நாம் வழங்கும் சொற்றொடர்களில் சில ஒவ்வொரு
துறையைச் சார்ந்தவையாய் இருக்கும். எடுத்துக்
காட்டாக, " என்ன இவர் செய்து சாய்த்துவிட்டார்?
இப்போது இங்கு வந்து பீத்திக்கொண் டிருக்கிறார்"
என்பது காட்டில் மரங்களை வெட்டிச் சாய்த்துக்
கொண்டுவந்து அறுத்தெடுத்துப் பலகைகளாக்கும்
தச்சுத் தொழில் சார்ந்த வேலைக்காரர்கள்
பயன்படுத்தி வந்த சொற்றொடராகும். இதே
போலும் ஆங்கிலத்திலும் உண்டு. "Are you fighting
your case or taking a certain course?" என்ற கேள்வியில்
taking a certain course என்பது கடலோடிகளின்
பேச்சுவழக்கில் தவழ்ந்து வளர்ந்து மிகுந்து மக்கள்
பிறரிடமும் பரவிவிட்ட சொற்றொடரென்று அறிஞர்
கூறுப. இவற்றைச் சுருக்கமாகத் துறைத்தொடர்கள்
என்று சுட்டலாகும்."taking a certain course" எனற்
பாலதை ஆங்கில மொழிநூலறிஞர் natutical term
என்பர்.
தச்சுத் தொழிலில் அறுத்துக் கொணர்ந்த மரம் அல்லது
மரங்கள் அளவிலோ எண்ணிக்கையிலோ குறைந்துவிட்டால்
"இது எந்த மூலை?" என்ற கேள்வி எழும். நான்கு மூலைக்கும்
நான்கு தூண்கள் நிறுத்தவேண்டுமே. மூன்று தூண்களுக்கே
மரங்கள் உள்ளனவென்றால் பற்றாக்குறையை உணர்த்துவதற்கு
இவை எந்த மூலை என்பர். இதற்குப் போதவில்லை என்பதே
பொருளாகும். இப்போதைய வழக்கில் " எந்த மூலை" என்பது
கவலைக்குரிய பற்றாக்குறையைச் சுட்டவே வெளிப்படும்
சொற்றொடராக உள்ளது.
சாய்த்துவிட்டாயோ என்று வரும் மரபு வழக்கினின்று சில
சொற்கள் அமைந்துள்ளன.
செய்து முடிக்க இயன்றதை சாத்தியம் என்பர். இது சாய்த்து+
இயம் என்ற இரு உள்ளுறுப்புச் சொற்களை உடையது. இயம்
என்பது இ+ அம் என்ற பகுவிகுதிகளின் இணைப்பு. இ = இங்கு.
அம் - அமைதல் உணர்த்தும் விகுதி.. சாய்க்க இயன்றது, அதாவது
செய்தற்கியன்ற நிலை என்பதே சாய்த்தியம் > சாத்தியம்
ஆயிற்று. யகர ஒற்று (ய்) கெட்டது (௳றைந்தது). வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர், வாய்த்தியார் > வாத்தியார் ஆனார்'
அதுபோலவே சாய்த்தியம் > சாத்தியம் ஆயிற்று. சாதித்தல்
என்பதும் சாய்தல் அடியினதே. சாய் > சாய்தி > சாதித்தல்
என்பது யகர ஒற்று இழந்தது. சாதித்தல் என்பதில் வரும் சாதி
என்பது ஜாதி ( மக்கட்பிரிவு) குறிக்காது. இது தன்வினை
பிறவினை வடிவங்கள் இரண்டிலும் சாதித்தல் என்றே
இயல்வதாகும்.
இவ்வாறு அறிந்து மகிழ்க..
மெய்ப்பு - பின்னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக