செவ்வாய், 15 செப்டம்பர், 2026

தகவல்

 தக அகவல் என்பதே  குறுகித்  தகவல் ஆயிற்று.. அகவுதல் என்பதனடியாகப் பிறந்த சொல்,  தமிழ்ச் செய்யுளாகிய அகவற்பா என்பதிலும் இதன் பயன்பாட்டைக் காணலாம்.

கல்யாணமோ கருமாதியோ தக்கபடி சொல்லி அழைக்கவேண்டும் என்பது பண்டைத் தமிழர் பண்பாடு ஆகும்.

இது கவிஞர் தக்கபடி அழைக்கவில்லை என்பதைக் குறிக்க,  ''தக அகவல்'' இல்லை அதனால் போகவில்லை என்று சொல்வதிலிருந்து ஏற்பட்டுப்  பின்னர் இந்தி, அரபியிலும் பரவிற்று.  அழைத்தலும் அகவல் ஆகும்.

இப்போது இதன் பொருள் பெறப்பட்ட அல்லது அனுப்பிய செய்தி என்பதே ஆகும்.

இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்கது. பல்பிறப்பி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

தாமதம் என்பது. மற்ற ஒருபொருட்சொற்களும்.

 ஒவ்வொரு நிகழ்விலும்,  எதை எப்போது எதிர்பார்க்க வேண்டுமென்ற ஒரு திட்டக்குறி தானே எழுகிறது..  ஒரு தாலிகட்டுக் கல்யாணத்தில்  என்ன என்ன வாத்தியங்கள் இசைக்கப்பட்டாலும் வேறு ஏதேது நடைபெற்றாலும்  தாலிகட்டும் நேரத்தில் அது காணாமற் போய் மீண்டும் கண்டெடுக்கப்பட்டுக் கட்டப்படுகிறது என்றால் அதைத் '' தாமதம்'' என்று சொல்கிறோம். சிலப்பொழுது நடத்துநர் அல்லது சோதிடர் குறித்த நேரம், தவறிவிட்டமையால், அது தாமதமாயிற்று என்ப.

இதைக் காலந்தாழ்த்தல், நேரத்தளர்வு என்றும் கூறலாம்..

அட்டி என்பது:  இது அடு+ இ எனல் தான்.  இதன் பொருள்:  அடுத்து இடுதல். இப்போது செயல்தக்க தொன்றை,  அடுத்த காலத்துக்கு அல்லது இடத்திற்கு வைத்துக்கொள்வது   .  இதன் பொருள்: தெளிவாக அமைந்துள்ளது. டகரம் இரட்டித்தது என்பர். இது யாதெனின்,  அ+ ட்+ ட்+ இ > அ-ட்+டி  என இரட்டித்தல் காண்பீர்.

அப்பியந்தம்  என்ற சொல்லைப் பயன்படுத்துவார் இன்று குறைவு. இது அ+பின்+ அண்+ து+ அம் என்பதுவே.  அ+ பி( ன்)+(ய*)+ அண்+ து + அம்>  அப்பியண்தம் > அப்பியந்தம்  ஆகும். இதுவும் நல்ல புனைசொல் தான்;  அதற்குப் பின் அடுத்து வந்து அமைவது  என்பது பொருள். இது அப்பியந்தரம் என்றும் வரும்.  அ+ பின்+ அண்+ தரு + அம் > அப்பியந்தரம் என்றாகும். இங்குப் பின் என்பதில் னகரம் மறைந்தது. இது எடுபடாவிடாவிடின் சொல்லழகு குன்றும்.  ''பினண்த'' என்று வருதலில் அழகில்லை.

வேகக் குறைவினால் தாமதம் ஏற்படுகிறது.  எனவே  '' அவேகம்''  என்பது வேகக்குறைவு அல்லது வேகமின்மை என்று பொருள்பட்டு, பயன்படுத்துவாரின் உரைதிறத்தால்  தாமதம் என்றே பொருள்தர வல்ல சொல்லுமாகலாம்.

தாமதம் என்பது,  தாழும் + அது + அம் என்ற சொற்றொடரில்,  ழு வை எடுத்துவிட்டால்,  தாம்+ அது+ அம் ஆகி,  தாமதம் எனவரும்.  தமிழ்ப்புனைவு ஆகும்.  சம ஒலி மொழியாகிய சமஸ்கிருதத்துக்கும் உரியது. காலம் தாழும் அதுதான் தாமதம். இத்தமிழ்ச்சொல்லை , சமஸ்கிருதமும் பயன்படுத்தியது நம் கொடைப்பெருமை என்றாலும் உள்ளூர் மொழியாகும் அதுவும்,

