செய்தார் .
மண்டைப் பைத்தியம் மண்டிய காரணி
மன்றினில் ஏறினர் நன்மதி வற்றவும்
காவலர் கவன்றிட மேவியே
தாவியங் கோடினர் தகுதியில் செயலே.
இது இன்றைக்குச் சிலர் செய்யும் சேட்டைகளைக் குறிக்கிறது.
காரணி = காரணம். மன்று = சபை. வற்றவும் - குறைவுறவும்.
மேவி - மேற்கொண்டு கவன்றிட - கவலையுற
தாவியங்கு - தாவி அங்கு, மண்டிய - கூடின
அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்னர்
படத்தில் கிரண் என்ன செய்கிறார்.
படத்தில் கிரண்குமார்
சமைத்தாரோ மற்றார் சமைத்ததைத் தானாய்ச்
சுவைத்தாரோ வேண்டுமினி என்றே ------ அழைத்தாரோ
அப்பனே வேண்டாம் அயிர்த்தலே தைவானில்
ஒப்பவுல வுங்கால் இது,
அரும்பொருள்:
அப்பனே - ஆடவரை முன்னிலைப் படுத்திய வெண்பா.
வேண்டுமினி என்றே - இன்னும் உணவு கொடுங்கள் என்று.
ஏகாரம் றே - அசை.
அயிர்த்தல் - சந்தேகித்தல். ஏ = இசைநிறை\
ஒப்ப - பிறருடன் ஒத்துக்கொண்டு குழுவாக
உலவுங்கால் - இன்பச் செலவு சென்ற பொழுது
இது - இது நடந்தது, நடந்தது என்று இணைத்துக்கொள்க.
செவ்வாய், 12 டிசம்பர், 2023
பீதி என்ற சொல்
இந்தச் சொல், பிய்தல் வினையடியாக உண்டான சொல். எனினும் வேறு வழிகளிலும் விளக்குறக்கூடும். இது ஒரு தமிழ்ச்சொல். நிகண்டுகளிலும் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்தான்.
காட்டில் ஒரு குழுவாகச் செல்லும் போது அக்குழுவிலிருந்து ஒருவன் பிரிந்து தனியாகிவிட்டால். அதுவும் காட்டு வழிநடந்து முன் பயின்றிராதவனாயும் இருந்தால், அவனுக்கு அரட்சி ஏற்படும். இது தனிப்பட்டதனால் வந்த அச்சம்.
பிய்தல் வினை.
பிய்~தல் : பிய்தி > பீதி ( தி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி).
இது போலும் திரிபுற்ற இன்னொரு சொல், எடுத்துக்காட்டு:
செய் > செய்தி > சேதி.
வினைச்சொற்களும் இவ்வாறு தோன்றும்.
வாய் - பெயர்ச்சொல்.
வாய்+ தி > வாய்தி > வாதி > வாதித்தல்.
வாக்கியத்தில்:
மேயப் போன மாடு மீண்டும் வரும்வரை வாதித்தாலும், இதற்கு ஒரு முடிவு இல்லை.
யார் அப்பா அம்மா என்று நாவினால் சொல்லும் திறம் ஒருவனுக்கு வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாதவன் நாதி இல்லாதவன் என்பர். இது நா என்னும் உறுப்பினடியாக எழுந்த சொல்.
நா > நாதி.
இதை ஒருவகை நாத்திறம் என்னலாம்.
இல்லாதவன் அநாதி > அநாதை.
இங்கு தி விகுதி திரிந்து தை என்று வந்தது என்றாலும் தை என்ற விகுதி பெற்றது என்றாலும் வேறுபாடு ஒன்றுமில்லை.
அ என்ற எதிர்மறை முன்னொட்டு அல் என்பதன் கடைக்குறை.
இனி, பேய் > பேய்தி > பீதி என்று திரிந்தது என்றும் கூறுதல் கூடும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
ஞாயிறு, 10 டிசம்பர், 2023
Leah and the spectacle in her mouth
வியாழன், 7 டிசம்பர், 2023
[அ]வித்தை - சொல்லும் தொடர்பினவும்.
சொல்லமைப்பு : வித்தை அவித்தை.
வித்தைக்கு எதிர்ச்சொல் அவித்தை என்பது நீங்கள் அறிந்தது. வித்தை என்பது கல்வி ஆயின், அவித்தை என்பது கல்லாமை, படிப்பறிவு இன்மை என்று பொருடரும். இடனுக்கேற்ப, ஆன்மிக அறிவின்மையும் இதன் பொருளாகலாம். அதாவது, இறையியலிலும் ( theology ) இச்சொல்லே பயின்றுள்ளது.
அல் என்பது அல்லாதது. அல் என்பது அ என்று குறைந்தும் குறையாதும் அன்மைப் பொருளில் வரும். அல் > அ > அ+ வித்தை > அவித்தை ஆகும். அன் என்றும் வருதல் உளது. எ-டு: அன்மொழி (த் தொகை). அன்முறை என்பதில் னகர ஒற்று புண:ர்ச்சித் திரிபு.
இனி வித்தை என்ற சொல்லை அறிவோம்.
அவித்தை என்பது 'வித்தை இன்மை' என்பதால் வித்தை என்பது எப்படி அமைந்தது என்பதையும் அறிதல் வேண்டும்.
இங்கு இது விளக்கப்பட்டுள்ளது. விரிவு வேண்டின் கருத்து இடுக.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
உசிதம் சொல் தரவு
இச்சொல்லை ஆய்ந்து இன்று வருவழி கண்டறிவோம்,
உய்தல் என்ற சொல் ஓரளவு பயன்பாடு கண்டுள்ள சொற்களில் ஒன்று. இந்த வினையிலிருந்து உசிதம் என்பதை அடைவுசெய்வோம். உய்தல் என்பதன் பொருளாவன: 1. உயிர்வாழ இயலுதல் 2 காப்பாற்றப் படுதல் 3 இடரின் அல்லது துன்பத்தின் நீங்குதல் என்பது நாம் இயல்பாய் அறிபொருளாம். உசிதம் என்பது உய்தல் சொல்லடி வரவினது ஆயின், இடர் அல்லது துன்பமின்றி முடித்தல் (3) என்பது மிகப் பொருந்திய சொல்லாக்கப் பொருளாகும்.
இதன் அமைப்பு இவ்வாறு:
உய் + (இ )+ து + அம் எனின் உயிதம் என்றாகும் (அல்லது உய்தம்.)
இ = இங்கு
து = உடையது ( உரிய)
அம் - அமைப்பு.
இதை வாக்கியப்படுத்தினால்: இந்தச் ( சூழ்நிலையில் ) துன்பம் நீங்கிவிட உரிய அமைப்பு என்று பொருள் கிட்டுகிறது.
உயிதம் என்ற மூலவடிவு இல்லாதொழிந்தது. தமிழன் தன் நூல்களனைத்தையும் பாதுகாத்து வைத்திருக்க இயன்றவனாகில் இருந்திருக்கும். ஆனால் சிறிது காலத்தின் முன் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானதாகச் செய்தித்தாள்களில் வந்ததே! என்னென்ன சொற்கள் அழிந்தன என்று இப்போது சொல்லமுடியுமோ? இவ்வாறு தமிழன் என்ற இவனுக்கு ஏற்பட்ட வரலாற்று இடர்களுக்கெல்லாம் விளக்கம் எவ்வாறு காண்பது. தென்னாட்டுப் போர்க்களங்க ளெல்லாம் அளவற்றவை ஆயினவே. ஆதலின் "உயிதம்" என்பதே மீட்டுருவாக்கம். யகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பதை முன் இடுகைகளில் கொடுத்துள்ளோம்.
உயிதம் - உசிதம் ஆகும். உய்தம் > உசிதம் எனினும் ஏற்புடைத்து என்க.
இனி, மிக்க உயரத்தில் வைத்துப் போற்றக்கூடியது என்ற பொருளில்:
உச்சி > உச்சி + து + அம் > உச்சிதம் , பின் சகர மெய் இடைக்குறைந்து உசிதம் எனினும் சரிதான்.
உ(ச்)சி > உசி து அம் > உசிதம் எனினுமாம்.
இங்கு இது அமையும் என்பது இங்கு+ இது + அம் > இங்கிதம் ஆனது நினைவுக்கு வரும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
சில திருத்தங்கள்: 07122023 2037
Please refrain from making any changes.
வெள்ளி, 1 டிசம்பர், 2023
சந்நியாசி என்ற சொல்
சந்நியாசி என்பது பொருளுடன் நாடறிந்த சொல்லே ஆகும்.
இதற்குப் பல்வேறு பொருண்மைகள் இந்திய மொழிகளில் காணலாம், பொதுவாக அறியப்படுவது என்னவென்றால் சந்நியாசிகள் மக்களைச் சார்ந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வர் என்பதுதான். பெரும்பாலும் திருமணமாகாதவர்கள் என்ற கருத்தும் உள்ளது. ஆகித் துறந்தவர்கள் என்றும் உள்ளனர்.
எந்த மொழியில் எவ்வாறு பொருளறியப்பட்டாலும், நாம் தமிழின் மூலமாக இதற்குப் பொருள் அறிவோம்:
சன்னி என்பதை "தன்னி" எனப் பொருத்துதல்:
தன் - தன் பிறந்த இடம். தன் சொந்த வாழ்வாதாரங்கள்.
நி - நீங்கி,
நீத்தல் - விட்டு நீங்குதல் ( உலகுதொடர்பானற்றை விட்டு விலகுதல்) என்றும் பொருள் தரும். நீப்பேன் ( விட்டு நீங்குவேன்), எதிர்மறை: நீயேன் (விட்டு நீங்கமாட்டேன்) என்ற வடிவங்கள் இப்போது வழங்கவில்லை. இன்னொரு காட்டு: காத்தல் (வினை), காப்பேன், காவேன் என்பன உரியவான வடிவங்கள். ஈகார இறுதிக்கு யகர உடம்படுத்தல் வரும். நீவு(தல்) என்பது வினையாயின் நீவேன் என்று எதிர்மறையில் வரும். இவற்றை வாக்கியங்களில் பயன்படுத்தி உணர்ந்துகொள்க.
பற்றுக்கோடு அல்லது ஆதரவு:
ஆசு > யாசு>யாசு+ இ > யாசித்தல்.
ஒ.நோ: ஆ+ து+ அ + அர் > ஆதவர் ( வகர உடம்படுமெய்), > யாதவர். ஆவளர்ப்போர் என்பது, இங்கு ஆ > யா ஆனது. து = உடைமைப் பொருள்.
பற்றுக்கோடு அல்லது ஆதரவு வேண்டுதல். இரத்தல்.
ஆகவே தன் நிலையின் நீங்கிய ஒருவன் பிறரிடம் யாசித்து வாழ்தல் என்று தமிழ் மூலங்களின் மூலம் பொருள் கிட்டுகிறது.
நீங்குதல் பொருளதான நீ என்பது, நி என்று குறுகியது, பழம் + நீ என்பது பழநி என்று குறுகியது போன்றதே. இளநீர் என்பது எளனி என்று பேச்சில் குறுகி ஒலித்தலும் காண்க. வாய் நீர் என்பது வாணி (வாணி ஊத்துது என்பர்) என்றும் தண்ணீர் என்பது தண்ணி என்றும் ஆகுதல் தெளிவு. நான் நீ என்ற பதிற்பெயர்களில் நீ என்பதும் தன்னின் நீங்கியோனாய் எதிரில் நிற்போன் என்றே பொருளாதலின் நீக்கக் கருத்தே ஆகும்.
நீ என்பதும் குறுகி நின், நினது, நின(பன்மை), நின்றன் ( நின் தன்) என வேற்றுமை வடிவம் படும்.
சந்நியாசி: இச்சொல் தமிழிலிருந்து புறப்பட்டுப் பிற இடங்களுக்கும் பரவிற்று என்று முடிக்க.
ஆசி என்பது யாசி என்றானது, ஆனை > யானை என்பது போலாம்.
சந்நியாசி இறந்துவிட்டால் அவருக்கு நிலக்கொடைகளும் வழங்கினர் என்பதாகத் தெரிகிறது. நினைவிடங்களும் அமைத்தனர். இவற்றுக்கு ஆண்டிசமாதிகள் என்பர். சந்நியாசிகளுக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஏற்றமிருந்தமை இதனால் பெறப்படும். தமிழ்நாட்டு மக்கள் இறையன்பர் ஆதரவாளர்கள். இவ்வாறு இறந்தோரின் அடக்கவிடங்கள் மலாய் மொழியில் KRAMAT எனப்படும். மதித்துப் போற்றுதற்குரிய இடங்களாக இவை கருதப்படுகின்றன. ( SACRED). இங்கு அடக்கமானவர்களிடம் குறைகளுக்கு மாற்று வேண்டுவோரும் உண்டு. ( நில் வரத்தி : நிவர்த்தி)
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.