மக்களில் பல்லோர் தக்கநல் உணவிலார்
நக்கலர் பழிக்க நைந்துகீழ் அணாவினர்.
அவர்தமை இழித்தல் வருநாள் நமக்கொரு
அவமது உணருக அதுநமக்கு இழுக்கிடும்
இனிவரும் பிறவியில் அதுபோல் கிடந்துழந்
தலைந்திடல் நிகழின் கழுவாய் உளதோ?
கருமம் இதுவென ஒருவிட அறிந்திலார்
ஒருமந் திரியும் ஊழலில் விழுந்தின்று
தெருவலி காட்டுநர் புரைமகன் ஆகவே
புரிகுற் றத்தினுக் கடைந்தனர் சிறையை.
அயலர் மனத்தினில் அத்துயர் விளைத்தமை
வியப்பென அல்லாத உறுதி விளைவே.
வீண்வினை தொகுத்தல் நீங்கி
தான்விடு தலைதான் காண்கவாழ் வினிதே..
அரும்பொருள்:
நக்கல் - நகைப்பு. நகு+ அல் > நக்கல், இங்கு ககரம் இரட்டித்தது.
நக்கலர் -நகைப்போர், ஏளனம் செய்வோர்.
நக்கு அலர் என்று பிரித்தல் இங்கு பொருந்தாது.
அவம் - கெடுதல். அவமது = அவம் அது
ஒருவிட - விலகிட, நீங்குவதற்கு
இழித்தல் - பழித்தல்
வீண் வினை - தேவை யில்லாமல் கர்மா ஆவது
கழுவாய் -- பிராயச்சித்தம்
விடுதலை கர்மாவிலிருந்து விடுபடுதல்.
புரைமகன் - ஒத்த ஆடவனாக
தெருவலி காட்டுநர் - தெருவில் பலத்தைக் காட்டுபவர்கள்
உறுதி விளைவு - நிச்சயம் வரக்கூடியது
தொகுத்தல் - சேர்த்தல்.
அயலர் - தன்னின் நீங்கிய பிறர் யாரும் .neighbour, anyone who may be affected by your deeds, within your contemplation as in "Love thy neighbour as thyself."
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக