சனி, 26 அக்டோபர், 2024

அரக்கன் நன்னாரி வேர் மற்றும் சரசபரில்லா ( சாசி )

 அரக்கன் என்னும் ஆண்பாற் சொல்,  இச்சொல் அன் நீக்கி அம் விகுதியைப் பெற்ற நியையில்  அரக்கம் என்று வரும்.  அரக்கம் என்பதற்கு அரத்தம் ( ரத்தம்) என்றும் பொருள்.  இச்சொல்லில் தகரத்திற்குக் ககரம் வந்துற்றது.

க, ச , த என்பன ஒன்றுக்கு இன்னொன்று மாற்றீடாக வருதலுண்டு.

சகரத்துக்குக் ககரம் வரும் என்பதால்,  அரசன் என்பதற்கு  அரக்கன் என்றும் வரும். இங்கு ககரம் இரட்டித்தது. இது பொருளிலும் திரிந்து,  அரசனின் நிலைக்குத் தாழ்ந்த குணங்கள் உள்ள ஆட்சியாளனைக் குறிக்கும்.  இராவணனை அரக்கன் என்றபடியால் தாழ்குண அரசன் என்பது பெறப்பட்டது.

இச்சொல்லில்  அரச என்பது  சகர முதலாய் சரச என்று திரியும் என்பது திரிபுநெறி.  ஆதலினால் அரச என்பதே சரச ஆயிற்று. ஆனால் சரச என்பது முள் என்று அரபியில் பொருள்படும் ஆதலின் அங்கிருந்து வந்திருக்கலாம் என்று ஐரோப்பிய ஆய்வாளர் கருதினர். ஆனால் நன்னாரி வேருக்கு அரக்கம் என்றும் தமிழில் பெயரிருப்பதால் இது தமிழிலிருந்து சென்ற சொல்லாக இருக்கும் என்பதே உண்மை. இதற்குக் காரணம் நன்னாரி தமிழ்நாட்டில் கிட்டுவது. தென் கிழக்காசியாவில் அரசி என்பது சரசி, சாசி என்று திரிந்து வழங்குகிறது. அகரம் சகரமாகும்,  எடுத்துக்காட்டு:  அமணர் - சமணர்.

அரக்கம் என்பதே சரக்கம், சரசம் என்று திரிபு எய்திற்று.

பரில்லா என்பது பர - பரவும்,  இல்(லா) - கொடி. கொடியிடம்.  பர இல் - இடத்தில் பரவுவது என்பது. பாஸ்கு மொழியில் உள்ள பரில்லா என்பது தமிழில் உள்ள பர இல் என்பதுதான்.  இடத்தில் பரவுவது.

சாசி என்ற தமிழ்மூலம் மறைக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. தமிழ் அறியாதார் செய்த ஆராய்ச்சி.

அரக்கன்> அரச்சன்>  ரச்சசன்> ராட்சசன் என்பதும் அறிக. சகர ககரப் போலி.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்

வியாழன், 24 அக்டோபர், 2024

கவிராயர் என்ற சொல்.

 கவிராயர் என்ற சொல் இப்போது மக்களிடையே வழக்கிலில்லை.

இன்றைய வழக்கு அல்லது சொற்பயன்பாடு,  கவியரசர் என்பதுதான்.  பாவேந்தரென்றும் கூறுவர்.  கவி, பா என்பன ஒருபொருட் சொற்கள்.

கம்பர் என்னும் கவிஞர்:  இவர் இராமாயணத்தைத் தமிழில் பாடினார்.  வால்மிகி என்பவர்தாம் இராமயணத்தைப் பூசைமொழியில் ( சமஸ்கிருதத்தில்) பாடினார். இவர் வால்மிகியை " நாவினார்" என்றார்.

தேவ பாடையின் இக்கதை செய்தவர்

மூவ ரானவர் தம்முளும் முந்திய

நாவினார்"

என்றார்.  நாவினார் என்பதற்கு உண்மையில் நாவலர் என்று பொருள்கொள்ளவேண்டும்.  வெறுமனே "நாவை உடையவர்"  என்று மட்டும் கூறுதல்  முட்டாள்தனமாகும்.  திறனுடன் பாடும் நாவை உடையவர்" என்றால் சரியாக இருக்கும். வல்ல நாவினார் என்பதும் நாவலர் என்பதும் ஒன்றே.

பாடல் வல்ல நாவினாரைத் தாம் நாம் கவியரசர் என் கின்றோம்.

ஓர் இருநூறு ஆண்டுகளின் முன்னர் வாழ்ந்த தமிழ்ப்பெருங்கவிகள்  கவிராயர் எனப்பட்டனர்.  இது கவியரசர் என்பதே.

அரசர் என்ற சொல் அரையர் என்றும் வரும்.  அரையர் என்பது திரிபு அல்லது போலி.

அரையர் -  இது ராயர் என்று பேச்சில் திரிந்து வழங்கும்.

இந்தத் திரிபுச் சொல் சமஸ்கிருதத்திலும் வழங்கிற்று.

பலருக்கு ரை என்பது வருவதில்லை.  ராய், ராயர் என்றுதான் வரும்.  யகரத்துக்குப் பதில் வகரமும் வரும். அவ்வாறு வரும்போது ராவ் என்று மெய்யெழுத்தாக முடியும்.

சில நிலப்பகுதிகளில் இந்த ராவ்களை 'ராவ் அது" என்று பணிவுடன் சொன்னார்கள். ராவ் அது  ( அவர் ராவ் அல்லது அரசர் அல்லது அதிகாரி)  என்பது ராவ் அது > ராவது > ராவத் என்று ஆனது. ராவது என்பதில் ராவத் உ என்று உ இறுதியில் ஒலிக்கிறது,  ஆனால் து என்று சேர்ந்து ஒலிக்கிறது.

ராய் அல்லது ராவ் என்பது இலத்தீன் மொழியில் ரெக்ஸ் என்று திரியும்.  ரெக்ஸ் என்போன் அரசன்.  பெண்பால் ரெஜினா.

இதை யாம் பிறர் எழுதிய நூல்களில் பார்க்கவில்லை.  நூலை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். ஆனால் பகர்ப்பு அல்லது காப்பி செய்யக்கூடாது, அனுமதி இல்லாமல்.

கவிராயர் என்பது கவி+ ராய் + அர்.  இதிலும் ராய் இருக்கிறது.

திரிபுகளை உணருமுன் இறந்துவிட்டவர்கள் பலர். கோவிட்டில் பலர் இறந்தனர். பாவம்.

இலக்கணம் உணர்ந்தோர் அறிக.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்,

செவ்வாய், 22 அக்டோபர், 2024

அன்> சன்> சனி-- ஜன்னி என்பவற்றில் சொல்பொருள் வலிமை

 இன்று ஜன்னி என்ற சொல்லை ஆராய்வோம்.  வெடுவெடுவென்று உடல் விறைத்து, நடுநடு வென நடுங்கி கால்கை உதறி உடலம் உறைந்து காய்ச்சல் வருவது தான் ஜன்னி என்பர்.  ஜன் என்பதன் அடிச்சொல்லாக ஜனி-த்தல் என்ற சொல்லை ஆசிரியர் சிலர் கூறுவர். ஜன்னி என்றால் நிமோனியா என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்புறும் பிணி என்றும் கூறப்படுகிறது.

நுரையீரலின் ஒரு பகுதியிலோ இருபகுதிகளிலுமோ இருக்கும் காற்றுச்  சிற்பைகளில் ( sacs)  நீர் அல்லது சீழ் ஏற்பட்டு மூச்சு விடுதலைக் கடினமாக்கிச் . சளி அல்லது சீழால் இடைமறித்து , காய்ச்சல், குளிர்நடுக்கம்,  இருமல் , இழுப்பு, திணறல் முதலியன உண்டாக்கித் தொல்லைப்படுத்தும் நோய்தான் நிமோனியா என்னும் ஜன்னி என்று கூறப்படுகிறது.  சிலர் இத்தகைய நோயால் இறந்தோரைச் சனிபிறந்து இறந்தனர் என்று கூறுவதால்   சனி என்பதும் சன்னி என்பதும் மேலும் ஜன்னி என்பதும் குறிப்பில் ஒன்றையே கொண்டுள்ளன என்று தெளிகிறது. சனி பிறந்து என்று குறிப்பதால் இது உடலில் நோய் நுண்மிகளால் உண்டாவது அல்லது உண்டாக்கப் படுவது என்றுஅறிகிறோம். "உடன்பிறந்தே கொல்லும் வியாதி" என்றனள் நம் ஒளவைப் பாட்டி.  பிறப்பது என்ற வழக்கினால் ஜனித்தல் என்னும் தோன்றுதல் குறிப்பினால்,  பிறத்தல் மற்றும் ஜனித்தல் பொருளொற்றுமை உடைய கருத்தொருமைச் சொற்கள் என்று தெரிகிறது, நோய் நுட்பங்கள் எனல் நமக்குச் சொல்நுட்பங்களினோடு ஒப்பிடக் கருத்தியலில் முன்மை பெறா என்பன இங்கு உண்மையாகும்.  எந்தச் சொல் எந்த நோயைக் குறிக்கிறதென்பதே முதன்மை. நோயின் அறிகுறிகள் அதற்கடுத்த கவனத்தையே பெறுவதாகும்.,

