கெளிறு என்பது ஒரு மீன்வகை. இதற்கு ஓர் அழகான தமிழ்ப் பழமொழியும் உண்டு. சில தலங்கள் பாடல் பெற்றவை என்று அறியபடுதல் போல இஃது ஒரு பழமொழி பெற்ற மீன். அந்தப் பழமொழி யாதெனின்: " சனியன்பிடிச்ச நாரை, கெளிறைப் பிடித்து விழுங்கினது " என்பதுதான் அது. கெளிறு என்பது செயப்படுபொருளாய் வருகையில் "கெளிற்றை" என்று இரட்டித்தல் வேண்டும். ஏன் ஐ விகுதி என்றால் அது விழுங்கியது விழுங்கலாகாத மீனை. சனியன் பிடித்ததால்தான் அது அம்மீனை விழுங்கிற்று என்பதாம்.
தமிழ்ச் சொற்கள் பிறமொழிக்குச் சென்றால், திரிபு அடைதல் இயல்பு. அஃது படாமல், மலாய் மொழிக்குச் சென்ற இந்த மீன் பெயர், "கெலி" என்று மட்டும் வருகிறது. கெளிறு தொண்டையில் மாட்டிக்கொள்ள, நாரை படாதபாடெல்லாம் பட்டிருக்கும்.
நரிக்குக் கொக்குப் பிடிக்கத் தெரியாதது போல, நாரைக்கும் கெளிறு பிடிக்கத் தெரிவதில்லை. நாய்க்கும் கொசுவைப் பிடிக்கத் தெரிவதில்லை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக