இன்று அஸ்தினாபுரம் என்ற சொல்லைக் கவனிப்போம்.
இந்த அஸ்தினாபுரம் என்னும் சொல். தமிழில் பழைய நூலாகிய சீவக சிந்தாமணியிலே உரையாசிரியர் வழியாக நாம் எதிர்கொள்கிறோம். வேறு பிற்கால நூல்களில் உள்ளது என்பதும் ஏற்கத்தக்கதே. இங்கெல்லாம் அஸ்தினாபுரமென்பது அத்தினாபுரம் என்றே காணப்படுகிறது. வடவொலி நீக்கி அவ்வாறு காணப்பட்டதா, அதுதான் மூலமா மூலத்தின் எதிரொலியா என்றெல்லாம் அறிந்துகொள்ள வழியேதும் இல்லை.
பாண்டவர், பாண்டு என்ற சொற்களும் கவனிக்கத்தக்கவை. இவற்றை இங்கு இடுகைப்படுத்தவில்லை.
பகு என்ற சொல் முதனிலை நீண்டு பாகு என்றாகும். இதன் சொல்லமைப்புப் பொருள் இனிப்பானது என்பதன்று. பாகுபடுத்தப்பட்டது என்பது. வழக்கில் காய்ச்சப்பட்ட பாகுகளெல்லாம் இனிமை பயந்ததனால், இச்சொல் இறுதியில் இனிமைப் பொருளதானாது. பகு என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருந்துமெனின், உணவின்போது இது தனிச்சிறப்பு உடைமையினால், ஏற்புடைத்தாயிற்று. உணவின் மிக்க இனிமையான பகுதி. பல உணவிலும் ஒரு மணிமுடியாய் இருக்கும் பகுதியுணவு. ( "பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" எனக்காண்க. ) காரண இடுகுறிப்பெயராவது இஃது. பாகு > பாகு+ தி > பாத்தி, அல்லது பாகு> பா > பாத்தி. பகுத்தியலும் வயலின் பகுதி. இங்கு கு என்னும் விகுதி மறையும். அது பாத்தி என்னும். சொல்லில் தேவையற்றதும் தடையும் ஆகும். பாகு தனியாகவும் காய்ச்சப்படுவது. பத்தி (பகுக்கப்பட்ட உரைப்பகுதி ). பகுத்தி > பத்தி. வினைச்சொல் பகு என்பதே.
இதை ஏன் கூறுகிறோம் என்றால், அத்தி, பத்தி, சத்தி, முத்தி என்பனவும் இவைபோலவன பிறவும் பாத்தியில் குகரம் மறைந்தது போல் இடைமறைவு அல்லது குறைப்பட்ட சொற்களா என்பதை ஆராய்ந்தறிவது அறிவுடைமை.
அஸ்தினாபுரம் எல்லா இனிமையும் பயக்கும் படி வடிவமைக்கப்பட்ட நகரமாகும். இந்த இனிமை அல்லது மகிழ்ச்சி ( நல்ல மதிப்பீடு) மனத்தில் தோன்றுவது ஆகும். மனம் என்பது அகம். அகம் என்பது உள் என்றும் பொருள்படும். அகத்தில் இன்பம்தரும் நகரம் அகத்தில் இன் ஆகும் ஒன்றாவது. அகத்து இன் ஆகு புரமே அகத்தினாபுரம் ஆகி, அத்தினா புரம் என்று குறுகிற்று. அந்நகரத்தினர் தென்பகுதி அரசர்கள் அல்லது தென்பகுதியிலிருந்து வடபகுதி ஓரிடம் அடைந்து ஆங்கு அரசோச்சியவர்கள்.
யானை நகரம், அஸ்தின் என்ற அரச நகரம் என்றும் முன் கூறியுள்ளனர்
இன் என்றால் இன்பம், இனிமை. தாழ்மை உடையது எதுவும் புன்மையாகும். துன்பம் என்பதொன்று.
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. குறள் 1152
இவ்வாறு திரிந்த சொற்கள் சிலவற்றைப் பழைய இடுகைகளிலும் காணலாம்.
இன்னா - துன்பம். இதுவன்று அடங்கிய சொல்
இன் ஆ புரம் > இன்பம் ஆகும் ( ஆக்கும்) நகரம்). ஆபுரம் என்பது வினைத்தொகை.
நிறைய மாடுகளும் பாலும் உள்ள நகரம் எனினும் ஆகும். ஆ - பசு. ( வீட்டுக்குப் பசுமை தருவது பசு. ) கோமாதாவினால் சிறப்புற்ற நகரம் ஒரு சிறப்பு ஆகும்.
சமஸ்கிருதம் என்பது சில வெளிநாட்டுச் சொற்கள் இருப்பதால் இந்தோ ஐரோப்பியம் ஆகிவிடாது. வெளிநாட்டு மொழி அன்று. ( வரலாற்றாசிரியர்: ரோமிலா தாப்பார்).
அறிக மகிழ்க.
மெய்ப்பு: பின்னர்.