ஒரு மொழி என்றால் -  கடன்வாங்குவது அப்புறம் பார்க்கலாம்,  போதுமான சொற்கள் வேண்டுமே,  இப்படிப் படைத்து அளித்தவர்களுக்குப் பின் தோன்றல்கள் என்ற முறையில்  நாம் நன்றியுடன் இருப்போம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வெள்ளி, 11 செப்டம்பர், 2026

பாண்டியர் என்னும் சொல்

 பாண்டியர் என்ற சொல், வரலாற்று ஆசிரியர் பலரால் விளக்கப்பட்ட சொல்லாகும்.  பாண்டிய அரசுகள்,   தொன்றுதொட்டுத் தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த  மிகப்பழைய அரசுகளைக் குறிப்பதாகும்.

இங்கு யாம் வரலாற்று ஆய்வு எதிலும் ஈடுபடவில்லை.  தனித்தனிச் சொற்களும் அவற்றுக்கான அடிச்சொற்களும் ஆகியனவற்றைக் கொண்டு சொல்லாக்கம் அறிந்து பொருளைத் தெரிவித்தலையே செய்துவருகின்றோம்.

பண்டு என்ற சொல்லே பாண்டி, பாண்டியன் என்று அமைந்தது என்ற சொல்லமைப்பு விளக்கமும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.   இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்,  அவர்கள் ஆளத்தொடங்கிய முதற்காலத்தில் அவர்கள் புதியவர்களாகவே இருந்தமையால்,   இந்தப் பண்டு என்ற சொல்லடியாக அவர்களின் மன்னர்குலத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது என்று கொள்வது பொருத்தமான கருத்தாகாது. அவர்கள் பழையவர்கள் என்ற அடைமொழி பெறுமுன் எவ்வாறு குறிக்கப்பெற்றனர் என்று அறிதல் அறிவுடைமை ஆகும். இதே சொல்லில் அறியப்பட் டிருந்தனராயின் ஏன் அவ்வாறு அறியப்பட்டனர் என்று கேட்டல் வேண்டற்பால தொன்றே  ஆகும்.  தொடக்க காலத்துக்கு ஏகுவோமாயின் ஏன் பாண்டியர் என அறியப்பட்டனர் என்பது சிறப்பான கேள்வியாகும்.

அவ்வரசுமுறை, தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டனர் என்பதற்கு ஆய்வு செய்ய உதவும் நூல்கள் ஏதும் இப்போது எமக்குக் கிடைக்கவில்லை..

  பாரதக்கதையில் வரும் பாண்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதற்கும் உதவும் நூல்கள் யாவையும் எம்மிடம் இல.

திரௌபதையின் தொடர்பாகவும் எதுவும் கைகளை எட்டவில்லை.

ஓரிரு சொற்களைக் கொண்டே ஆரியர் வந்தனனர் என்று சரித்திரம் வரைந்த வெள்ளைக்காரன் போலவே, நாமும் செல்லவேண்டியுள்ளது.

இனிப், பண்டை நாட்களில் பாண் என்ற சொல்லடியாக,  பாணினி என்ற இலக்கண ஆசிரியன் பாண வகுப்பினன் என்று சொன்னது சரி என்றே கருதலாம்.   பாணர்ஜீ என்ற வகுப்பினரும் பாணர் வகுப்பினர் என்பதும் சரியென்றே  ஆகும்.  பாண அரசிகளில் மிக்கச் சிறப்புடையவர் பாண்சாலி> பாஞ்சாலி ( அம்மன்)  என்ற ஆய்வும் ஏற்புக்குரியதே  ஆகும்.   அந்தக் காலங்களில் பாணர்கள் மிக்கிருந்தனர்.  தமிழிலக்கியமும் பாணர்கள் பற்றிய குறிப்புகள் மிக்குடையது ஆகும்.  மாதிரியைக் குறிக்கும் பாணி என்ற சொல்லும் தொடர்புடைமை காட்டவல்லது. அம்பணம் என்பது ஒரு வாத்தியக் கருவி.  பண்> பணம்.  பண்> பாண்> பாணர்.  பாண்டவருள் தவமியற்றியோர் பாண்டவர்  ( பாண்+ தவர்>  பாண்டவர்).  பாணர் என்ற சொல் ஆணர் என்றும் திரியக்கூடியது. அல்லது ஆள்+நர் >  ஆணரும் ஆகலாம்.  பாணருள் ஒரு வகையோர் கண்டியர் எனப்பட்டனர்.  இவர்களும் பாடுவோரே.  கண்ணிகள் என்பவை சிறிய பாடல்வகை.

பாணர்கள் அரசாண்டுள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்று உள்ளது.

நீங்கள் ஆய்வு தொடரலாம்.


அறிக மகிழ்வு

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை.