சில சொற்களை இரு வகையாகவோ அதற்கும் மேலாகவோ பிரிக்கலாம். இருவேறு பொருள்கொள்ள இத்தகைய சொற்கள் இடம்தரும்.இத்தகு சொற்கள்ளையும் தொடர்களையும் தேர்ந்தெடுத்து அவற்றைச் செய்யுட்களில் அமைத்துக் கவிபாடிக் காலம் கழித்தோரும் உளர்.
இப்போது அத்தகைய ஒரு சொல்லைக் கவனிப்போம்.
சொல்: மரத்தடி.
மரக்கிளைகளுக்குக் கீழுள்ள தரைப் பகுதியைக் குறிப்பது. இது:
மரம் + அத்து + அடி = மரத்தடி.
இதில் வரும் "அத்து" சாரியை. முன் உள்ள சொல்லையும் பின் வந்த சொல்லையும் சார்ந்தும் அவற்றுடன் இயைந்தும் வருதலால், "சார்+இயை " = சாரியை எனப்பட்டது,
சாரியைக்குத் தனிப் பொருளேதும் கூறப்படாது. எனினும் "து" என்பது உரியது எனக் கொள்ளுதல் கூடும்.
இதை விரிக்காமல் விடுவோம்.
இனி,
மரம் + தடி = மரத்தடி \\\
அம் குறைந்து அல்லது மகர ஒற்றுக் குறைந்து, தகர ஒற்றுத் தோன்றியது.
கொஞ்சம் நீண்ட மரக்கட்டை என்று பொருள். சிறிது தடித்ததாயும் இருக்கவேண்டும். மெல்லியது "குச்சி " என்பர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக