ஒரு கல்லை எடுத்துக்கொண்டால் அது சிதைவு அடைவது தேய்வதன் மூலமாகவோ உடைதல் முதலிய காரணங்களாலோ இருக்கலாம். எப்படியானாலும் கல் சிறிதாகிவிடும் அல்லது சிறிய துண்டுகளாகிவிடவும் கூடும்.
சிதை என்ற சொல் சிது+ஐ என்று பிரிய, சிது என்பதே அடிச்சொல். ஐ என்பது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி> விகுதி என்று திரிந்தது. மி - வி திரிபுகள் பல. முன் இடுகைகளில் அறிக.
சிது என்பதன் மூலத்தோற்றத்தை சிறிது என்பதன் குறையிலிருந்து அறியலாம். சிறிது என்பதில் றி குறைந்தால் மீதமிருப்பது சிது தான். சிது என்பதன் மூலம் சில் என்பதுதான், இப்போது அதுவரை செல்லவேண்டியதில்லை.
ஒரு மரம் ( கட்டை )தேய்ந்து விடுமானால் சிறியதாகும். எவ்வளவு சிறியதாகும் என்பது அதன் தேய்மானத்தைப் பொறுத்ததாகும். எப்பொருளுக்கும் இது பொருந்துவதாகும்.
சிறுசு என்பதே சிசு என்று இடைக்குறைந்தது. று மறைவு.
இனிச் சிதிலம் என்ற சொல்: சிது + இல் + அம் > சிதிலம் ஆகும். இல் என்பது இடம் என்று பொருள்படும். மூக்கில் என்றால் மூக்கிடம் என்று பொருள் என்பதைக் காண்க. கல் சிதிலம் அடைந்துவிட்டதென்றால் தேய்ந்து அல்லது உடைந்து சிறிதாகிவிட்டது அல்லது உருக்குலைந்து விட்டதென்று பொருள்.
இங்கு கூறப்பட்ட சொற்களில் உள்ளீடுகள் யாவும் தமிழென்பதை அறிந்துகொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு: பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக