பற்றனெங்கு வணங்குகிறான் அங்கெல்லாம் வருவார்
பற்றனெப்போ பணிகின்றான் அப்பொழுதில் உருவாய்
உற்றுவரும் உளதாகும் ஆற்றலவர் இறைவன்
எற்றோயாம் அவர்பாதம் பணிவின்றி உறைதல்? 1
பற்றன் - பத்தன் - பக்தன். பற்றுதல் உடையோன்.
எப்போ - எப்போது, இது கடைக்குறை, இறுதி -து நீங்கியது, பேச்சுவழக்கிலும் உளது.
ஆற்றலவர் - ஆற்றல் அல்லது சக்தி உடையவர்.
எற்றோ - என்ன?
உறைதல் - உலகில் இருத்தல்.
சரிவில்லா நற்கிழமை சனிக்கிழமை அலதோ?
புரிவில்லா நாளதிலே புலர்வில்லை பொழுதே
நெரிவில்லா நல்வாழ்வு நினைந்தடைக தொழுதே
கரைவில்லா நலமாகும் கடந்துறைக பழுதே.
சரிவு - வாழ்க்கை நிலை இறங்குதல், குறைதல்.
அலதோ - அல்லவோ(பன்மை), அன்றோ.(ஒருமை)
புரிவு - செயலாற்றுதல். முயற்சி
புலர்வில்லை - விடியல் இல்லை
நெரிவு - துயர்படுங்காலம்
கரைவு --செய்த முயற்சிகள் வீணாதல்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக