சனி, 31 மே, 2025

இலாடம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்

 சிற்றூர்களுக்கு  ஆட்டக்காரர்கள் ஆடவருவார்கள். அப்போது அவர்கள் நின்ற இடத்திலே ஆடிக்கொண்டிருப்பார்கள்.  மரத்தாலான கோல்களில் தரைப்பகுதியில்  இருப்புக்காப்பு  அடிக்கப்பட்டிருக்கும்.  அதன்மேல் நின்றுகொண்டு ஆட்டமும் பாட்டும் நடைபெறும்.  சீனர்களிடமும் இத்தகைய ஆட்டபாட்டங்கள் உண்டு.  அந்த அடிக்கப்பட்ட இரும்புக் காப்புக்கு  இலாடம் என்று பெயர்.

இலாடம் என்பது பின்னர் லாடம் என்று தலையிழந்த சொல்லாகிவிட்டது. இந்தச் சொல்லில் இல்+ ஆடு+ அம் என்று மூன்று பகவுகள் உள்ளன.

இல் என்றால் இடம்.  நாட்டில் என்பதில்  இல்  இடத்தைக் காட்டும் உருபாக வருகிறது. இல் என்ற தனிச்சொல் வீடு என்பதையும் குறிக்கும். இடம் என்ற பொருள் தெளிவானதாகும்.

இருக்குமிடத்தில் ஆடிக்கொண்டு ஒரு கலையையோ நிலையையோ காட்டுவது இல் என்ற சொல்லின் தன்மையும் ஆகும். 

அடுத்த சொற்பகவு ஆடு என்பதுதான்.  இது ஆடுதலாகிய செயலைக் குறிக்கிறது.

இந்த ஆடுதலுக்கு அமைக்கப்பட்டதுதான் பொருத்தப்பட்ட இரும்புக்காப்பு.  மரக்கோல் ஆடும்போது பிளந்துவிடாமல் அந்தக் காப்பிரும்பு பார்த்துக்கொள்கிறது.

நாளடைவில் இது செருப்புகளிலும் பொருத்தப்பட்டுப் பலனளித்தது என்று அறிக.  நடக்கும்போதும்  கால்  ஆடத்தான்  செய்கிறது.. ஓர் இயக்க்நிலையையும் இது குறிக்கும்.  உரையாடல் சொல்லாடல் என்ற பதங்களிலெல்லாம்  ஆடல் என்பது துணைவினையாக வருகின்றது. ஆகவே எந்தச் செயலாற்றலிலும் இச்சொல் பயன்பாடு காணத் தக்கது ஆகும்.

ஆகவே இச்சொல்லில் ஆடுகின்ற தமிழை நீங்கள் அறிந்து இன்புறலாம்.

இல் ஆடு அம் என்பது இல்லாடம் என்று வந்தாலும் தமிழில் சுருக்க முறைகள் இருப்பதால் இல்லாடம் இலாடம் என்ற குறுகுதல் இயல்பே ஆகும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து பரவிட உதவுக.


வெள்ளி, 30 மே, 2025

அந்தியம் என்ற சொல்

 அந்தியம் என்ற சொல்லைக் கவனிப்போம்.

மனிதன் தன் அந்திய காலத்தில் துறவு பூண்டு வாழ்தல் மிகவும் நன்று என்ற வாக்கியத்தில் அந்தியம் என்ற சொல் காணலாம்.   தன் கடைசிக் காலத்தில் என்று இதற்குப் பொருள்..

இந்தச் சொல்லில் அண் என்ற தொடக்கப் பகவு உள்ளது.  அண் என்றால் நெருங்கிய(து என்று பொருள்.. எதற்கு நெருங்கியது என்னில்,  முடிவை நெருங்கிய காலத்தை என்று கூறலாம்.  அந்தம் என்ற சொல்லும் இதனுடன் உறவுள்ள் சொல்தான்,

அண், அண்மை, அணித்தான, அண்டுதல், அண்முதல் என்ற பல சொற்கள் உள்ளன.  அண்+ து+ இ + அம் > அண்தியம் என்றாகும்.  து  இ என்பன இடைநிலைகள். அம் என்பது இறுதி அல்லது விகுதி.

சொல்லாக்கப் புணர்ச்சியில் அண்தியம் என்பது அந்தியம் என்றே அமைவுறும்.

அண்தியம் என்பது அண்டியம் என்று உரைநடையில் நிலைமொழி வருமொழிகள் போல புணர்க்கப்படா.

அறிக மகிழ

மெய்ப்பு பின்னர்

பகிர்வு 

சனி, 24 மே, 2025

பஞ்சமி பாணர்கள்

 பஞ்சமி என்ற சொல்லைப் பார்க்கலாம்.

அம்மன் பற்றிய வரலாறு அறிய எழுங்காலை அவள் ஐந்தாம் வகுப்பினள் என்பது சாதிகள் பற்றிய கருத்து  வேரூன்றி விட்டபின் வெளிப்பட்ட விளக்கமாகும்.சாதிக் கருத்துக்கு இது ஒளி தருவதுபோல் தோன்றினாலும் இது  வரலாற்றுக்கு  இயைந்தது   அன்று. இதற்குக் காரணி யாதெனின் பஞ்சமி என்னும் சொல் சாதிகள் ஆளுமை பெறுமுன் அமைந்த தாகத் தெரிகிறது.

பண்கள் அமைததுப் பாடுகிறவர்கள் "பண் சமைப்பவர்கள். " சம்> சமை என்பதே சொல்லமைப்பு ஆதலின்  சம் > சமி என்னும் வடிவம் உணரற் பாலதாகிறது. இதற்கு " அமைப்பவள் " என்று பொருளுரை பகர்தல் ஆய்வறிவு ஆகும்.

பண் சமி என்பதே பஞ்சமி ஆயிற்று. பிற்காலத்தோர் இதை ஐந்தாம் வகுப்பினள் என்றது அவர்கள் கொண்ட கருத்து  ஆகும் . கருத்துக்கள் காலத்திற்கு ஏற்ப மாறுபவை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்ந்து படிக்க.


ப்