ஓணத்தின் திருவமைந்த உயர்ந்தநன் னாள்தன்னில்,
காணத்தண் மகிழ்வினிய கனியுடனே ஈரெட்டாய்
ஊணயின்றே அடைதுவைந்த குழைவுடனே உட்கொண்டு
மாணியன்ற கலந்துறவில் தாமகிழும் கேரளமே.
ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
பொருள்:
தண் - குளிர்ந்த
கனி - வாழைப்பழம் முதலியவை
ஈரெட்டாய் - 16 வகை பக்கணங்களுடன் ( பட்சணங்களுடன்)
சோற்றுக்குப் பக்கத்தில் வைக்கும் கறிகள்
பக்கணம் : பகு+ அணம். பட்சணம் திரிபு.
பகுத்த கறிகள் எனினுமாம்
ஊண் அயின்று = சோறு சாப்பிட்டு
அடைதுவைந்த குழைவு - அடைப்பிரதமம் என்னும் பாயசம்
மாணியன்ற - பெருமிதம் தருகின்ற
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக