செகம் என்ற சொல்லை ஆய்ந்த போது http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
நாம் உலகம் அழிதலையும் மீண்டும் ஆவதையும் உடையது என்ற கருத்தினடிப்படையில் அச்சொல் உருவானது என்று கண்டோம். ஜகம் என்ற ஒலியொப்புமை உடைய சொல்லையும் உடன் கண்டு அதன் வேறு அடிச்சொல்லையும் கண்டுகொண்டோம்.
உலகம் அழிதலும் ஆவதும் உடையதென்பதற்குச் சிவஞான போதத்திலிருந்து ஓர் ஆதாரத்தை இப்போது பார்ப்போம்;
அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோன்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதா(கு)ம்;
அந்தம் ஆதி என்மனார் புலவர். (1)
இதன் பொருள்:
அவன் அவள் = ஆடவர் பெண்டிர் என்பாரும்,
அது = ஏனை உயிர் உடையனவும் இல்லாதனவும் ஆகிய பொருள்களும்,
மூ வினைமையின் = படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இறைவனின் செய்கைகளின் பயனாக;
தோன்றிய திதியே = உருவான அந்த நிலையே;
ஒடுங்கி - பின் அழிவு அடைந்து,
மலத்து = - கரும வினையின் காரணமாக;
உளது = மீண்டும் தோன்றுவது;
ஆகும்= இதுவே நடக்கிறது;
அந்தம் ஆதி = முடிவிலும் முதலிலும் ( உள்ளவன் இறைவன், அவனால்தான்.)
இனி, வினைமை, திதி, ஒடுங்குதல் ஆகியவற்றை அடுத்த இடுகையில் கவனிப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக