திங்கள், 30 மே, 2022

நனைவொச்சித்திரம்

 ஒரு தாளில் சில துளிகள் தண்ணீர் பட்டுவிட்டால்,  பட்டவிடம் சற்று இருளுடையதுபோல் தோன்றும்.  இவ்வாறு வண்ணம் வேறுபட்டதுபோல் தோன்றும் சித்திரத்தை " நனைவொச்சித்திரம்"  என்னலாம். கீழிருக்கும் படத்தில் இத்தகு சித்திரம் ஒன்றுள்ளது.

நனைவு  - நனைந்துவிட்ட இடம்போலும் நிலை.

ஒ  -  ஒத்த.

சித்திரம் -ஓவியம்.

=  நனைவொச்சித்திரம்.


மென்கரை ஓவியம்  எனில் மனநிறைவு தருமா?


படத்தில் பாருங்கள்:





ஒ + சித்திரம் >  ஒச்சித்திரம் என்று வந்தது,  நனைவு ஒச்சித்திரம் என்பதில்.
இதுபோல் புணர்த்தப்பட்ட இன்னொரு சொல்:  ஒ+தாழிசை >  ஒத்தாழிசை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

ஒரு தட்டச்சுப்பிறழ்வு திருத்தம்: 30.5.2022

சனி, 28 மே, 2022

அலைபேசியுடன் நீங்காத உறவு (த் -ல் போலி)

ஆசிரியப்பா 

அலைபே    சியுடன்  அலைந்தனை கடல்போல்!

 அலைந்தே  அகத்தினுள்  அடங்கினை உறக்கம்

கலந்தாய்  ஆங்கது களைந்தே,

ஒலுங்குதல் இயலாய் நிலங்கெழு  மாந்தனே.


கடல் அலை ஓயாமை போல மனிதனும் ஓயாமல் அலைபேசி என்னும் கைப்பேசியுடன் நீங்காது அலைகின்றான். படுக்கைக்குப் போகும்போது  அதை அப்பால் வைத்துவிட்டு ஒதுங்கி ( ஒலுங்குதல்) இருக்க, நிலத்தை வெற்றிகொண்ட மனிதனால் இயலவில்லை.


இதை விளக்கும் படம்:



இரண்டு அலைபேசிகள் உள்ளன.

உங்கள் அலைபேசியை நீங்கவேண்டுமென்பதில்லை.  அது இணைபிரியாத நண்பனாகிவிட்டது.  நீங்கமுடியாது என்பதுதான். செய்தித்தொடர்பு,  உறவினர் தொடர்பு முன்மை பெற்றுவிட்டன என்பதுதான்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

உங்கள் ஆய்வுக்கு:

சில உலக மொழிகளில் த் வருவதற்கு மாற்றாகச் சொல்லில் ல்  வரும்.  அத்தகைய மொழிகளில் ல் - த போலி.  தமிழில் அப்படி வருமா என்று நீங்கள் கேட்கலாம். ஒலுங்கு > ஒதுங்கு என்பதில் வருகிறது. இந்த மொழிகளிலிருந்து சில சொற்களை எடுத்து ஒப்பாய்வு செய்து ஒலுங்கு> ஒதுங்கு என்பதுபோல எடுத்துக்காட்டுக.





வெள்ளி, 27 மே, 2022

தென்றல் வந்த இனிமை.

 கீழைத் தென் கடல் வெம்மையில் வானேறி

ஆழ நீர்ப்பரப்பு  அத்தனையும் மேல்தாண்டி

சூழும்  பச்சையில்  தானடைந்த தண்மையில்

தாழத் தென்றலாய்த்  தந்தனைநீ இன்னருளே.


சிங்கைத் தீவிற்கு தென்றல்  வந்தது.  இது தென்சீனக் கடலில் உருவாகி  (கீழைத் தென் கடல்)    இடையில் இந்தோனேசியாவின் தீவுகளுக்கிடையில் உள்ள நீர்ப்பாரப்புகளையும் மேலாகக் கடந்து   ஊர்ந்து   பச்சைக் காடுகளைத் தாண்டுகையில் தண்மை பெற்றுக் கீழிறங்கித் தென்றலாகி,   நமக்கு அருள் புரிகிறது. 

இது எம் கற்பனை.  நிலநூல் கற்ற நம் வருகையாளர் ஒப்புரையோ எதிருரையோ கருத்தாக எழுதுங்கள்.  You may comment if it pleases you. Thank you.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.