சனி, 31 அக்டோபர், 2015

தமிழில் கிருகம் கிரகம் இல்லை

இன்று கிரகம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கிரகம் என்பது நாம் நன்கறிந்த சொல் போலவே தோன்றுகிறது. நாம் ஓட்டிச் சென்ற வண்டி எங்காவது போய் மோதி, நமக்குச் செலவு கூடிப்போனால், கெட்ட கிரகம் என்கிறோம். கால நிலை சரியில்லை என்கிறோம். கணியரும் ( சோதிடகாரரும் ) அதையே தெரிவிக்கிறார். இப்போது எகிப்தில் உயிர் நீத்த உருசிய வானூர்திப் பயணிகட்கு நமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு,
ஆய்வினைத் தொடர்வோம்.

அதிலிருந்த எல்லாப் பயணிகட்குமா கிரகம் சரியில்லை? விபத்துக்கு1த் தீவிர
வாதிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் அவர்கள் கூற்றை ஏற்கவில்லை.

கிரகம் என்றால் கோள் நிற்குமிடம் என்று பொருள். வீடு என்றும் கூறலாம். கிருகலெட்சுமி என்றால் வீட்டின் நற்செல்வி என்று சொல்வர். கிரகம் அன்று, கிருஹம் என்பர். இருக்கட்டும்.

காராகிரகம் என்ற சொல் காணுங்கள். இதன் பொருள் சிறை என்பது. கார்= கருப்பு. கிருஹம் -வீடு . ( சிறை.) the terrible dark prisons என்று பொருள் விரிப்பார். இது உண்மையில் கார்+ ஆகு+ இரு + அகம் = காராகிருகம் ஆகும். இருட்டான, இருக்கும் உள்ளிடம் என்பது பொருள். ஆகவே சிறை.

இதுபோது கிரகம் , கிருகம் . கிருஹம் என்ற மாறுபாடுகளில் கவனம் கொள்ள வேண்டாம். இம்மூன்றில் எல்லா வடிவங்களையும் ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள்.

காராகிருகத்தை காரா + கிருகம் என்று பிரித்தால், கிருகம் கிடைக்கிறது. ஆகவே, கிருகம் என்றால் வீடு என்று பொருள் கூறி, கார் ஆகு இரு அகம் என்பதை முடிபோட்டு மறைத்துவிடலாம்.

எனவே பிறழ்பிரிப்பின் மூலம் ஒரு புதிய சொல் கிடைக்கிறது,

தமிழில் கிருகம் கிரகம் இல்லை; ஆதலால் அது தமிழ் அன்று என்று முடிக்க வேண்டியது,

கொண்டாட்டமே!



------------------------------------------------------------------------------------------------
1. விழுபற்று >விழுபத்து> விபத்து.

கருத்துகள் இல்லை: