செவ்வாய், 12 டிசம்பர், 2023

பீதி என்ற சொல்

 இந்தச் சொல்,  பிய்தல் வினையடியாக உண்டான சொல். எனினும் வேறு வழிகளிலும் விளக்குறக்கூடும்.  இது ஒரு தமிழ்ச்சொல்.  நிகண்டுகளிலும் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்தான்.

காட்டில் ஒரு குழுவாகச் செல்லும் போது அக்குழுவிலிருந்து ஒருவன் பிரிந்து தனியாகிவிட்டால்.  அதுவும் காட்டு வழிநடந்து முன் பயின்றிராதவனாயும் இருந்தால், அவனுக்கு அரட்சி ஏற்படும்.  இது தனிப்பட்டதனால்  வந்த அச்சம்.  

பிய்தல்  வினை.

பிய்~தல் :  பிய்தி >  பீதி   (  தி என்பது ஒரு தொழிற்பெயர் விகுதி).

இது போலும் திரிபுற்ற இன்னொரு சொல்,  எடுத்துக்காட்டு:

செய் >  செய்தி >  சேதி.

வினைச்சொற்களும் இவ்வாறு தோன்றும்.

வாய் -  பெயர்ச்சொல்.

வாய்+ தி >  வாய்தி  >  வாதி > வாதித்தல்.

வாக்கியத்தில்:

மேயப் போன மாடு மீண்டும் வரும்வரை வாதித்தாலும்,  இதற்கு ஒரு முடிவு இல்லை.

யார் அப்பா அம்மா என்று நாவினால் சொல்லும் திறம் ஒருவனுக்கு வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாதவன் நாதி இல்லாதவன் என்பர்.  இது நா என்னும் உறுப்பினடியாக எழுந்த சொல்.

நா >  நாதி.   

இதை  ஒருவகை நாத்திறம் என்னலாம்.

இல்லாதவன்  அநாதி >  அநாதை.

இங்கு   தி விகுதி திரிந்து தை  என்று வந்தது   என்றாலும்   தை என்ற விகுதி பெற்றது என்றாலும் வேறுபாடு ஒன்றுமில்லை.

அ என்ற  எதிர்மறை முன்னொட்டு அல் என்பதன் கடைக்குறை.

இனி, பேய் > பேய்தி > பீதி   என்று திரிந்தது என்றும் கூறுதல் கூடும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: