1. இருவர் நண்பர்களாய் இருந்தனர். ஓர் உடையாடலின்போது இருவரிடையேயும் ஒரு சண்டை வந்துவிட்டது.
இருவரிடையிலும் ஒன்று நிகழ்ந்தது.
2. ஒரு நீளுருண்டையில் எரிவாயு அடைத்து வைத்திருந்தார்கள். அதில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுவிட்டது.
இரு பொருள்களிடையிலும் ஒன்று நிகழ்ந்தது.
இந்நிகழ்வுகளைச் "சம்பவித்தன" என்பர்.
சம்பவித்தல் வந்த விதம்:
தம் - இரு பொருள்.
பு - விகுதி.
அ - அங்கு.
இ - வினைச்சொல்லாக்க விகுதி.
பு அ வி > பவி. பவித்தல். இது பவித்தல் என்னும் சொல் அமைந்த விதத்தைக் காட்டுகிறது.
தம்பவித்தல் > சம்பவித்தல். இது த - ச திரிபு.
தகரம் சகரமாகும்.
தாமே அல்லது தானே உண்டாகும் நிகழ்வு. அல்லது இரு பொருள் சேர்ந்து உண்டாகும் நிகழ்வு, அல்லது ஒருபொருளில் உண்டாகுவது.
தம் என்பதன்றி தன் என்பதாலும் இவ்வாறு சொல் அமையும்;
தன்புஅ இ > தன்பவி> சம்பவி என்றுமாகும்.
மூலச் சொற்கள் அனைத்தும் தமிழே.
சமஸ்கிருதம் என்பது சம ஒலிப்பு உடையது என்று சொன்னோம். மேலுள்ளவற்றின்மூலம் இது மெய்ப்பிக்கப்பட்டது.
பாடித் திரிந்த பாணர்கள் இவ்வாறு சொற்களில் புதுமை புகுத்தினர்.
சம்பவம் என்பதை சம்பவ் என்று குறுக்கிவிடலாம். இதில் கருதத்தக்க புதுமை ஒன்றில்லை. நீட்டலும் குறுக்கலும் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.
தம் தன் என்பன சம் என்பதன் அடிச்சொற்கள்.
இவற்றால் பூசை மொழி நன்றாகவே வளர்ந்து நிறைவடைந்தது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.