இனி நோயின் பெயரால் தமிழர் அல்லது இந்தியர் அல்லது  ஏனையோர் நோயின் தன்மையை உணர்ந்து பெயர் வைத்தனரா என்று பார்ப்போம்.  சனி என்ற சொல்,  அன் > சன் > ஜன் ஆகிய அடிகளிலிருந்து வருவதாகும்.  அன் என்பது அண் என்பதன் திரிபு என்பதை முன்னரே உணர்த்தியுள்ளோம்.  இதை வேறு யாரும் கண்டுபிடித்துள்ளனரா என்று அறிய இயலவில்லை. வெளியீடுகளில் அறிய இயலவில்லை.  மற்றவன் ஆராய்ச்சி வெளியீட்டைத் தேடிக்கொண்டிருப்பது எம் வேலை அன்று. இவை யாம் ஆய்ந்துணர்ந்தவை. எப்படி என்பது இங்கு வெளியிடவில்லை. அன் என்பது அடுத்துச் செல்லுதல் பொருட்டாதலின்  இந்த நோய் நோயாளியை உடலின் புறத்ததாய்த் தாக்குகிறது  என்று தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தெளிவாகிறது. நோயாளியை நோய் அண்மிச்சென்று தாக்குகிறது.  நுண்மிகள் நோய்தர அடுத்தே (அண்மிநின்றே) தாக்குகின்றன.  ஆகவே தமிழர்களின் பேரறிவை இது நன்கு எடுத்துக்காட்டுகிறது. இது சொல்லில் உள்ள பொருளென்பதை யாம் இங்கு  வெளியிடுவோமாயினோம். பிறர் கூறுவதில் வேற்றுமை காணின் இவண் பின்னூட்டம் செய்க.

அன் > சன் > சனி.   நோயாளியை அடுத்துச்சென்று உடலின் உள்ளில் இருந்தாவது வெளியிலிருந்தாவது தாக்கும் ஒரு நோய் என்றுதான் வரையறை செய்யவேண்டும்,  இது சொற்பொருள் வரையறவு ஆகும், சொற்பொருள் வரையறவு என்றால் நோயினுக்குப் பெயரிடுங்கால் கொண்ட வரையறவு. நோயின் ஆய்வு பெயர்வைத்த பின்னும் தொடரும். தொடர்கையில் புதியனவும் புலப்படும். அவை பெயரில் அடங்காத் தன்மைத்தாய் விரிந்துறுமென் றறிக.

ஆகவே நுண்மிகள் நோயைப் பிறப்பிக்கின்றன.

சனி பிறந்தது என்ற மக்கள் வருணனை சரியானதாகும்.

ஆகவே  சனி> ஜனி> ஜன்னி என்பதில் ஜன் என்ற பிறப்புக் குறிபொருளும் சரியானதே  ஆகும்.

ஜன் என்பது பிறப்பும்  குழந்தை என்பது தாயை அடுத்து வரலும் ஆதலினது முரணுடையதன்று எனலும் பெறப்படும்.

தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பொருளொருமை தெளிவாக உள்ளது. நுண்மிகள் அல்லது கிருமிகள் நோயைப் பிறப்பிக்கின்றன. அதாவது உண்டாக்கின என்பதே உண்மை.

வியாதி என்ற சொல் விய (ஆகு)தி என்று பிரிந்து விரிவாகுவது என்று பொருள்படும்.  கோவிட்டுக்கு முன்பாகவே வியன்பட்ட நோய் வந்து பலர் இறந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் வியாதி என்ற சொல் வரக் காரணம் இல்லை. இச்சொல் பற்றி இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2019/06/blog-post_22.html

இதுவுமது: https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_14.html  ( வியாதி. வியாபாரம்)

கரம் மூலம் https://sivamaalaa.blogspot.com/2020/12/blog-post_12.html

இக்கருத்துகள் இந்திய மொழி வளர்ச்சியில் காணப்படுபவை ஆகும்,

சமஸ்கிருதம் ஒட்டிச் செல்லுகின்றது,


அறிக மகிழ்க'

மெய்ப்பு பின்