அருள்வினை ஆயகரால் ஆவனநற் பேறாய்,
இருள்தீர இவ்வுலக வாழ்க்கை --- தெருள்மிளிர,
எவ்வா றெனினுமே ஒவ்வாமை ஓடிவிடும்
வௌவாது நாவாய் அலை.
இவ்வெண்பா எளிமையாகவே உள்ளது
வினை ஆயகர் என்று பிரித்துச் சொன்னது, அதுதான் அவர்தம் வானுலகத் தொழில் என்பது உணரவைத்தற்கு.. அவரே வினாயகர். அவர்தம் அருளால் ஒவ்வாமை உணவிலாயினும் பிறவற்றிலாயினும் மாறிவிடும்.
வௌவாது என்றது : கடல் அலையும் உங்களைக் கவிழ்க்காது என்றபடி. நாவாய் --- கப்பல். இது கடப்பல் என்ற சொல்லின் இடைக்குறை. விளக்கம் இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/10/blog-post_8.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்.
பார்வை: 10092022
அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக