புத்தன்:
புத்தர் உலகிற் புதுநெறியைக் கண்டுபிடித்தவர்.
புது+ அர் > புத்தர். (தகரம் இரட்டிப்பு)
பூ - தோன்றுதல். (மூலச்சொல்.)
பு>புகு >புது. ( புதியன புகுதல்)
மக்கள் அழைத்தது - சாக்கியமுனி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
புத்தன்:
புத்தர் உலகிற் புதுநெறியைக் கண்டுபிடித்தவர்.
புது+ அர் > புத்தர். (தகரம் இரட்டிப்பு)
பூ - தோன்றுதல். (மூலச்சொல்.)
பு>புகு >புது. ( புதியன புகுதல்)
மக்கள் அழைத்தது - சாக்கியமுனி.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
அடுத்தடுத்த நாடுகளுக்கு அடிவருடி ஆகாமல்
எடுத்தகரு மம்எதுவும் இனிதாகத் தான்செய்யும்
மோடிஎனும் செயல்வீரர் முனைந்திட்ட .மூதறிஞர்
தேடித்திரிந் தலைந்தாலும் தேசமிதில் கிட்டாதார்
நல்லவேலை செய்பவரை இல்லிற்குள் அனுப்பென்றே
சொல்லுவதும் ஏதுக்கோ சூழ்ந்துவிடை காணோம்நாம்..
தாம்நலமே செய்வதற்கே தலையெழுத்துச் சரியில்லார்
நாம்நலமே பெறுங்காலை ஏன் அவரைத் துரத்துகிறார்.
அவரிருந்து பலகாலம் அனைத்துமக்க ளும்உயர
இவர்வழியே விடவேண்டும் தடைசெய்தல் தக்கதன்றே
மக்கள்நாட்டம் நாட்டினேற்றம் முக்கால மும்சிறக்க
ஒக்க அவர் இருந்தாலே உலகுமிகப் பயன்பெறுமே..
தம்நிலையைத் தாமறிந்து தம்வசதி செல்வநிலை
இம்மண்ணோர் இருப்புநிலை எதிர்காலம் ஆறு பேறு
எல்லாமும் கணித்தறிந்து சொல்லாடும் சூழ்திறனே
நல்லாராய் எடுபடுவார் நாடோறும் செல்திசையே
இல்லாதார் சிந்தித்தல் இல்லாமல் இல்லிற்செல்
சொல்விடையோ மட்டமான வல்வழிச்சொல் ஐயமிலை
வாரிசுகள் யாருமிலார் எண்மலராய் நாடெண்ணி
ஓருயிராய் ஒடுங்கியவர் மாமுனிவர் மோடி இவர்.
பிள்ளையில்லை குட்டியில்லை அள்ளுபெருஞ் செல்வமிலை
தாயிழந்தும் ஓய்ந்துவிடார் ஆயும்மக்கள் மேலெனவே
தேசமொன்று குறிக்கோளாய் வாசமலர் வாழ்வார்ந்தார்
ஏசலறியா மோடி இரும்பொறையை வாழ்த்துகவே.
தக்கதன்றே - தக்கதல்ல.
பெறும்காலை - பெறுகின்ற காலத்தில்
இவர் வழியே விட - எதிர்ப்பவர்கள் தடுக்காமல் இருக்க
உயர - முன்னேற்றமடைய
மக்கள் நாட்டம் - மக்களுக்கு வேண்டியவை
நாட்டினேற்றம் - நாடு செப்பனிடப்பட்ட முன்னேற்றம்
ஒக்க - நாட்டினருடன்
எண்மலர்:
கொல்லாமை, ஐம்பொறி யடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு.ஆகிய எட்டு மலர்கள்.பழைய இடுகை ஒன்றில் பதம் என்ற சொல்லும் எவ்விதம் அமைந்தது என்பதற்கு விளக்கம் எழுதியுள்ளோம். ஒவ்வொரு வழக்கிலுள்ள தமிழ்ச்சொல்லிலும் பொருண்மை பதிவுற்று உள்ளது. பதிவுற்று நிற்பதுதான் பதம் என்னும் சொல். பது, பதி என்பவை பதிந்துள்ளமை என்று பொருள்தரும். சற்றுக் குழம்புபோல் உள்ள பரப்பில் கெட்டியான ஒரு பொருள் நல்லபடி பதிந்துவிடுகிறது. ஒரு பெண்ணாதிக்கக் குடும்பத்தில் அப்பெண்ணை மணந்துகொள்ளும் ஆண்மகன் திருமணத்தின்பின் தன்னைப் பதிந்துகொள்ளுகின்றான். பண்டைக் காலத்தில் எழுத்துமுறையிலான பதிவுகள் இல்லை. மனத்திலே பதிந்துகொள்ளும் முறையே இருந்தது. ஆகையினால் அவன் "பதி" எனப்பட்டான்
இதை மேலும் இங்கு விளக்கியுள்ளோம். சொடுக்கி வாயித்து (வாசித்து)க் கொள்ளுங்கள். வாயினால் வெளிப்படுத்துவதுதான் வாயித்தல். யி பின் சி ஆகும்.
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html
சுழுத்தி , சுழுமுனை நாடி என்பனவும் இங்கு விளக்கப்பட்டுள்ளன.
https://sivamaalaa.blogspot.com/2021/03/blog-post_15.html
சமானம் என்பது தமிழிலும் சங்கதத்திலும் (= சமஸ்கிருதத்திலும்) உள்ள தற்சமச் சொல்.
இதைப் பாணினி என்ற பாணப் புலவன் சொன்ன படி பிரிக்காமல் தமிழ்வழியில் பிரித்தறிவோம்.
சமம் + ஆன + அம் > சம + ஆன + அம் > சமானம்.
சமானம் என்பதை ஸமானம் என்று முன்னர் எழுதினர்.
இதை:
சமம் + அன் + அம் > சம + அன் + அம் > சமானம் என்றும் பிரிக்கலாம்.
அன் என்பது அன்ன என்ற உவம உருபு அன் என்று குறுகி இடைநிலையாக நின்றதாகும். " சமமான அதுபோலும் அமைந்தது " என்று இது வாக்கியமாகிப் பொருள் பயக்கும்.
சம என்பதில் இறுதி அகரமும் அன் என்பதன் முதலான அகரமும் இணைய:
அ + அ > ஆ என்பது ஒலியியல் முறையில் சரியானதே,
அ அ என்பதைத் தட்டச்சுச் செய்தால் ஆ ஆகிவிடும். அறிக.
விடுதலை விடுதலை என்ற பாரதியார் பாட்டில் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்ற வரியையும் படித்து அறிந்துகொள்க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.